உலகின் மிகப்பெரிய இந்து கோவில்

                         உலகின் எட்டாவது அதிசயம் என புகழப்படும் அங்கோர் வாட் ஆலயம் கம்போடியா நாட்டின் அடையாளமாகவுள்ளது. கெமர் சாம்ராஜ்யத்தின் மன்னன் 2-ஆம் சூர்யவர்மனால் இந்த ஆலயம் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. திராவிட கட்டட கலையை அடிப்படையாக வைத்துக் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் பிரம்மாண்டம் காண்பவர்களை அசரவைக்கும் திறன் படைத்தது. ஏறக்குறைய இதன் வெளிச்சுவர் 1,300 மீட்டர் நீளம், 1,500 மீட்டர் அகலம் என ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.



சூரிய, சந்திர கால சுழற்சியை கருத்தில் கொண்டு இந்த கோயில் வடிவமைக்கப்பட்டதே இதன் சிறப்பம்சம் என்கிறார்கள் கட்டட மற்றும் சிற்ப கலை நிபுணர்கள். பிரமாண்டத்திற்கும், சிற்பங்களின் அழகிற்கும் பாராட்டப்படும் இந்த சுற்றுலா தலம், யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இந்த ஆலயம் 14-ஆம் நூற்றாண்டில் கம்போடியா மீது அடுத்தடுத்துத் தொடுக்கப்பட்ட போர்களால் காடுகள் சூழப்பட்டு அடையாளம் தெரியாமல் மறைந்தது.

இதனை உலகிற்கு வெளிகொண்டு வந்த பெருமை ஹென்றி மோஹாட் என்பவரையே சேரும். 1860-ஆம் ஆண்டு அவர் இதனை கண்டுப்பிடித்த பிறகே அங்கோர்வாட் ஆலயம் பொலிவு பெற்று அதன் சிறப்பம்சங்கள் வெளிவந்தன.

அங்கோர்வாட் என்றால், கோயில் நகரம் என பொருள். இந்த அங்கோர்வாட் கோயில் கம்போடியாவின் தேசிய கொடியிலும் இடம்பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய இந்து கோயிலான இதனை கட்ட 40 ஆண்டுகள் ஆனதாக கூறப்படுகிறது.

படித்ததில் பிடித்தது...

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More