அப்புடில்லாம் நம்பிக்கை இல்லாம நாத்திகம் பேசதீங்க. இந்த மாதிரி கடவுள் உலகம் பூரா இருக்கு நாமதான் பாக்குறதில்ல - கமல்

அன்பே சிவமும் கடவுள் நம்பிக்கையும்

திருமண மண்டபத்தில் கமலை பார்த்த நாசர் இழுத்து செல்வார்.

அப்போது கமல்

"நீங்க என்னைக்காவது க்யூல நின்னு சாமி கும்புட்டுருக்கீங்களா?
இருக்குற க்யூவல்லாம் நிக்க வசிட்டு தனியா பர்சனல் தரிசனம் பன்றவராச்சே நீங்க.
செய்யற தப்பெல்லாம் பன்னிபுட்டு உண்டியல்ல காச போட்டுருவீங்க. உங்க பாவத்தை எல்லாம் மன்னிச்சி கடவுள் காப்பாத்துவாரு இல்ல.
அப்புடி காப்பாத்துற கடவுள் கடவுளே இல்ல கூலி. ஏண்ணா அவரும் காசு வாங்கிட்டு தான வேல செய்யுறாரு"

என்பார். என்ன ஒரு அருமையான விளக்கம்.

.......

இறுதியில் சந்தானபாரதி அரிவாளுடன் கமலை கொலை செய்ய வந்து மனதை மாற்றி கொள்ளும் போது,

"எனக்கு கடவுள் நம்ம்பிக்கை இருக்கு தம்பி. உங்களூக்கு எப்புடியோ?" என்பார்.

அதற்கு கமல் "எனக்கும் இருக்கு" என்பார்.

"யார் அந்த கடவுள்?" என்றதும் சந்தான பாரதியை காட்டி "ஒருத்தர கொலை பன்ன வந்துட்டு மனச மாத்ஹ்டி கிட்டு மன்னிப்பு கேக்குற மனசு இருக்கு பாருங்க அதுதான் கடவுள்" என்பார்.

"மனச மாத்திக் கிட்டேன் அதுக்காக நான் கடவுள்லாம் இல்ல தம்பி" என்பார்.

"அப்புடில்லாம் நம்பிக்கை இல்லாம நாத்திகம் பேசதீங்க. இந்த மாதிரி கடவுள் உலகம் பூரா இருக்கு நாமதான் பாக்குறதில்ல" என்பார்.

"அன்பே சிவம்"

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More