Showing posts with label பொதுநலம். Show all posts
Showing posts with label பொதுநலம். Show all posts

பாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன ?

தெரிந்து கொள்வோம் : பாம்பிற்கு பால் ஊற்றுவதன்,முட்டை வைப்பதன் காரணம் என்ன ? உண்மையும்,விஞ்ஞான ரீதியாக ஒத்துக்கொண்ட விஷயமும் என்னவென்றால் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது. பின்னர் எதற்கு புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள்? 

  

ஆதி காலத்தில் மனிதனுக்கு பெரிய பிரச்சனையாக இருந்தது பாம்புகள். காரணம் அடர்ந்த காடுகள்,மனித நடமாட்டம் மிக மிக குறைவு.மனிதனை விட பாம்புகள் அதிகம் காணப்பட்டது . ஒரு உயிரினத்தை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள்.ஆகவே அதனை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர். பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசம். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை(பரோமோன்ஸ்) அனுப்பும் . அதனை நுகர்ந்து ஆண் பாம்பு பெண் பாம்பை தேடி வரும். பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையை பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கிறது .ஆகவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. ------------------------------------------------------------------------ 

இதன் முழுமையான காரணம் சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனாலேயே பயமுறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது...

நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும் போது வாகன ஆவணங்கள் இல்லை என்றால் பிரச்சனை இல்லை!

உங்களுக்கு தெரியுமா ??... நீங்கள் வாகனங்களில் வெளியே செல்லும் போது license or vehicle papers எடுத்து செல்ல மறந்துவிட்டால்... காவலரை கண்டு பயப்பட தேவையில்லை... அவர்கள் உங்களை மிரட்டுவது 1000 ரூபாய் ஃபைன்...அவர்களுக்கு லஞ்சம் தரதேவையில்லை... நீதி மன்றத்துக்கும் ஃபைன் கட்ட தேவையில்லை... 15 நாட்களுக்குள் உங்க license or vehicle papers ஐ நீதி மன்றத்தில் காட்டினால் பொதுமானது... இது சட்டத்தில் இருப்பதுதான்...நமக்குதான் தெரியவில்லை.... license இல்லையா vehicle papers இல்லையா... பணத்த எடுனு போலிஸ் சொன்னா... நான் 15 நாளில் கோர்ட்டில் காட்டிகிறேன்னு சொல்லி செல்லான்வாங்கிக்கோங்க..

 

நான் உங்களிடமிருந்து எதிர் பார்ப்பது ஒரு share ஐ மட்டுமே... தயவு செய்து ஒருவரையாவது பயன்பெற செய்வோம்

பைக் - 2 வீலர் தொலைந்து போனால் உடனே கண்டுபிடிக்க ஓர் எளிய வழி!.

                திருடு போன உங்க பைக்கை உடனடியாக கண்டுபிடிக்க ஓர் எளிய வழி இருக்கிறது. ஓர் பழைய மொபைல் அல்லது ரூ.1000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஒரு மொபைல்போன் போதும். திருடு போன பைக்கை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். அதற்கான வழிமுறைகள் தொடர்ந்து காணலாம்....


குறைந்த விலையில் நீடித்த ஸ்டான்ட் பை பேட்டரி கொண்ட மொபைல்போன் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். சிறந்த நெட்வொர்க் கொண்ட தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்தின் சிம் கார்டு ஒன்றையும் வாங்குங்கள். மொபைல்போனை சைலண்ட் மோடில் வைப்பதோடு, வைப்ரேஷன் மோடில் இருந்தால் அணைத்துவிடவும்.

மொபைல்போன் மீது தூசு, தும்பட்டிகள் படியாதவாறு பிளாஸ்டிக் பேப்பரை சுற்றிவிடுங்கள். மற்றொரு மொபைல்போனிலிருந்து அந்த போனுக்கு அழைத்து சரியாக இயங்குகிறதா என்று சோதித்து பாருங்க.அந்த மொபைல்போனை பைக்குகுள் எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பான இடத்தில் வைத்துவிடுங்க அவ்வப்போது, பேட்டரி சார்ஜ் செய்ய எடுப்பதற்கு ஏதுவான இடத்தில் வைத்துவிடுங்க.

வாரத்திற்கு இருமுறையாவது பேட்டரி சார்ஜ் செய்ய வேண்டும். ஒருவேளை, பைக் திருடு போனால், 100 என்ற அவசர எண்ணில் போலீசாரை தொடர்பு கொண்டு மொபைல்போன் விபரத்தை தெரிவித்தால், 5 நிமிடங்களில் உங்களது பைக் வைக்கப்பட்டிருக்கும் மொபைல்போனின் ஐஎம்இஐ நம்பரை வைத்து பைக் இருக்கும் இடத்தை எளிதாக கண்டுபிடித்து விடலாம்...!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

சுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு

சுபாஷ் சந்திரபோசின் மறைக்க பட்ட வரலாறு:

சுருக்கமாக: அகிம்சை முறையில் போராடி கொண்டு இருந்த காந்தியிடம் சந்திரபோஸ் சொன்னார். அகிம்சை முறையில் போராடினால் பல ஆண்டுகளாக இந்த போராட்டம் இழுத்து கொண்டே போகும். கோடிகணக்கான இந்தியர்களை வெறும் இருபதாயிரம் வெள்ளையனைக் கொண்ட ராணுவம் அடிமை படுத்தி வைத்து இருக்கிறாது. ஏன் அந்த ராணுவத்தை அடித்து விரட்ட கூடாது. அவர்களை நான் ஆயுத ரீதியாக எதிர்கொள்ள திட்ட மிட்டு இருக்கிறேன். உங்களின் கருத்து என்ன என்று காந்தியிடம் கேட்ட போது அகிம்சையை போதிக்கும் நான் இதை ஒருநாளும் ஏற்று கொள்ள மாட்டேன் என்று சொன்னார். இருவருக்கும் நிறைய கருத்து மோதல் வந்த பின்னர் சந்திரபோஸ் அவர்கள் தனித்து போராட தயாராகினார்.

முதல் கட்டமாக தமிழ்நாடுக்கு வந்தார். வந்து துடிப்பான இளைஞ்சர்களை சந்தித்து. வெள்ளையனை நாம் ஆயுத ரீதியாக தான் எதிர்கொள்ள வேண்டும் அதற்காக நாம் ராணுவ கட்டமைப்பை உருவாக்க வேண்டும். என்று இளைஞர்களிடம் பிரச்சாரம் செய்தார். பிறகு இதே பிரச்சாரத்தை இந்தியாவில் மற்ற மாநிலங்களுக்கும் சென்று இளைஞ்சர்களின் ஆதரவை திரட்டினார். ஆனால் அது அவருக்கு தோல்வியிலே முடிந்தது யாரும் ஆயுதம் எடுத்து போராட முன் வரவில்லை மீண்டும் தமிழகம் வந்த போது தமிழகத்தில் உள்ள ஆயிர கணக்கான இளைஞர்கள் சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் போராட்டதிற்கு ஆதரவளித்தார்கள். அந்த இளைஞர்களுக் கெல்லாம் மறைமுகமாக பயிற்சி அளிக்கப்பட்டது. தமிழகத்தில் காந்தியின் ஆதரவாளர்கள் எண்ணிக்கை நாளுக்குநாள் குறைந்து கொண்டே போனது. தமிழர்கள் சுபாஷ் சந்திரபோசின் போராட்டத்தில் நம்பிக்கை கொண்டு ராணுவத்தில் இணைய ஆரம்பித்தார்கள்.

அப்போது சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஆயுத புரட்சி ஒன்று ஆரம்பித்து உள்ளார்கள் என்று வெள்ளையர்களுக்கு தெரியவர, இவர்களை எல்லாம் வெள்ளையர்கள் வேட்டையாட ஆரம்பித்துள்ளார்கள்.

சந்திரபோஸின் இயக்கத்தில் பெரும் தமிழ் இளைஞர்கள் இணைந்து கொண்டதை அறிந்த காந்தியின் ஆதரவாளர்கள். சுபாஷ் சந்திரபோசை காட்டி கொடுக்கவும் ஆரம்பித்தார்கள். அதனால் அவரால் இந்தியாவில் இருந்துகொண்டு செயல்பட முடியாமல் போனது. வெள்ளையர்களிடம் இருந்து தப்பித்து சுபாஷ்சந்திரபோஸ் வெளிநாடுக்கு சென்றார்.


சில வெளிநாட்டு தலைவர்களை சந்தித்து தனது போராட்டத்தின் ஆதரவை திரட்டினார். ஒவ்வொரு நாடாக சென்று போருக்கான ஆயுத தளவாடங்களை ஹிட்லர் மூலம் சேகரித்தார். எல்லாம் தாயாரான பின்பு இந்தியாவில் இருக்கும் வெள்ளையர்களின் ராணுவ முகாம்களின் எண்ணிக்கை எங்கே இருக்கிறது எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று உளவு பார்த்து தகவல் அறிந்து கொண்ட பின்னர்.

தமிழ் நாட்டில் இருக்கும் அவரின் ஆதரவாளர்களுக்கு தகவல் அனுப்பினார். நான் வெளிநாட்டில் மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறேன். இந்த ராணுவத்தில் இணைந்து நமது நாட்டு விடுதலைக்காக ஆயுதம் எடுத்து போராட விரும்புபவர்கள். என்னுடன் இணைந்து கொள்ளலாம் என்று தகவல் அனுப்பி இருந்தார். இந்தியா முழுவதும் இந்த தகவல் பரவியது. இதை அறிந்த தமிழக தேச பற்றாளர்கள் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் படகு மூலம் வெளிநாட்டுக்கு செல்ல ஆரம்பிதார்கள்.

அங்கே எல்லோருக்கும் போர்ப் பயற்சி அளிக்கப்பட்டது. அப்போது போராளிகளிடம் சுபாஷ்சந்திரபோஸ் பேசினார் . எமது தேசத்தில் வெறும் இருபது ஆயிரம் வெள்ளையனின் ராணுவம் இருக்கிறது. நாம் இங்கு மிகப்பெரிய ராணுவ கட்டமைப்பை உருவாக்கி இருக்கிறோம். அவர்களை நாம் கப்பல் மூலம் சென்று டெல்லி வரை தாக்க போகிறோம் டெல்லியில் தான் வெள்ளையனின் முழு பலமும் இருக்கிறது எனவே டெல்லி வரை நாம் சென்று தாக்க போகிறோம் என்று சொன்னார். ஆனால் இந்த ராணுவத்தில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்பது குறிப்பிட தக்கது .

ஒரு பக்கம் காந்தியின் அகிம்சை போராட்டம் நடந்து கொண்டிருந்தது. சுபாஷ்சந்திரபோஸ் திட்டமிட்டபடி யுத்த ஆயுத கப்பல்கள் மூலம் சென்று டெல்லி வரை வெள்ளையர்களின் ராணுவத்தை அடித்தார்கள். அப்போது வெள்ளையர்கள் பாரிய உயிரிழப்புக்களை சந்தித்தார்கள். வெள்ளையர்களுக்கு வெளிநாட்டில் இருந்து வரும் ஆயுத உதவிகளை தடுத்தார்கள் முக்கியமான கடல்வழி பாதை சுபாஷ் சந்திர போஸின் கட்டுபாட்டுக்குள் வந்தது. அதனால் தொடர்ந்து வெள்ளையர்களால் யுத்தம் செய்யஇயலாமல் ஆயுத பற்றாகுறை வந்தது. பொருளாதார பிரச்சனையும் அவர்களுக்கு வந்தது. தொடர்ந்து அவர்கள் இந்தியாவில் இருப்பது பற்றி கேள்விகுறியானது.

சுபாஷ்சந்திரபோஸ் ராணுவத்தோடு நடந்து கொண்டிருக்கும் சண்டையில் வெள்ளையர்கள் தோல்வி அடைந்து கொண்டே வந்தார்கள். இந்த தோல்வியை அவர்களால் ஒப்பு கொள்ள முடியவில்லை. அதனால் வெள்ளையர்கள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தார்கள். ஆனால் இந்தியா முழுவதும் சுபாஷ்சந்திரபோஸ் அவர்களின் ராணுவ போராட்டம் தெரியவந்தது .

அதனால் காந்தி வழியில் போராடி கொண்டிருந்தவர்களுள் பெரும்பாலானோர் சந்திரபோஸ் அவர்களின் பின்னால் செல்ல ஆரம்பித்தார்கள். இதனால் வெள்ளையர்களுக்கு தொடர்ந்து இந்தியாவில் இருக்க முடியாத நிலைமை ஏற்ப்பட்டது. ஆயுத போராட்டத்தை காந்தி அவர்கள் கடுமையாக எதிர்த்து வந்தார் சுபாஷ் சந்திர போஸ் மக்களை தவறான வழியில் கொண்டு செல்கிறார் என்றும் கூறி வந்தார்.

காந்தியின் ஆதரவாளர்களால் சுபாஷ்சந்திரபோஸ் காட்டி கொடுக்க பட்டார். அவரை கைது செய்து சிறையில் அடைத்தார்கள் வெள்ளையர்கள். ஆனால் சிறையில் வேலை செய்தவர்களின் உதவியுடன் சுபாஷ் சந்திர போஸ் தப்பித்து வந்தார். அதன் பிறகு ஆயுத போராட்டம் கடும் தீவிரம் அடைந்து வந்தது வெள்ளையர்கள் வெளியேறும் நிலைமையும் வந்தது.

ஆனால் நாங்கள் ராணுவ ரீதியாக தோற்கடித்து இந்தியாவில் விரட்டியடிக்க பட்டோம் என்று வந்து விடக் கூடாது என்பதற்காக. அப்படி ஒரு அவமானம் வந்து விட கூடாது என்பதற்காக காந்தியை நாடினார்கள் வெள்ளையர்கள்.

வெள்ளையர்கள் அகிம்சை ரீதியாக போராடும் காந்தியை சந்தித்து நாங்கள் உங்கள் அகிம்சை போராட்டத்தால் உங்களுக்கு சுதந்திரம் கொடுக்க போகிறோம் நாங்கள் இந்தியாவை விட்டு போக
போகிறோம் என்று சொன்னார்கள். காந்தியின் அகிம்சை பெயரை சொல்லி வெள்ளையன்
இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுத்து விட்டு வெளியேறினான்.

ஆனால் தற்போது இந்திய அரசாங்கமும் இந்திய மக்களும் சுபாஷ்சந்திரபோஸை மறந்து விட்டார்கள். அவரின் மகத்தான போராட்ட வரலாற்றை திட்ட மிட்டு மறைத்து விட்டார்கள். காரணம் காந்தியின் அகிம்சை போராட்டம் பாதித்து விடும் இந்த வரலாறு மறைந்து விடும் என்பதற்காக.

சிசேரியன் பெயர் விளக்கம்


*சுகபிரசவம் அல்லாமல் தன் தாயின் வயிற்றில் இருந்து கிழித்து வெளியே எடுக்கப்பட்டவர் ஜூலியஸ் சீசர். அதனால்தான் இந்த முறைக்கு ‘சீசரியன்’ என்று பெயர் வந்தது.


*நாம் இறந்த பிறகும் கண்கள் 6 மணிநேரம் பார்க்கும் தன்மையுடையது.

*பிறந்து ஆறு முதல் எட்டு வாரங்கள் வரை குழந்தைகள் அழுதால் கண்ணீர் வராது.

*நான்கு வயது குழந்தைகள் ஒரு நாளைக்கு சுமார் 400 கேள்விகள் கேட்கும்.

*கருவில் முதன் முதலில் உருவாகும் உறுப்பு - இதயம் மனிதன் இறந்து போனதும் முதலில் செயலிழக்கும் உறுப்பு - இதயம்.

*மனித உடல்களில் சுமார் 6 கோடியே 50 லட்சம் செல்கள் இருகின்றன.

*ஒரு தலைமுறை என்பது 33 ஆண்டுகள்.

*மார்க்கோ போலோ என்கிற சிகரெட் நிறுவனத்தின் முதல் உரிமையாளர் நுரையீரல் புற்று நோய் தாக்கி இறந்துப் போனார்.

*பழ மரங்களில் நீண்ட காலம் விளைச்சல் தருவது ஆரஞ்சு மரம். சுமார் 400 ஆண்டுகளாக தொடர்ந்து அது விளைச்சல் தரும்.

*உலகிலேயே மிக சிறிய மரம் குட்டை வில்லோ மரம். அதன் உயரம் இரண்டே அங்குலம் தான்.

*ஒரு தர்பூசணி பழம் இருந்தால் அதில் இருந்து 6 லட்சம் தர்பூச்சனை பழங்களை உற்பத்தி செய்து விடலாம்.

*பொதுவாக தாவரங்கள் நகராது. ஆனால் கிலாமிடோமொனாஸ் என்ற ஒரு செல் தாவரம் நகர்ந்து போகும் தன்மை உடையது.

*பச்சோந்தியின் நாக்கு தன் உடலின் நீளத்தை இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.

*நாக்கை நீட்ட முடியாத ஒரே விலங்கு முதலை.

*நீல திமிங்கலத்தின் எடை 22 யானைகளின் எடைக்கு சமம். அதன் இதயம் ஒரு சிறிய கார் அளவில் இருக்கும்.

*யானையின் கால் தடத்தின் நீளம் அளந்து, அதை ஆறால் பெருக்கி வரும் விடையே - யானையின் உயரம்.

*ஒரு புள்ளி அளவு இடத்தை 70,000 (எழுபதாயிரம்) அமிபாக்களால் நிரப்ப முடியும்.

*தரையில் முதுகு படும்படி உறங்கும் ஒரே உயிரினம் - மனிதன்.

*முன்னால் பின்னால் பக்கவாட்டில் என அனைத்து பக்கங்களிலும் பறக்க முடிந்த பறவை - தேன்சிட்டு.

*தேன்சிட்டு, மரங்கொத்தி, போன்ற பறவைகளுக்கு நடக்கத் தெரியாது.

வாழை இலையில் சாப்பிடுவது உண்மையில் நல்லதா?

இன்றைக்கு நாகரிகம் முன்னேறிவிட்டது என்று சொல்லி எத்தனையோ பாரம்பரியமான விஷயங்களை, நம் முன்னோர்கள் அற்புதமாய் கண்டுபிடித்து வைத்திருக்கிற விஷயங்களை தவறவிட்டு விட்டோம். அதில் ஒன்றுதான் இந்த வாழை இலையில் சாப்பிடுவது. வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உண்டாகின்றன? பார்ப்போம்.

முதலாவது வாழை ஒரு நல்ல நச்சு முறிப்பான் (Germ Killer) ஆகும். அதாவது நல்ல கிரிமிநாசினி என்றும் சொல்லலாம். சுடச்சுட பொங்கலையோ அல்லது சாதத்தையோ வாழையில் வைத்து சாப்பிடுவது மிகவும் நன்மை பயக்கும்.

தீக்காயம் பட்டவரை வாழை இலையில் கிடத்துவதை கண்டிருப்பீர்கள். வாலை இலை படுக்கையும், வாழைத்தண்டுச் சாறும், வாழைக்கிழங்கின் சாறும் நல்லதொரு நச்சு முறிப்பான்கள் ஆகும். இன்றைக்கும் கிராமங்களில் பாம்பு கடித்து விட்டால் முதலில் வாழைச்சாறு பருகக்கொடுப்பார்கள். நச்சு முறிந்துவிடும்.

காடும் காடு சார்ந்த பகுதிகளில் வாழ்ந்தவன்தான் தமிழன். எந்த வித நச்சும் முறிக்கப்படவேண்டும் என்பதற்காகத்தான் 4 பேர் கூடும் எந்த இடத்திலும் வாழைமரத்தை பயிரிட்டு தயாராக வைத்திருந்தான். ஆகவேதான் திருமணப் பந்தலிலும் வாழை மரம், இடுகாட்டுப் பாடையிலும் வாழை மரம், மக்கள் கூடும் எந்த திருவிழாக் கூட்டங்களிலும் வாழை மரம் என்று எங்கெங்கு காணினும் வாழை மரத்தை வைத்தான் நம் தமிழன். அதாவது நச்சு முறிப்புக்கு என்றுதான் அவ்வாறு செய்தான்.

இருட்டில் சமைக்க நேர்ந்து, சமைத்த உணவில் எதிர்பாராத விதமாக நச்சு கலந்திருந்தாலும், அல்லது வேறு எந்த வகையில் உண்ணும் உணவில் நச்சு கலந்திருந்தாலும் அதற்கான உடனடி நச்சு முறிப்பான் வாழை இலை மட்டுமே. அதனால்தான் வாழை இலையில் சாப்பாடு.

நாம் சாப்பிடும் தட்டை எவ்வளவு சுத்தப்படுத்துகிறோம்? தண்ணீர் விட்டு அல்லது வெந்நீர் விட்டு நன்றாக அலசி காயவைத்து எவ்வளவு சுகாதாரமாக பயன்படுத்துகிறோம். ஆனால் நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கு நோய்கள் வருகின்றன. ஆனால் வாழை இலை பயன்படுத்தி சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வருவதில்லை. இதை என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா?

நம்முடைய திருவிழாக்களிலும், திருமண வீடுகள், சடங்கு வீடுகள் மற்றும் எல்லா விழாக்களிலும் சாப்பிட வாழை இலை போடும்போது கவனித்திருக்கிறீர்களா? (இப்போ பெரும்பாலும் இந்த பழக்கம் மறைந்து பேப்பரில் சாப்பிடுகிற பழக்கம் வந்து விட்டது. என்னே பரிதாபம்?!) அவ்விடங்களில் எல்லாம் வாழை இலையை முற்றிலும் சுத்தப்படுத்தியா சாப்பிடுகிறோம். ஏதோ பெயருக்கு கொஞ்சம் தண்ணீர் தெளித்து விட்டு சாப்பிட ஆரம்பித்து விடுகிறோம்.

சிலருக்கு இலைகளில் தூசி, தும்புகள், அழுக்கு என்று என்னவெல்லாமோ இருக்கும். தெளிக்கும் தண்ணீர் கூடு எவ்வளவு அசுத்தமும் கிருமிகளும் நிறைந்ததாகக் கூட இருக்கும். ஆனால் பாருங்கள். அவ்விதமாய் சாப்பிடுபவர்களுக்கு ஏதாவது வியாதி வந்து அல்லது வயிற்றுக் கோளாறு வருகிறதா? இல்லையே. காரணம் என்ன தெரியுமா? வாழை இலையின் மகிமைதான். எவ்வித கிருமியையும் அழித்துவிடக் கூடிய அதன் மருத்துவத் தன்மைதான்.

ஆகவே மக்களே! இனியாவது தட்டுகளுக்கு பதில் கூடுமானவரை வாழை இலையைப் பயன்படுத்துங்கள். வியாதியின்றி வாழுங்கள்!

ஒவ்வொரு பத்து விநாடிகளுக்கும் ஒரு மனிதன் சிகரெட்டினால் மரண மடைகிறான்.


நீங்கள் புகைப் பிடிக்கும் பழக்கம் உள்ளவரா? அப்படியானால் இப்பதிவு உங்களுக்குத்தான். புகை பிடிப்பவர்கள் தங்கள் பணத்தையும் தங்கள் நுரையீரலையும் தாங்களே அழித்துக்கொள்கிறார்கள். மற்ற பழக்கங்களை விடுகிறது போல இப்பழக்கத்தை அவ்வளவு எளிதாக விட்டுவிட முடிகிறதில்லை. பலர் இப்பழக்கத்தை விட்டுவிட நினைக்கிறார்கள். ஆனால் முடிவதில்லை. ஜெயிக்கிற சதவீதத்தை விட தோற்கிற சதவீதமே மிக அதிகம்.

ஏன் பலர் இதில் தோல்வியடைகிறார்கள்?
மனஉறுதி இல்லாதது மட்டுமே இதற்குக் காரணமா? இல்லை இல்லை. நீங்கள் ஆயிரம் காரணம் சொல்லலாம். ஆனால் உண்மை என்னவென்றால் சிகரெட்டுக்கு அடிமையானவர்கள் அதன் பிடியிலிருந்து மீள்வதென்பது எமனின் பிடியிலிருந்து மீள்வதுதான்.

நம்முடைய மூளையில் நிறைய நுண்ணிய உணர்கடத்திகள் (Receptors) உள்ளன. அவற்றில் சில வகைதான் இந்த நிகோடின் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் உள்ளன. நீங்கள் புகை பிடிக்கும்போது சிகரெட்டின் நிகோடின் ஆனது இந்த உணர்கடத்திகளிடம்தான் முதலில் செல்கிறது. பின்னர் இந்த உணர்கடத்திகள் நமது மூளையின் மற்றொரு பகுதியான டோபாமின் (Dapomine) என்ற உணர்கடத்திகளுக்கு இந்த நிகோடினை அனுப்புகிறது. இந்த டோபாமின்கள் தான் நமக்கு சந்தோஷத்தை தருகிற உணர்கடத்திகளாகும். ஆனால் இந்த டோபாமின்கள் இந்த நிகோடினால் உண்டாகும் சந்தோஷத்தை வெகுநேரம் தன்னிடம் வைத்திருக்காமல் துப்பி விடுகிறது. மேலும் கொஞ்ச நேரத்தில் மறுபடியும் அந்த சந்தோஷத்திற்காக ஏங்கத் துவங்கி விடுவதால் நமக்கு மீண்டும் சிகரெட் பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் துளிர்விடுகிறது.

தற்போது விஞ்ஞானிகள் ஒரு புதிய உணர்கடத்திகளை (Verenicline) செயற்கையாக உற்பத்தி செய்ய தீவிரமான ஆராய்ச்சியில் இருக்கிறார்கள். இந்த வெரனிக்ளின்கள் மார்க்கட்டுக்கு வந்துவிட்டால் உங்கள் பாடு கொண்டாட்டம்தான். ஏனென்றால் அதன்பிறகு சிகரெட் விடுவதை எளிதில் நிறுத்திவிட முடியும். இவை டோபாமின்களின் சந்தோஷ உணர்வுகளின் உற்பத்தியை தடுத்துவிடக் கூடிய திறன் பெற்றவை. ஆகையினால் நீங்கள் சிகரெட் பிடித்தாலும் அதன் மூலம் திருப்தி கிடைக்காது. மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக இவற்றைப் பயன்படுத்தும்போது நிச்சயமாக நீங்கள் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிடுவீர்கள். (வேண்டாத பொண்டாட்டி கூட எத்தனை நாள் சார் வாழ முடியும்?). அதுவரைக்கும் காத்திருக்கப் போறீங்களா? மனஉறுதியோட இப்பழக்கத்தை விட முயற்சி பண்ணுங்க சார்.

சரி. இப்போது சிகரெட்டைக் குறித்த சில சுவாரஸ்யமான உண்மைகளை பார்க்கலாம்.

1. ஒவ்வொரு பத்து விநாடிகளுக்கும் ஒரு மனிதன் சிகரெட்டினால் மரண மடைகிறான்.

2. சிகரெட்டின் கழிவுகள் மண்ணில் மக்குவதற்கே 25 வருடங்கள் ஆகுமாம் (மக்கா ஜாக்கிரதை).

3. நீங்கள் புகைக்கும் பிடிக்கும் ஒவ்வொரு சிகரெட்டும் உங்களின் ஆயுளில் 11 நிமிடங்களை குறைத்துவிடுமாம்.

4. பதினெட்டாம் நூற்றாண்டுக்கு முன்னால் ஆங்கிலத்தில் சிகரெட் என்ற வார்த்தை கிடையாது. அதற்கு முன்பெல்லாம் சிகரட் போன்ற பானங்களை குடிப்பார்களாம். அதாவது பருகும் சிகரெட்.

5. மருத்துவ காரணங்களுக்காக கி.பி. 1559-ல் பிரான்சில் உள்ள பிரெஞ்சுத்தூதர் நிகோட் என்பவர்தான் இந்த நிகோடினை கண்டுபிடித்தார். (இப்படில்லாம் ஆகுமுன்னு தெரிஞ்சிருந்தா கண்டு பிடிச்சுருக்கமாட்டார் இல்ல)

6. தென் அமெரிக்க மக்கள் புகையிலையை 2000 வருடங்களுக்கு முன்பே உபயோகப்படுத்தியிருக்கிறார்கள். ஆனால் பிரேசில்காரர்கள்தான் இந்த சிகரெட்டை உலகத்திற்கு அறிமுகப்படுத்தியவர்கள்.

7. முதன் முதலில் இதை பிரபலமாக்கியவர்கள் ஐரோப்பிய மாலுமிகளே.

8. உலகிலேயே அதிகம் சிகரடெ; புகைப்பவர்கள் கிரீஸ் நாட்டுக்காரர்கள்தான். அங்கு வயதுக்கு வந்த ஒரு வாலிபன் வருடத்திற்கு 3000 சிகரெட்டுகளை புகைத்துத் தள்ளுகிறானாம். (நீங்க எப்படி?)

சரிங்க. சிகரெட்டை பத்தி நிறைய விஷயங்களைச் சொல்லிவிட்டேன். இதைப் படிச்ச நீங்க மனஉறுதியோட இந்த பழக்கத்தை விட்டுட்டீங்கன்னா ரொம்ப சந்தோஷப்படுவேன். செய்வீங்களா?

இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?


·         உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?
            விடை:  கிரண்ட்டப்

·         இதயத்தில் எதனை அறைகள் உள்ளன?
விடை:  4

·         பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?
விடை: ஓடோமீட்டர்

·         இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?
விடை: மார்ச் 21

·         மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?
விடை: கிவி


·         உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது?
விடை: அக்டோபர் 1

·         அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?
விடை: தண்ணீர்

·         உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
விடை: ஜூன் 5

·         பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்?
விடை: விஷ்ணு சர்மா

·         ஈக்களின் சுவை உணர் உறுப்பு எது?
விடை: நாக்கு

மீட்டருக்கு மேல் வாழ்த்துகிறோம்!


 'மீட்டருக்கு மேல் எக்ஸ்ட்ரா ஏதாவது போட்டு வாங்க முடியுமா?' என்று பரபரக்கும் ஆட்டோக்காரர் களுக்கு மத்தியில்... முதியோர், ஊனமுற்றோர்,பார்வையற்றோர் உள்ளிட்டோருக்கு இலவசமாகவே ஆட்டோ ஓட்டி சேவை
செய்துகொண்டிருக்கிறார் 27 வயது இளைஞரான பஞ்சதுரை!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஏரியாவில் அவரை சந்தித்தோம். வெகுளித்தனமாகவே
பேசினார். ''பக்கத்துல இருக்கிற புத்தூருதான் எனக்கு சொந்த ஊரு. சின்ன வயசுலருந்தே நம்மால முடிஞ்சவரைக்கும் அடுத்தவங்களுக்கு உதவியா இருக்கணும்னு நெனப் பேன். அந்த நெனப்புத்தான் இப்ப என்னை இங்க கொண்டாந்து நிறுத்தியிருக்கு.
ஆரம்பத்துல முறுக்கு யாவாரம்தான் பாத்தேன். அது கையைக் கடிச்சிருச்சு. அதுக்கப்புறம் என் பொண்டாட்டியோட நகைகளை அடமானம் வெச்சு அப்புடி இப்புடி புரட்டி இந்த 'ஷேர் ஆட்டோ'வை வாங்குனேன்.

'எந்தத் தொழில் செஞ்சாலும் அதால நாலு பேருக்கு நன்மை இருக்க ணும்'னு எங்க அம்மா அடிக்கடி சொல்லும். அந்த சொல்படிதான், இயலாதவங்களுக்கு மட்டும் கடந்த ஏழு வருஷமா இலவச ஆட்டோ சேவையை செஞ்சுக் கிட்டு இருக்கேன். இது ஒண்ணும் பெரிய சாதனை இல்லைங்க... ஏதோ என்னால முடிஞ்சது...'' என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அங்கு வந்த டிராஃபிக் போலீஸ்காரர் ஒருவர், ''ஏய்... இங்கெல்லாம் நிப்பாட்டக் கூடாது. வண்டிய எட்ரா...'' என்று அனல்
வீச்சாக வார்த்தைகளைக் கொட்டிவிட்டுச் சென்றார். வண்டியை இன்னொரு இடத்துக்கு நகர்த்திச் சென்று நிறுத்திய பஞ்சதுரை, ''நான் படிச்சது ஆறாப்புதாங்க. ஆனாலும், என் வாயிலருந்து இதுவரை ஒரு கெட்ட வார்த்தைகூட வந்ததில்லை... படிச்ச போலீஸ்காரர் எம்புட்டு மரி யாதையா(!) பேசிட்டுப் போறாரு பாத்தீங்களா..? என்னைப் பற்றி தெரிஞ்ச பல போலீஸ்காரங்க எந்த இடத் துல பாத்தாலும், 'வாப்பா துரை... கூல் டிரிங்க்ஸ் சாப்பு டுறீயா?'ன்னு கேக்குறாங்க. அவங்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு ஆளு. இதுமட்டுமா..? நான் இலவச சேவை செய்றதால ஆட்டோ ஸ்டாண்டுல எனக்கு டமில்லைன்னுட்டாங்க. அதுவும் நல்லதுதான். சும்மா ஒரே இடத்துல
நின்னுக்கிட்டு வெட்டி அரட்டை பேசிக்கிட்டு இருக்கதுக்கு நம்மபாட்டுக்கு சுத்திக்கிட்டே இருந்தோம்னா ஏதோ, முடியாத நாலு பேருக்கு உதவலாம் பாருங்க...'' என்று நிறுத்தினார்.

இவரது ஆட்டோவில் சல்லிக்காசு செலவில்லாமல் தினமும் சவாரி செய்யும் முதியவர்களான கமால் பாட்ஷா, சுப்பிரமணியன், மாயாண்டி ஆகியோர் நம்மிடம், ''நாங்க எல்லாருமே நித்தப் பொழப்புக்காக தினமும் உசிலம்பட்டிக்கு வந்து போறவங்க. ஒதவி ஒத்தாசைன்னா சொந்தப் புள்ளைககூட உதவாதுக. ஆனா இந்தத் தம்பி, எங்களை காலையிலயும் சாயந்த
ரமும் கூட்டிட்டுப் போயி கூட்டியாந்து விடுது. 'ஒரு அஞ்சு ரூபாயாச்சும் வங்கிக்கப்பா...'ன்னா கேக்க மாட்டேங்குது. மொத்தத்துல, தம்பியோட ஆட்டோ தான் இப்ப எங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் மாதிரி!'' என்றனர்.

''இவர் இப்படி இருந்தால் வீட்டுச் செலவை எப்படி சமாளிக்கிறீர்கள்?'' என்று பஞ்சதுரையின் மனைவியை சந்தித்துக் கேட்டோம். அதற்கு, ''வாட கைக்கு ஆட்டோ
ஓட்டுனா ஓனருக்கு வாடகைப் பணம் குடுப்போம்ல... அந்தக் காசு மக்களுக்கு பயன்படுதுன்னு நெனச்சுக்க வேண்டியதுதான்!'' - கணவரைக் காட்டிலும் மிகுந்த
அர்ப்பணிப்பு உணர்வோடு பேசினார் அவரது மனைவி ஜோதி லட்சுமி! அவரை பெருமையோடு ஏறிட்ட பஞ்சதுரை, ''நாலு பெரியவங்கள இலவசமா ஆட்டோ வுல கூட்டிட்டுப் போயி இறக்கி விடுறப்ப, 'நீ மகராசனா இருப்பே...'ன்னு வாழ்த்துறாங்களே... அதுக்கு முன்னாடி
பணங்காசெல்லாம் தூசுங்க...'' என்றார். பெயரில்தான் பஞ்சமெல்லாம்... மனசால் கோடீஸ்வரர்!

வழுக்கையை தடுக்க களிம்பு கண்டுபிடிப்ப (New lotion for prevent baldness)

 தலை வழுக்கையாகி விடுமோ என்ற கவலை இனி தேவையில்லை. வழுக்கை வராமல் தடுக்க புதிய களிம்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முதியோருக்கு மட்டுமல்லாமல், தற்போது இளைஞர்களிடமும் வழுக்கை என்பது அதிகரித்து வருகிறது. இதை தடுக்க வழிதெரியாமல், பலரும் அவதிப்படுகின்றனர். சிலர் செயற்கை முடிகளை நடும் தொழில்நுட்பத்தை பயன்படுத்து கின்றனர். வழுக்கை வராமல் தடுக்க என்ன வழி என்பது குறித்து பென்சில்வேனியா பல்கலைக்கழக தோல் சிகிச்சைத்துறை நிபுணர்கள் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டனர். இந்த ஆய்வின் மூலம், நம் உடலில், புரோஸ்டேட் சுரப்பியில் "பிஜிடி 2' என்ற "என்சைம்' தான் வழுக்கைக்கு காரணம் என்பதை கண்டறிந்துள்ளனர். இந்த என்சைமை தடுப்பதற்கான, களிம்பை தான் நிபுணர்கள் உருவாக்கி உள்ளனர். இது வியாபார ரீதியாக விற்பனைக்கு வருவதற்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் காத்திருக்கவேண்டும். இந்த களிம்பை( லோஷன்) தயாரித்து, சந்தைப்படுத்துவது குறித்து தற்போது மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை துவங்கியுள்ளது.

இண்டர்நெட் வேகத்தை அதிக படுத்த சில வழிகள் (Increase internet speed)!!!



எந்த விதமான வேகத்தடையும் இல்லாமல் அதிவேக இண்டர்நெட் பயன்படுத்த புதிய வழிமுறை.

இண்டர்நெட் இணைப்பு கிடைக்கும் முன் வரை நமக்கு இணைப்பு வேகம் என்றால் பெரிதாக ஏதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை ஆனால் பயன்படுத்திய சில நாட்களில் அல்லது சில மாதங்களில் நமக்கே தெரியும் இணைப்பு வேகம் இன்னும் வேகமாக இருந்தால் நன்றாக இருக்கும் என்று ஆனால் நாம் தேர்ந்தெடுத்து இருக
்கும் இண்டர்நெட் பிளான் அன்லிமிடட் என்பதால் அதற்கு தகுந்தாற் போல் தான் குறைவாக வேகம் இருக்கும் இந்தப்பிரச்சினையை நீக்கி முழு இண்டர்நெட் வேகத்தையும் பெற செய்யும் வழி முறையை இன்று பார்க்கலாம்.



இண்டர்நெட் இணைப்பின் வேகம் நாடுகளுக்கு நாடு வேறுபட்டாலும் ஒரு சில நாடுகளில்இணையத்தின் வேகம் எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை, இதற்காக நாம் பெரிதாக எதுவும் செய்ய வேண்டும் நம் கணினியில் ஒரு சிறிய மாற்றம் செய்து இணையத்தின் முழு வேகத்தையும் எந்தத்தடையும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
சாதாரணமாக அன்லிமிடட் இண்டர்நெட் ( Unlimited Internet) இணைப்பு தான் எல்லோருக்கும் கொடுக்கப்பட்டிருக்கும் இதில் இணைப்பு வேகம் குறைந்தபட்சமாக ( Limited Speed) இருக்கும் பல மணி நேரம் செலவு செய்துதான் பெரிய அளவிளான கோப்புகளை தறவிரக்க முடியும். இதைத்தவிர்த்து நம் கணினியில் ஒரு சில மாற்றம் செய்வதன் மூலம் முழு இண்டர்நெட் வேகத்தையும் பெறுவது எப்படி என்பதைப்பற்றி பார்க்கலாம்.

விண்டோஸ் எக்ஸ்பி ( Windows Xp ) கணினி வைத்திருப்பர்களுக்கு மட்டுமே இந்த முறை வேலை செய்யும், முதலில் Start Button -ஐ சொடுக்கி Run என்பதை தேர்ந்தெடுத்து சொடுக்க வேண்டும், Run விண்டோவில் gpedit.msc என்று தட்டச்சு செய்த்து Ok பொத்தானை சொடுக்க வேண்டும் அடுத்து வரும் திரையில் இணையத்தின் அபார வளர்ச்சி Computer Configuration என்ற மெனுவிற்கு அடியில் இருக்கும் Administrative Templates என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் sub menu -வில் Network என்பதை தேர்ந்தெடுத்து அதில் வரும் Sub menu வில் QoS Packet Scheduler என்பதை சொடுக்க வேண்டும். இதில் Limit Reservable Bandwidth என்பதை சொடுக்கி Enabled என்பதை தேர்ந்தெடுத்து அதற்கு அடியில் இருக்க்கும் Band width Limit என்பதில் 4% கொடுத்து Ok பொத்தானை சொடுக்கி சேமித்து வெளியே வரவேண்டியது தான் அடுத்து கணினியை ஒரு முறை restart செய்து பார்த்தால் இணைப்பின் வேகம் முழுமையாக தெரியும்


அருமையான தமிழ் தொலைக்காட்சி

 டிஸ்கவெரி தமிழ் தொலைக்காட்சி:
 இன்று தமிழ் மொழியை வளர்க்காமல் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் பல தமிழக தொலைகாட்சிகளில் நடுவிலே ஒரு அயல் நாட்டு தொலைக்காட்சி தமிழ் மொழியை அதன் அடிநுனியில் இருந்து மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த தொலைக் காட்சியை பார்த்து மற்ற அனைத்து தமிழ

தொலை காட்சிகளும் வெட்கி தலை குனியவேண்டும் .

ஆம் இந்த டிஸ்கவெரி தமிழ் தொலைக்காட்சி நாம் இழந்த , பழக்கத்தில் இல்லாத பல அரிய சொற்களை அறிவியல் தமிழில் மிக நேர்த்தியாக நம் மக்களுக்கு எடுத்துச் செல்கிறார்கள். இவர்களின் தமிழ் சொல்லாடல் நம்மை வியக்க வைக்கிறது . ஒளிக் கோபுரம், சதுப்பு நிலங்கள், தாழ் நிலங்கள் , அகழ்வு உந்து , சம ஈர்ப்பு விசைகள், மின் ஆற்றல்கள் என பல அருமையான தமிழ் மொழி பெயர்ப்புகள் . ஆங்கிலமும் தமிழும் கலந்து கலந்து நம்மை எரிச்சல் உண்டாக்கும் தமிழ் தொலைக் காட்சிகளுக்கு நடுவில் இந்த அலைவரிசை நமக்கு தேனமுது .

இவர்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துவதோடு நம் குழந்தைகள் , குடும்பத்தினர் அனைவரையும் இந்த தொலை காட்சியை பார்க்கச் செய்து அறிவியலையும் தமிழையும் ஒருங்கே கற்போம், கற்பிப்போம். இதை உங்கள் நண்பர்களிடமும் பகிருங்கள் தோழர்களே!!!


ஆய கலைகள் அறுபத்து நான்கும் எவை?

ஆய கலைகள் அறுபத்து நான்கு:

1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிபிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?

 "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் தகவல்கள் மூலம் தெரியவந்தது"... என்ற வாசகத்தை நீங்கள் அடிக்கடி படிக்கவும் கேட்கவும் நேரிட்டிருக்கலாம். இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 என்பது இன்னும் பரவலாக அனைவராலும் அறியப்படாத ஒன்றாக சிலர் மட்டுமே அறிந்ததாக இருக்கிறது.

அதாவது இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் எந்த ஒரு தகவலையும் பெறுவதற்காகத்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கொண்டு வரப்பட்டது. இந்த சட்டமானது 2005-ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் முதன்மையான நோக்கமே, அரசாங்கத்திடம் இருக்கும் தகவல்கள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதுதான். ஜம்மு காஷ்மீரைத் தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.

என்ன மாதிரியான தகவல்களைப் பெற முடியும்?

- ஒரு தனிநபர், அரசாங்கம் தொடர்பான எந்த ஒரு தகவலையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

- அரசாங்கத்தின் எந்த ஒரு ஆவணத்தையும் கேட்டுப் பெறலாம்

- அரசாங்கத்தின் ஆவணங்களை தனி நபர்கள் ஆய்வு செய்யலாம்

- அரசாங்கத்தின் பணிகளை அவர்களால் கண்காணிக்கவும் முடியும்

- எந்த ஒரு அரசாங்கப் பணியினது மாதிரிகளையும் பெற்றுக் கொள்ள உரிமை இருக்கிறது.

யார் இந்த தகவல்களைத் தருவது?

அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையும் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை இந்தப் பணிக்காகவே நியமித்திருக்கிறது. பொது மக்களுக்கான தகவல் அளிக்கும் அதிகாரி (Public Information Officers) என்ற பொறுப்பில் அவர்கள் நியமிக்கப்படுள்ளனர். தகவல் அறியும் சட்டத்தின் கீழான விண்ணப்பங்களை இவர்கள் ஏற்று உரிய பதில்களை சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற்று அனுப்பி வைப்பர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்த விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்காமல் விட்டால் இந்த அத்காரிதான் பொறுப்பானவர். இதேபோல் தவறான தகவல் கொடுத்தாலும் அதற்குரிய தண்டனை அல்லது அபாரதத்துக்குரிய நபராகவும் இவரே இருப்பார். இவர் உரிய தகவல்களைத் தராத நிலையில் தகவல் அறியும் ஆணையத்திடம் ஒருவர் முறையீடு செய்யலாம்.

ஆர்.டி.ஐ. விண்ணப்பிப்பது எப்படி?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறுவதற்கு என தனியாக எந்த ஒரு விண்ணப்பமும் இல்லை. ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொடுத்தாலே போதும். இருப்பினும் தகவல் கோருபவரின் பெயரும் தொடர்பு முகவரியும் மிகவும் அவசியமானது. இந்த இரண்டையும் நீங்கள் கொடுக்காமல் விட்டால் உங்களால் எந்த ஒரு தகவலையும் பெற முடியாது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்போர் ரூ.10 செலுத்த வேண்டும். வங்கி வரைவோலையாகவோ, பணமோ செலுத்தி உரிய ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம். ஒரு பக்க ஆவணத்துக்காக ரூ.2 செலுத்த வேண்டும். இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பத்தை உள்ளூர் அஞ்சலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இதற்கான பிரத்யேக கவுண்ட்டரில் செலுத்தலாம்.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்காலட்தில் இணையதளம் மூலமாகவும் தகவல்களைப் பெற முடியும். இன்னும் சில இடங்களில் கால் செண்டர்களும் கூட அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கான இணையதளங்கள்:

http://www.righttoinformation.gov.in
http://www.rtiindia.org

இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க http://www.rtination.com என்ற தளத்தைப் பார்வையிடலாம்.

ஓட்டுநர் உரிமம், சாலை மேம்பாடு, அடிப்படை கட்டமைப்பு, பாஸ்போர்ட்டுக்கான போலீசாரின் ஆய்வுப் பணி மற்றும் ஊழல் புகார்கள் ஆகியவை குறித்தே பெரும்பாலானோர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கின்றனர்.

சென்னையில் தாய்ப்பால் வங்கி: வேலைக்கு செல்லும் பெண்களுக்கு வரப்பிரசாதம் (Milk bank in chennai)

பேறு கால விடுமுறை முடிந்து, மீண்டும் பணிக்கு சேரும் பெண்கள், தங்களது கைக்குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லையே என்று இனி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

ரத்த வங்கி, கண் வங்கி போன்று தாய்ப்பால் வங்கியும் வந்து விட்டது. சென்னையில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனை தாய்ப்பால் வங்கி திட்டத்தை அறிமுகப்படுத்தி இருக்கிறது.

குழந்தைகள் ஆரோக்கியமாக வளர, கட்டாயம் 2 வயது வரை தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்று டாக்டர்களும், உலக சுகாதார அமைப்பும் பரிந்துரைத்துள்ளனர். ஆனால் பணிக்கு செல்லும் தாய்மார்களால் பணிபுரியும் இடங்களில் குழந்தைகளுக்கு போதிய அளவு தாய்ப்பால் கொடுக்க முடிவதில்லை. அந்த குறையை இந்த தாய்ப்பால் வங்கி ஓரளவுக்கு தீர்த்து வைக்கும். 

இதுபற்றி ஸ்ரீராமச்சந்திரா மருத்துவ மையத்தின் குழந்தைகள் நலத்துறை தலைவர் டாக்டர் எல்.என். பத்மாஸனி கூறியதாவது:- 

பால் சுரப்பு ஆதரவு திட்டம் என்ற இந்த திட்டத்தை ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும், கார்பரேட் நிறுவனங்களிலும் செயல்படுத்த முடியும். அதற்கு தேவை குளிர்சாதன பெட்டியுடன் (பிரிட்ஜ்) கூடிய ஒரு சிறிய அறை, வசதியாக அமரக்கூடிய ஒரு சேர். மார்பில் இருந்து பாலை உறிஞ்சி எடுக்க கூடிய தரமான பம்ப் மற்றும் நோய்க்கிருமி தடுப்பு கருவி (ஸ்டெரிலைசர்) ஆகியவைதான். 

இப்படி பெறப்பட்டு சேகரித்து வைக்கப்படும் தாய்ப்பாலை தேவைப்படும்போது மோட்டார் பொருத்தப்பட்ட பம்ப் மூலம் எடுத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். அப்படி பெறப்படும் தாய்ப்பால் சாதாரண சீதோஷண நிலை கொண்ட அறையில் 2 மணி நேரமும், குளிர்சாதன பெட்டியில் வைத்திருந்தால் 7 நாட்கள் வரையும் கெடாமல் இருக்கும். 

பொது இடங்களில் குழந்தைகளுக்கு நேரடியாக தாய்ப்பால் புகட்ட முடியாத தாய்மார்களுக்கு குறிப்பாக பணிபுரியும் பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம் ஆகும். 

இவ்வாறு அவர் கூறினார். 

தாய்ப்பால் வங்கி திட்டத்தை செயல்படுத்த தனியார் நிறுவனங்களுக்கு ஆஸ்பத்திரி நிர்வாகமே பயிற்சி அளித்து உதவுகிறது. இதேபோல தாய்ப்பால் புகட்டும் பெண்களுக்கு, இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இலவச பயிற்சி முகாம்களும் நடத்தப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு 99400 37219 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள் (ரகசியங்கள் )


திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன
அவைகளில் சில.........

1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.

2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.

4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.
   
                                   
திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.

1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.

2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.

3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.

6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.

7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.

8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.

9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.

10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.



                         

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.

12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.

13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.

14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.

15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.

17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.

18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.

19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.

20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.

22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.

23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.

24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.

25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.

25. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.

26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.

27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.

28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.






Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More