Welcome to Love, Money & more ...

Love, Money and More Love, Money and More Love, Money and More Love, Money and More Love, Money and More

ஓ Jesus நடிகர் சந்திரபாபு - சில உண்மையான குறிப்புகள்

மிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவையே சாரும். அவர் உடை அணியும் அழகே தனி. புதிய நாகரிகத்தை தன்னை பார்த்து பிறர் தெரிந்துகொள்ளும்படி உடை அணிவார். சந்திரபாபுவுக்கு மிகவும் பிடித்த உடை - வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட். சட்டையின் கையை மடித்துவிட்டிருப்பது அழகாக இருக்கும். பேண்ட் பாக்கெட்டுக்கு வெளியே கர்சிப் தெரிவதுபோல் ஸ்டைலாக வைத்திருப்பார். Perfume மீது அதிக காதல் கொண்டிருந்தார் சந்திரபாபு. அவருக்கு மிகவும் பிடித்த Perfume - Channel 5. படபிடிப்புகளில், காட்சியில் நடித்துவிட்டு வந்ததும் - 'ரெவ்லான்' என்ற உயர்தர சென்ட் பூசப்பட்ட வெள்ளை நிற கர்சிப்பை எடுத்து முகத்தை துடைத்துகொள்வது, சந்திரபாபுவின் வழக்கம்.

'ஓ Jesus' என பெருமூச்சு விட்டபடி, அமெரிக்க பாணியில் அடிக்கடி உச்சரிப்பார். வெகுநேரம் மெளனமாக வேறு எங்கோ பார்ப்பதுபோல் இருந்துவிட்டு, தம் முன் உள்ள நபரை சட்டென்று திரும்பிப்பார்த்து குழந்தைபோல் புன்னகைப்பார். வீட்டில், பெரும்பாலும் வெள்ளை நிற கட்டம் போட்ட லுங்கியைத்தான் அணிந்திருப்பார். பனியன் இல்லாமல் வெள்ளைநிற முழுக்கை சட்டை அணிந்திருப்பார். பொத்தான்கள் போடப்படாமல் இருக்கும். கையை மடித்து விட்டிருப்பார். சோபாவில் ஏறி சம்மணம் போட்டு உட்கார்ந்து, Gold Flake சிகரெட்டை ஸ்டைலாக ரசித்து குடிப்பார்.

ரேடியோகிராமில், வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட அமெரிக்க, ஸ்பானிய, Mexican இசைத்தட்டுக்களை போட்டு ஓடவிட்டு, பக்கத்தில் இருப்பவர் யாராக இருந்தாலும் சரி, அவரை தன்னுடன் நடனமாட அழைப்பார். தன்னுடன் ஒழுங்காக ஈடுகொடுத்து ஆடாதவர்களை செல்லமாக கெட்ட வார்த்தைகள் சொல்லி திட்டுவார்.

ஷூட்டிங்கின்போது, துண்டுதுண்டாக நறுக்கப்பட்ட பச்சை காரட்களையும் வெள்ளரிகளையும் ஒரு தட்டு நிறைய வைத்து சாப்பிடுவார் சந்திரபாபு.
யாருக்கு போன் பண்ணினாலும், வெளியில் இருந்து அழைப்பு வரும்போதும், 'ஹலோ' என தொடங்காமல், 'சந்திரபாபு' என, தன் பெயரை ரசனையுடன் சொல்லி உரையாடலை அழகாக தொடங்குவார்.

யாரையும் 'சார்' போட்டு அழைக்கமாட்டார் சந்திரபாபு. எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் பெயருக்கு முன்னால் 'மிஸ்டர்', 'மிஸ்', 'மிஸ்ஸஸ்' சேர்த்து அழைப்பதே சந்திரபாபுவின் பழக்கம். வீட்டில், தானே சப்பாத்தி மாவு பிசைந்து, உருட்டி, சப்பாத்திகளை போட்டு சுட்டு எடுத்து, அதற்கு தொட்டுக்கொள்ள பதார்த்தமும் ஏதாவது செய்து வைத்துவிட்டு, குளித்துவிட்டு வந்து, பாட்டிலை திறந்து ஒரு கிளாசில் விஸ்கியை ஊற்றி வைத்துக்கொண்டு, சப்பாத்தியை கத்தியால் அழகாக வெட்டி ஸ்டைலாக உண்பார் சந்திரபாபு.

சந்திரபாபு - ராஜா அண்ணாமலைபுரத்தில் (அந்நாளில் கேசவபெருமாள்புரம்) சொந்தமாக வீடு ஒன்று கட்டினார். இரண்டு மாடிகள் கொண்ட வீடு இது. தரைதளத்தில் இருந்து இரண்டாவது தளத்திற்கு காரிலேயே செல்லும்படியாக கட்டப்பட்டது.

ஒருமுறை - தொலைபேசியில் மனோரமாவிடம், ''நான் ராஜா அண்ணாமலைபுரதுல19 கிரௌண்டுல ஒரு வீடு கட்டுறேன் மனோரமா. அந்த மாதிரி வீடு எங்காவது இருக்குன்னு யாராவது சொல்லட்டும், அந்த வீட்டை நான் குண்டுவச்சி வெடிச்சிடுவேன்'' என்று தான் கட்டும் வீட்டை பற்றி பெருமையாக சொன்னார் சந்திரபாபு. இந்த வீடு, 'மாடி வீட்டு ஏழை' படத்தால் ஏற்பட்ட கடனால், அவர் கையை விட்டுப்போனது.

சந்திரபாபு, கார் ஓட்டுவதில்கூட ஒரு வித்தியாசத்தை கடைப்பிடித்து வந்தார். அவர் தனது பியட் காரை ஒட்டி செல்லும்போது பார்ப்பவர்கள் - ஒன்று பயப்படுவார்கள், இல்லை சிரிப்பார்கள். காரணம், அடிக்கடி தன் முழங்கைகளாலேயே ஸ்டியரிங்கை பிடித்து காரை வளைத்து திரும்பி, அவர் ஓட்டும் வேகம் பிறரை திரும்பிபார்க்க வைக்கும். இப்படி ஒட்டி சிறிய விபத்துக்கள் சிலவற்றையும் சந்தித்துள்ளார்.

''எனக்கு மேலைநாட்டு நாகரிகங்களை, பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுத்தவன் அவன். என்னை கிளப்புக்கெல்லாம் அழைத்து செல்வான். அதற்காக என்னை டை, கோட் எல்லாம் அணியவைப்பான். என்னைப்பற்றி என் இசையறிவை பற்றி, இசையில் எனது டெஸ்ட்டை பற்றி முழுமையாக தெரிந்துகொண்டவன் என் நண்பன் சந்திரபாபு தான். அவன் சந்தோஷத்துக்கும் குடிப்பான், கவலைக்கும் குடிப்பான், கோபத்திலும் குடிப்பான்'' என்று தன் நண்பனின் செய்கைகளை பற்றி கூறியுள்ளார் MS. விஸ்வநாதன். 'யார்டிலிங்' (குரலை இழுத்து இழுத்து பிசிர் அடிப்பது போல் பாடுவது) என்ற பாடும் முறை, மேலை நாட்டை சார்ந்தது. ஹிந்தியில் நடிகர் கிஷோர் குமார் அடிக்கடி யார்டிலிங் செய்வார். சந்தோஷமாக பாடப்படும் பாடல்களின் இடையே யார்டிலிங் செய்வார்கள். தமிழ் பாடல்களில் யார்டிலிங் என்ற முறையை கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவையே சாரும். 'குங்கும பூவே...' பாடல் 'சபாஷ் மீனா' படத்துக்காக உருவாக்கப்பட்டதுதான். தயாரிப்பாளர் P.R. பந்தலுவை விட்டுவிலகிய சந்திரபாபு, அந்த பாடலை 'மரகதம்' படத்துக்காக பாடிவிட்டார்.


பாக்யராஜின் மிக சிறந்த திரைக்கதை அம்சம் உள்ள படமான 'அந்த 7 நாட்கள்' - சந்திரபாபுவின் நிஜ வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் என்ற பேச்சு அந்த சமயத்தில் வந்தது. ஒரு நடிகனுக்கு பெயர் என்பது, அவனுக்கென்று ஒரு தனி பாணி உருவாக்கிகொள்வதுதான். பிற்காலத்தில் வேறு யாராவது அந்த பாணியை பின்பற்றி நடிக்கவேண்டும். அதைபார்த்து இது அந்த நடிகரின் பாணி என மற்றவர்கள் கூறவேண்டும். சந்திரபாபுவும் அப்படி தனக்கென தனி பாணி உருவாக்கி கொண்டவர் தான். ஆனால் அவரது பாணியை பின்பற்றி நடிப்பது என்பது யாராலும் இயலாத காரியம். ஒரு ரிக்க்ஷாகாரன் பாத்திரம் என்றால் அதற்கு ஏற்றாற்போல் தன் நடை, உடை, பாவனைகளை மாற்றி அசத்துவார். அதேபோல் ஜெர்ரி லூயிஸ் போன்ற ஹை-கிளாஸ் காமெடிக்கும் பொருந்திவந்த நபர் சந்திரபாபு.

தன் திறமைமீது அவருக்கு கர்வம் உண்டு. அதற்காக அதை திமிர் என்று சொல்லமுடியாது. ஆனால், பலரால் 'திமிர் பிடித்தவன்' என தவறாக புரிந்துகொள்ளப்பட்டவர். தன் புதுமையான ஐடியாக்களை தான் நடிக்கும் படங்களில் தன் கேரக்டர்களில் செயல்படுத்தி பார்க்க நினைப்பவர் சந்திரபாபு. தன் நினைப்பதை, செயல்படுத்த நினைத்த ஐடியாக்களை செயல்படுத்தியே தீரவேண்டும் என்ற பிடிவாத குணம் உண்டு. தான் சொல்வது தவறு என்று தெரிந்தால், தயங்காமல் ஒப்புக்கொள்வார். அதற்காக வருத்தம் தெரிவிப்பார்.
1958-இல் சந்திரபாபுவுக்கு 'நடிகமணி' என்றொரு பட்டம் கொடுக்கப்பட்டது. பட்டத்தை அளித்தவர், அப்போதைய அமைச்சர் லூர்த்தம்மாள் சைமன்.
ஒரு நகைச்சுவை நடிகர் பாடிய 'சோக கீதங்கள்' பெரிய அளவில் ரசிக்கப்பட்டது சந்திரபாபு பாடல்களை மட்டும்தான்.

இன்றும் பெரும்பாலான லைட் மியூசிக் குழுக்களில் - யாராவது ஒருவர், சந்திரபாபுவின் குரல், மேனரிசம், நடனம் என அவரது பாடல்களை இந்த தலைமுறைனரிடமும் பரப்பி வருகின்றனர். அவரது பாடல்களுக்கு இந்த தலைமுறையினரிடமும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

'சென்னை சினிமா ரசிகர்கள் சங்கம்' சார்பாக ஆண்டுதோறும் திரை கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டு வந்தது. அதில் 1957 முதல் 'சிறந்த நகைச்சுவை நடிகர்-நடிகை' என விருதுகள் உருவாக்கப்பட்டன. அதில் முதல் விருதை பெற்றவர் சந்திரபாபு தான். படம்: 'மணமகன் தேவை'.

தன்னம்பிக்கை ஒரு மில்லிலிட்டர் கூடிப்போனாலும் தலைகனம் ஆகிப்போகும். சந்திரபாபுவிடம் இருந்தது தன்னம்பிக்கை மட்டுமே. அதற்கு உதாரணம், இலங்கை வானொலியில் அவர் பேட்டி கொடுக்கும்போது - 'உலகத்திலேயே சிறந்த நடிகர் யார்?' என பாபுவிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, 'There is only one சந்திரபாபு. அடுத்து சிவாஜி கணேசன் நல்லா நடிக்கிறான்' என்று பேட்டி கொடுக்க, சிவாஜி கணேசனின் வெறித்தனமான ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டார் சந்திரபாபு.

நடிகை சாவித்திரி ஒருமுறை இந்தோனேசியாவுக்கு போயிருந்தபோது, அப்போதைய அந்நாட்டு அதிபர் சுகர்தோ கொடுத்த விருந்தில் கலந்துகொண்டார். அதிபரின் வற்புறுத்தலால் விருந்தில் மது அருந்திய சாவித்திரி, அதன்பிறகு மதுவுக்கு அடிமையாகிவிட்டார். மாலை நேரங்களில் மது அருந்த சாவித்திரிக்கு 'கம்பெனி' கொடுத்தவர் சந்திரபாபு தான்.

இருவருக்கும் இடையே முறையற்ற உறவு இருந்தது என்று சொல்லப்பட்டது. 'சாவித்திரியால் சந்திரபாபு கெட்டான்', 'சந்திரபாபுவால் சாவித்திரி கெட்டாள்' என்றும் சொல்லப்பட்டது.

ஒருவரை பற்றி விமர்சனம் செய்யும்போது, அந்த நபருக்கு எதிரான உண்மையான கருத்துக்களை கூற சந்திரபாபு தயங்கியதே இல்லை. அதனால் வரும் பின் விளைவுகளை பற்றி அவர் யோசித்ததும் இல்லை. மனதில் தோன்றியதை உதட்டில் பேசிவிடுவார். இதனால் அவர் அடைந்த இன்னல்கள் ஏராளம்.

ஒருமுறை சந்திரபாபு மது அருந்தியிருந்த நிலையில், ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டி, அவருக்கு திரை உலகில், பலரது வெறுப்பை சம்பாதித்து கொடுத்தது. அந்த பேட்டியில்...

ஜெமினி கணேசன் பத்தி என்ன நினைக்கிறிங்க?

அவன் என்னோட ஆதி கால நண்பன். திருவல்லிகேணியில குப்புமுத்து முதலி தெருவில ஒரு மாடியில நான் குடியிருந்தேன். அப்பா அவன் 'தாய் உள்ளம்' படத்துல நடிச்சிகிட்டிருந்தான். அப்பா அவனுக்கு நான் காமெடி எப்படி பண்ணனும், பேத்தாஸ்னா எப்படி பண்ணனும், லவ் சீன எப்படி பண்ணனும்னு நடிச்சி காட்டினேன். அடே அம்பி, இத்தனை வருஷம் ஆச்சேடா, இன்னும் நடிப்புல எந்த முன்னேற்றத்தையும் காணுமேடா. நீ போன ஜென்மத்துல வட்டி கடை வச்சிருந்திருப்படா, படுபாவி.

சிவாஜி கணேசன் பத்தி உங்க அபிப்ராயம் என்ன?

அவர் நல்லா நடிகர். பட், அவரை சுத்தி காக்கா கூட்டம் ஜாஸ்தி இருக்கு. அந்த ஜால்ரா கூட்டம் போயிடிச்சின்னா அவர் தேறுவார்.

MGR பத்தி உங்க அபிப்ராயம் என்ன?

அவர் கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப்பட்டேன். பேசாம கம்பவுண்டரா போகலாம்.

அந்த மூன்று உச்ச நடிகர்களும், சந்திரபாபுவிடம் இருந்து விலகிச்செல்ல காரணமாக அமைந்தது இந்த பேட்டி தான்.

மிகப்பெரிய போராட்டத்துக்கு பின் திரையுலகுக்கு வந்த சந்திரபாபு, மிக குறுகிய காலத்தில் அளப்பரிய சாதனைகள் செய்துவிட்டு இறந்துபோனவர். தமது சொந்த வாழ்க்கையின் ஆறாத சோகங்களை மறைத்துக்கொண்டு மக்களை சிரிக்கவைத்த மகத்தான கலைஞர். சற்றும் நம்பமுடியாத அதிரடி கருத்துக்களை அடிக்கடி வெளியிட்டு, திரையுலகினரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியவர்.

ஆனால் சந்திரபாபு பேசியதெல்லாம் சத்தியம். அந்த காலத்து முன்னணி கலைஞர்கள் பலருடனான தமது கசப்பான அனுபவங்களை சந்திரபாபுவே பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்களெல்லாம் அவரது கண்ணீரை அதிகமாக்கியவர்கள்.

பதிலுக்கு சந்திரபாபு வெளிப்படுத்தியது புன்னகை மட்டுமே.


தகவல்கள்: 'கண்ணீரும் புன்னகையும்' புத்தகம், கிழக்கு பதிப்பகம்

1940 ஆம் ஆண்டு முதல் தண்ணீர் மற்றும் உணவருந்தாமல் வாழும் ஒரு துறவி !!!

ப்ரஹ்லாத் ஜானி:
              மாதாஜி என்றழைக்கப்படும் ப்ரஹ்லாத் ஜானி, 1940 ஆம் ஆண்டு முதல் தண்ணீர் மற்றும் உணவருந்தாமல் வாழும் ஒரு துறவியாகும். தனக்குள் கடவுள் இருப்பதாக அவர் கூறுகிறார். அவரை வைத்து இரு முறை சோதனை ஆய்வுகள் நடைப்பெற்றுள்ளது. 2010-ல் நடந்த அந்த இரண்டாம் ஆய்வில், தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு அவர் 24 மணிநேர வீடியோ கண்காணிப்பில் வைக்கப்பட்டார். இந்த 15 நாட்களுக்கு அவரின் ஆரோக்கியத்தை 35 விஞ்ஞானிகள் கண்காணித்து வந்தனர். ஆனாலும் அவர் தண்ணீர் மற்றும் உணவருந்தியதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை. இந்த 15 நாட்கள் முடியும் வரை அவருடைய உடலில் பசி அல்லது நீர்ச்சத்து குறைவதால் ஏற்படும் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. யோகா உடற்பயிற்சிகளால் அவரின் உடல் இப்படி மாறியிருக்கலாம் என ஒரு காரணம் கூறப்படுகிறது. இரண்டு வாரம் உண்ணாமல் இருந்த பிறகு அவர் 40 வயது மனிதனை விட ஆரோக்கியமாக இருந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இந்தியாவில் அவிழ்க்க முடியாத 7 மர்ம முடிச்சுகள் !!!

இந்தியா என்பது மர்மங்கள் நிறைந்த பூமியாகும். அறிவியல் விளக்கத்திற்கும் அப்பாற்ப்பட்டு இந்தியாவின் மூலை முடுக்குகளில் பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கிறது. சில நேரம் அது வெறும் ஏமாற்று வேலை தான் என்றாலும் கூட சில நேரங்களில் அது நம்மை உறைய வைக்கும் உண்மையாக இருக்கும். இதில் பல மர்மங்களுக்கு விடை கிடைக்காமல் இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளது.
இதோ அப்படி இந்தியாவில் அவிழ்க்கப்படாத 7 மர்ம முடிச்சுகளைப் பற்றி தான் நாம் பார்க்க போகிறோம்.

லால் பகதூர் சாஸ்திரியின் மரணம்:

இந்தியாவின் இரண்டாம் பிரதம மந்திரியான சாஸ்திரி அவர்கள் 1966 ஆம் ஆண்டில் டாஷ்கென்ட் என்ற இடத்தில் டாஷ்கென்ட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட சில மணிநேரங்களில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அரை நூற்றாண்டை கடந்த போதிலும், இன்று வரை அவர் மரணத்தில் மர்மம் நீடிப்பதாக கருதப்படுகிறது. 2009 ஆம் ஆண்டில் அனுஜ் தர் என்ற பத்திரிகையாளர், சாஸ்திரியின் மரணத்தைப் பற்றிய தகவல் வேண்டும் என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பிரதம மந்திரியிடம் கோரிக்கை விடுத்தார். ஆனால் அப்படி தெரிவித்தால் அது இந்தியாவின் வெளிநாட்டு உறவுகளில் பாதிப்பை உண்டாகும் என அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. அவரின் மரணத்தின் போது, அவருக்கு விஷம் கொடுக்கப்பட்டது என்ற சந்தேகத்தின் பேரில் ரஷிய நாட்டு சமையல்காரர் ஒருவர் கைது செய்யப்பட்டு, பின் விடுதலை செய்யப்பட்டார். அவருக்கு மாரடைப்பு என சொல்லப்பட்டாலும், அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டார் என அவரின் குடும்பத்தார் வலியுறுத்துகின்றனர்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மரணம்: 

இந்திய சுதந்திரத்துகாக வெள்ளையர்களை எதிர்த்து போராடிய நேதாஜியைப் பற்றி அறியாதவரே இருக்க முடியாது. ஃபோர்மோசா (தைவான்) என்ற இடத்தில் அவர் சென்ற ஜப்பானிய விமானம் வெடித்ததால், ஆகஸ்ட் 18, 1945 ஆம் ஆண்டில் அவர் தீயில் கருகி இறந்து போனார் என தகவல்கள் கூறுகிறது. ஆனால் அவரின் ஆதரவாளர்களோ, குறிப்பாக வங்காளத்தில், அவர் இறந்து விட்டார் என்பதை அவர்கள் நம்பவில்லை. அவரின் மரணத்தை கேள்விப்பட்ட காந்திஜி இப்படி கூறியுள்ளார் "சுபாஷ் இறக்கவில்லை. சுபாஷால் இப்படி இறக்க வாய்ப்பில்லை".


ரூப்குந்த் ஏரி - உத்தர்கண்ட்:


உள்ளூர்வாசிகளால் மர்ம ஏரி என அழைக்கப்படும் ரூப்குந்த் உறைபனி ஏரி உத்தர்கண்ட் மாநிலத்தில் உள்ளது. யாருமே வசிக்காத இந்த பகுதி, இமயமலையின் மீது 5,029 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. 2 மீட்டர் ஆழத்தை கொண்டுள்ள இந்த ஏரியின் முனையில் நூற்றுக்கணக்கான மனித எலும்புக்கூடுகளை காணலாம். ஆன்மீக ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் இதனைப் பற்றி பல கருத்துக்கள் கூறப்பட்டு வருகிறது. அதன் படி, 9-ஆம் நூற்றாண்டிற்கு முன்பிலிருந்தே இவை இங்கு கிடக்கிறது. இந்த எலும்புகளின் ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைகழகம் ஆராய்ந்த போது அது 850 ஆம் வருடத்தை சேர்ந்ததாக இருக்கலாம் என தெரிவித்துள்ளது. ஆனால் எதுவும் உறுதியாக தெரியவில்லை.

ஓம் பன்னா:

ஓம் பன்னா என்பது ஜோத்பூரில் உள்ள பாளி மாநகராட்சியில் உள்ள மோட்டார் பைக் கோவிலாகும். பாதுகாப்பான பயணத்திற்கு இங்குள்ள 350 சிசி ராயல் என்ஃபீல்ட் புல்லட்டை தான் கடவுளாக அனைவரும் வழிபடுகின்றனர். 1988 ஆம் ஆண்டில் ஓம் பன்னா தன் மோட்டார் பைக்கில் சென்று கொண்டிருந்த போது ஒரு மரத்தில் மோதி அங்கேயே இறந்துள்ளார். மறுநாள் காலை அந்த பைக்கை காவலர்கள் அருகிலுள்ள காவல் நிலையத்தில் நிறுத்தி வைத்துள்ளனர். ஆனால் மறுநாள் அந்த பைக் விபத்து நடந்த பகுதியில் இருந்துள்ளது. அதனை மீண்டும் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்த காவலாளிகள் பைக்கில் இருந்த பெட்ரோலை எடுத்து விட்டு, அதனை சங்கிலியால் கட்டி போட்டு வைத்துள்ளனர். ஆனால் மீண்டும் அது மாயமாகி, விபத்து நடந்த பகுதிக்கு சென்றுள்ளது. இது பல தடவை நடந்திருக்கிறது. அதிசயமாக பார்க்கப்பட்ட இச்சம்பவத்தால் அனைவரும் அந்த பைக்கை வணங்க தொடங்கினர். அன்றாடம் அந்த பாதையை கடப்பவர்கள் அந்த பைக்கையும் ஓம் பன்னாவையும் வணங்கி விட்டு தான் செல்கின்றனர். சில ஓட்டுனர்கள் மதுபானத்தையும் அதற்கு படைக்கின்றனர்.

ஸ்டோன்மேன்:

யாரென்று கண்டுபிடிக்க முடியாத ஒரு தொடர்ச்சி கொலைகாரனுக்கு அளிக்கப்பட பெயரே ஸ்டோன்மேன். இவன் கொல்கத்தாவில் 1989 ஆம் வருடம் வீடு இல்லாத 13 நபர்களை கொன்றுள்ளான். 6 மாதத்தில் 13 பேர்களை கொன்றதாக கூறப்படும் அவன், இதை தனியாக செய்தானா அல்லது கூட்டாக செய்தானா என்பது தெரியவில்லை. இன்று வரை இந்த குற்றத்திற்காக யாருமே கைது செய்யப்படவில்லை. இதனை யார் செய்தது என கொல்கத்தா காவலர்களால் கடைசி வரியா கண்டுபிடிக்க முடியவில்லை. இதே போலான தொடர்ச்சி கொலைகள் மும்பையிலும் குவாஹத்தியிலும் நடந்துள்ளது.

சாந்தி தேவி:

1930-களில், டெல்லியை சேர்ந்த 4 வயதான சாந்தி தேவி என்ற குழந்தை, தான் இதற்கு முன் மதுராவில் வாழ்ந்ததாக தன் பெற்றோர்களிடம் கூறியுள்ளது. தான் 3 குழந்தைகளுக்கு தாய் என்பதையும் ஒரு பிரசவத்தின் போது இறந்து விட்டதாகவும் கூறியுள்ளது. இதற்கு முன் தன் பெயர் லுட்கி எனவும் கூறியுள்ளது. இதனை கேட்ட அவளின் பெற்றோர்கள் விசாரணையில் இறங்கிய போது, மதுராவில் லுட்கி என்ற பெண் சமீபத்தில் இறந்தது தெரிய வந்தது. சாந்தி தேவியை அந்த கிராமத்திற்கு அழைத்து சென்ற போது, அவள் உள்ளூர் மொழியில் சரளமாக பேச தொடங்கினால். தன் பூர்வ ஜென்ம கணவன் மற்றும் குழந்தைகளை அடையாளம் கண்டால். இதனை கேள்விப்பட்ட மகாத்மா காந்தி, இதனை விசாரிக்கும் படி ஒரு குழு ஒன்றை நியமித்தார். அதன் படி 1936 ஆம் ஆண்டு ஒரு அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. அதன் படி அப்பெண் லுட்கியின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களில் இருந்து 24 சரியான தகவல்களை அளித்துள்ளார்.

ப்ரஹ்லாத் ஜானி: 

மாதாஜி என்றழைக்கப்படும் ப்ரஹ்லாத் ஜானி, 1940 ஆம் ஆண்டு முதல் தண்ணீர் மற்றும் உணவருந்தாமல் வாழும் ஒரு துறவியாகும். தனக்குள் கடவுள் இருப்பதாக அவர் கூறுகிறார். அவரை வைத்து இரு முறை சோதனை ஆய்வுகள் நடைப்பெற்றுள்ளது. 2010-ல் நடந்த அந்த இரண்டாம் ஆய்வில், தொடர்ச்சியாக 15 நாட்களுக்கு அவர் 24 மணிநேர வீடியோ கண்காணிப்பில் வைக்கப்பட்டார். இந்த 15 நாட்களுக்கு அவரின் ஆரோக்கியத்தை 35 விஞ்ஞானிகள் கண்காணித்து வந்தனர். ஆனாலும் அவர் தண்ணீர் மற்றும் உணவருந்தியதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை. இந்த 15 நாட்கள் முடியும் வரை அவருடைய உடலில் பசி அல்லது நீர்ச்சத்து குறைவதால் ஏற்படும் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை. யோகா உடற்பயிற்சிகளால் அவரின் உடல் இப்படி மாறியிருக்கலாம் என ஒரு காரணம் கூறப்படுகிறது. இரண்டு வாரம் உண்ணாமல் இருந்த பிறகு அவர் 40 வயது மனிதனை விட ஆரோக்கியமாக இருந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ரஜினிகாந்த் - பெயர் காரணம்

'கெளரவம்' படத்தில் 'ரஜினிகாந்த்' என்ற பாத்திரமாக நடித்துச் சிறப்பித்தார் சிவாஜி.


இன்று ரஜினிகாந்த் 'சிவாஜி' என்ற பாத்திரமாக நடிக்கிற ஆச்சர்ய ஒற்றுமை...!.'ரஜனி' என்ற சொல்லுக்கு இருட்டு, ஸ்த்ரீ, காய்ந்த மஞ்சள், மண்கலம் என்றெல்லாம் அர்த்தம் சொல்கிறது வடமொழி அகராதி. இதில் கருப்பையே தன் கவர்ச்சியாகக் கொண்டதால்தான் 'இரவின் நாயகன்' என்ற பொருள்பட 'ரஜினிகாந்த்' என்ற பெயர் வந்தது ரஜினிக்கு!.

'ஸ்டைல்' என்ற வார்த்தைக்கும் அகராதியில் அர்த்தங்கள் ஆயிரம் இருக்கலாம். ஆனால் தமிழக சினிமா ரசிகர்களுக்கு ஒரே அர்த்தம் ..அது ரஜினி!.

பாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன ?

தெரிந்து கொள்வோம் : பாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன ? உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விஷயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது. பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்? 

  

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது . ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர். பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும். பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது .ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. ------------------------------------------------------------------------ 

இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது...

உலகின் மிகப்பெரிய இந்து கோவில்

                         உலகின் எட்டாவது அதிசயம் என புகழப்படும் அங்கோர் வாட் ஆலயம் கம்போடியா நாட்டின் அடையாளமாகவுள்ளது. கெமர் சாம்ராஜ்யத்தின் மன்னன் 2-ஆம் சூர்யவர்மனால் இந்த ஆலயம் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. திராவிட கட்டட கலையை அடிப்படையாக வைத்துக் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் பிரம்மாண்டம் காண்பவர்களை அசரவைக்கும் திறன் படைத்தது. ஏறக்குறைய இதன் வெளிச்சுவர் 1,300 மீட்டர் நீளம், 1,500 மீட்டர் அகலம் என ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ளது.சூரிய, சந்திர கால சுழற்சியை கருத்தில் கொண்டு இந்த கோயில் வடிவமைக்கப்பட்டதே இதன் சிறப்பம்சம் என்கிறார்கள் கட்டட மற்றும் சிற்ப கலை நிபுணர்கள். பிரமாண்டத்திற்கும், சிற்பங்களின் அழகிற்கும் பாராட்டப்படும் இந்த சுற்றுலா தலம், யுனெஸ்கோ அமைப்பால் பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை சிறப்பம்சங்கள் கொண்ட இந்த ஆலயம் 14-ஆம் நூற்றாண்டில் கம்போடியா மீது அடுத்தடுத்துத் தொடுக்கப்பட்ட போர்களால் காடுகள் சூழப்பட்டு அடையாளம் தெரியாமல் மறைந்தது.

இதனை உலகிற்கு வெளிகொண்டு வந்த பெருமை ஹென்றி மோஹாட் என்பவரையே சேரும். 1860-ஆம் ஆண்டு அவர் இதனை கண்டுப்பிடித்த பிறகே அங்கோர்வாட் ஆலயம் பொலிவு பெற்று அதன் சிறப்பம்சங்கள் வெளிவந்தன.

அங்கோர்வாட் என்றால், கோயில் நகரம் என பொருள். இந்த அங்கோர்வாட் கோயில் கம்போடியாவின் தேசிய கொடியிலும் இடம்பெற்றுள்ளது. உலகின் மிகப்பெரிய இந்து கோயிலான இதனை கட்ட 40 ஆண்டுகள் ஆனதாக கூறப்படுகிறது.

படித்ததில் பிடித்தது...

தயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்

          ஒரு பெரிய வணிக அங்காடியில் ஒரு ஐந்து வயது மதிக்க தக்க சிறுவன் பணம் செலுத்துபவரிடம் உரையடிகொண்டிருந்தான் பணம் பெறுபவர், உன்னிடம் இந்த பொம்மை வாங்குவதற்கு தேவையான பணம் இல்லை என்று சொன்னார். அந்த சிறுவன் இந்த பணம் போதாதா என்று வினவினான். அவர் மீண்டும் பணத்தை எண்ணி விட்டு இல்ல டா செல்லம் குறைவாக உள்ளது என்றார் அந்த சிறுவன் அந்த பொம்மையை கையிலேயே பிடித்திருந்தான்.

       


நான் அந்த சிறுவனிடம் அந்த பொம்மை யாருக்கு தர போகிறாய் என்று கேட்டேன். அதற்க்கு அந்த சிறுவன் அது தன் தங்கைக்கு ரொம்ப பிடித்ததாகவும் அவள் பிறந்தநாள் அன்று அவளுக்கு பரிசளிக்க போவதாகவும் கூறினான்மேலும் அவன் தொடர்ந்தபோது என் இதயம் நின்று விட்டது போல் உணர்தேன் அவன் கூறியது,

 "இந்த பொம்மையை என் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் என் தங்கையிடம் கொத்து விடுவார்கள், என் தங்கை கடவுளிடம் சென்று விட்டால், என் அம்மாவும் கடவுளிடம் செல்ல இருக்கிறார். நான் என் தந்தையிடம் இந்த பொம்மை வாங்கி வரும் வரை அம்மா கடவுளிடம் செல்ல வேண்டாம் என்று கூறி விட்டு வந்தேன்"

எனக்கு என் தங்கையும் அம்மாவும் ரொம்ப பிடிக்கும். அம்மா கடவுளிடம் செல்ல வேண்டாம் என்று அப்பாவிடம் கேட்டேன், அனால் அம்மா கடவுளிடம் செல்லும் நேரம் வந்துவிட்டதாக கூறினார். மேலும் அவன் கையில் அவனுடைய புகைப்படம் ஒன்றை வைத்து இருந்தான் அதை தன் அம்மாவிடம் கொடுத்தால் அவர்கள் தன் தங்கையிடம் அதை கொடுப்பார்கள், அதனால் அவள் தன்னை மறக்காமல் இருப்பால் என்றும் கூறினான்.

நான் என்னிடம் இருந்த பணத்தை அவனுக்கு தெரியாமல் அவன் வைத்திருந்த பணத்துடன் சேர்த்து, மீண்டும் எண்ணி பார்க்கலாம் என்று சொன்னேன்.
அவனும் இசைந்தான், நாங்கள் எண்ணிய போது போதிய பணத்திற்கு மேல் இருந்தது அவன் கடவுளுக்கு நன்றி கூறினான்.

நான் கனத்த மனதுடன் அங்கிருந்து நகர்ந்தேன் பின்னர் உள்ளூர் தினசரி ஒன்றில் படித்தது என் நினைவிற்கு வந்தது, "மகிழ்வுந்தில்(car) பயணம் செய்த தாய் மற்றும் மகள் மீது ஒரு திறந்த சரக்கு வண்டி(truck) மோதி விபத்துக்குள்ளானது என்றும் அதன் ஓட்டுனர் குடித்து இருந்ததாலேயே விபத்து நிகழ்த்து என்றும் வந்த அந்த செய்தி"

மேலும் மகள் சம்பவ இடத்திலேயே இறந்ததாகவும் தாய் உயிருக்கு போராடும் நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டார் என்றும் அவர் சயித்திய (coma) நிலையில் உள்ளார் என்றும் வந்த அந்த செய்தி

இந்த சிறுவன் அவர்கள் மகனா?

இரண்டு நாள் கழித்து தினசரியில் அந்த செய்தி விபதுக்குள்ளான பெண் இறந்து விட்டால் என்று. நான் அவரது இறுதி சடங்கிற்கு சென்றேன்
அந்த பெண் சடலமாக இருந்தால் கையில் சிறுவனின் புகைப்படமும் அந்த பொம்மையும் இருந்தது.

அங்கிருத்து கனத்த இதயத்துடன் திரும்பினேன் அந்த சிறுவனின் தன் அன்னையிடமும் தங்கையிடம் வைத்து இருந்த அன்பும் பாசமும்
அப்படியே உள்ளது.

அனால் ஒரு குடிகாரன் போதையில் வாகனம் ஒட்டியதால் ஒரு நொடியில் அந்த குடும்பம் சிதைந்து விட்டது
 "தயவு செய்து மது அருந்தி விட்டு வாகனம் ஓட்ட வேண்டாம்"

படித்ததில் பாதித்தது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More