சார், காந்தியை பற்றி தெரியும், ஆனால் ஜெயந்தியை பற்றி தெரியாது


“நான் மின்சாரத்துறையில வேலை செய்யுறேன்”

“அப்ப வேலையே இல்லைன்னு சொல்லுங்க”

*********************

வாத்தியார் : காந்தி ஜெயந்தியை பத்தி உனக்கு தெரிந்ததை சொல்லு?

மாணவன் : சார், காந்தியை பற்றி தெரியும், ஆனால் ஜெயந்தியை பற்றி தெரியாது சார்.

*********************

பையன்: எனக்கு வேலை இல்லைனு தெரிஞ்சும் எப்படி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க.. ??

பொண்ணு: பையன் என்ன பண்ணுறான்னு கேட்டாங்க, வயத்துல உதைக்குறானு சொன்னேன்... அதான்....!!!???

*********************
                                     
                                         
நான் இப்ப தினமும் வாக்கிங் போறேன்னா, அதுக்கு நம்ம டாக்டர்தான் காரணம்.

ஏன்... ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா..?

நீ வேற... முதல்ல கார்ல வந்துட்டிருந்தேன். ட்ரீட்மெண்ட்டுக்குச் செலவு செஞ்சு செஞ்சு, இப்ப நடக்கும்படி ஆயிடுச்சு!

*********************

வீட்ல ரெய்டு நடக்கற நேரத்துல தலைவர் தன்னோட மூன்றாவது
மற்றும் நான்காவது மகன்களை எங்கேயாவது போய் ஒளிஞ்சுக்க சொல்றாரே…ஏன்?

கணக்கில் வராத பிள்ளைகளாம்…!

*********************

மொபைல்ல பேசும்போது அவர் ஏன் தள்ளாடுறார்?

அவரோட போன்ல பேலன்ஸ் இல்லையாம்…!

*********************

நண்பர் : “ உங்க படத்தில, சம்பந்தமே இல்லாமே, பாட்டி ஒரு பையனுக்கு கதை சொல்ற மாதிரியான சீனை எதுக்கு சார் சேர்த்திருக்கீங்க?”

டைரக்டர்: “ படத்தில கதையே இல்லைன்னு யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க…!” ...

*********************

"உங்களுக்கு என்ன பிரச்சினை?"

"லுங்கியைப் பல்லால கவ்விக்கிட்டு பேன்ட் கழட்றப்ப கொட்டாவி வராம இருக்க என்ன செய்யணும் டாக்டர்?

*********************

வடிவேல் : "அஜித்தோட மங்காத்தா பாத்தியா...?"

பார்த்தீபன் : "அஜித்தோட பாக்கல...தனியா போய் தான் பாத்தேன்"

வடிவேல் : "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

*********************

அரசியல்வாதி : புனைப்பெயரில் பதிவுகள் எழுதலாமாம்...ஆனால் நான் பினாமி பேர்ல சொத்து எழுதி வச்சா மட்டும் குத்தமாம்!

*********************

"டாக்டர் தெரியாம.. காசை முழுங்கிட்டேன்''

"என்ன காசு? ஒரு ரூபாயா... ரெண்டு ரூபாயா... அஞ்சு ரூபாயா?''

"அதான் தெரியாம முழுங்கிட்டேன்னு சொன்னேனே டாக்டர்''

*********************

"உனக்கு ஏது 100 ரூபாய்?''"

"ஓர் இடத்தில பாடினேன். 20 ரூபாய் கொடுத்தாங்க''

மீதி 80 ரூபாய்?''"

பாடுறதை நிறுத்துறதுக்குக் கொடுத்தாங்க''

*********************

மனைவி:- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு 

கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..

கணவன்:- சொன்னேனே... மறந்துட்டியா...

மனைவி:- எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை..

கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..

மனைவி:-????????

*********************

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More