ஐபாட் (iPod), ஆண்ட்ராய்ட் (Android), விண்டோஸ் 7 (Windows7) - பெயர் காரணம்


விண்டோஸ் 7 (Windows7)  பெயர் காரணம்: 
விண்டோஸ் விஸ்டா மைக்ரோசாப்ட் நிறுவனத்தை ஏமாற்றியதனால், விண்டோஸ் பெயரினையே விட்டுவிடலாமா என்று மைக்ரோசாப்ட் சில காலம் எண்ணியது. ஆனால் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பொருட்களின் பெயரின் பின்னால் எண்கள் இருந்தால் அது அந்நிறுவனத்தின் தனித் தன்மையைக் காட்டுவதாக இருப்பதாக மைக்ரோசாப்ட் எண்ணியது. ஆனால் இந்த பெயரை தாமஸ் நாஷ் அறிவித்த போது இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஏழாவது சிஸ்டம்; எனவே இந்த பெயர் இப்படித்தான் இருக்கும்; இந்த பெயரில் தான் இந்த சிஸ்டம் அழைக்கப்படும் என அறிவித்தார். இதுவரை இதற்குக் கிடைத்த வரவேற்பினைப் பார்க்கையில், மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்குக் கிடைத்த வெற்றி எனவே எண்ணத் தோன்றுகிறது.

ஐபாட் (iPod)  பெயர் காரணம்:
 ஆப்பிள் நிறுவனம்தன் ஸ்டைலில் எம்பி3 பிளேயர் ஒன்றை உருவாக்கிக் கொண்டிருந்தது. அதன் நிறுவனம் ஸ்டீவ் ஜாப்ஸ், தன் நிறுவனத்தின் எம்பி3 பிளேயர் ஒரு ஹப் (Hub) ஆக செயல்பட வேண்டும் என விரும்பினார். எனவே இதற்குப் பெயர் வைத்திட முயற்சிக்கையில் பலவகையான ஹப்களை வைத்துப் பார்த்தனர்.
                                                  
                                                 

இறுதியில் ஸ்பேஸ் ஷிப் போன்ற ஒன்றை வடிவமைத்தனர். ஸ்பேஸ் ஷிப் விட்டவுடன் மேலே சென்று இயங்கும்; பின் எரிபொருளுக்குக் கீழே வரும். இந்த ஸ்பேஸ் ஷிப்பின் முன் வடிவம் ஒரு Pod மாதிரி இருந்தது. எனவே தன் நிறுவனத்தின் தனி அடையாளமான ஐ சேர்த்து அதனை ஐபாட் என பெயர் சூட்டினார்கள்.

ஆண்ட்ராய்ட் (Android)  பெயர் காரணம்:
கூகுள் நிறுவனத்தின் மொபைலுக்கான புதிய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பெயர் ஆண்ட்ராய்ட். இந்த சிஸ்டத்திற்கான வேலையை
2005ல் தொடங்குகையில் இந்த பெயர் உருவாகவில்லை. ஆனால் கூகுள் மிகவும் மர்மமான முறையில் இந்த பெயரைத் திடீரென அறிவித்தது. 

                        
ஏனென்றால் கூகுள் மொபைல் போனுக்கான சிஸ்டம் சாப்ட்வேர் தொகுப்பினைத் தயாரிப்பதே மர்மமான முறையில் முதலில் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது. அந்த ரகசியம் வெளியான  நிகழ்வு, இன்டர்நெட்டில் கூகுள் நிறுவனத்தின் புரட்சி ஆகியன சேர்ந்து இந்த
பெயரை உலகம் ஏற்றுக் கொள்ள வைத்தது.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More