நீங்கள் விரும்பும் வடிவில் மரம் வளர்க்கலாம்!

       மனிதர்களால் முடியாதது எதுவும் இல்லை இந்த உலகில் என்பதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த மரம் வளர்க்கும் கலை. இந்த கலையின் பெயர் "மரம் வடிவமைத்தல்" (Pooktre (or) tree training). இந்த பயிற்சின் மூலம் நாம் மரங்களை பல பயனுள்ள, கலை நயமிக்க உருவங்களில் வளர்க்கலாம். 
அதில் சில கண்கவரும் மரங்கள் உங்கள் பார்வைக்கு ....
பைக் - 2 வீலர் தொலைந்து போனால் உடனே கண்டுபிடிக்க ஓர் எளிய வழி!.

                திருடு போன உங்க பைக்கை உடனடியாக கண்டுபிடிக்க ஓர் எளிய வழி இருக்கிறது. ஓர் பழைய மொபைல் அல்லது ரூ.1000க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஒரு மொபைல்போன் போதும். திருடு போன பைக்கை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். அதற்கான வழிமுறைகள் தொடர்ந்து காணலாம்....


குறைந்த விலையில் நீடித்த ஸ்டான்ட் பை பேட்டரி கொண்ட மொபைல்போன் ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். சிறந்த நெட்வொர்க் கொண்ட தொலைதொடர்பு சேவை வழங்கும் நிறுவனத்தின் சிம் கார்டு ஒன்றையும் வாங்குங்கள். மொபைல்போனை சைலண்ட் மோடில் வைப்பதோடு, வைப்ரேஷன் மோடில் இருந்தால் அணைத்துவிடவும்.

மொபைல்போன் மீது தூசு, தும்பட்டிகள் படியாதவாறு பிளாஸ்டிக் பேப்பரை சுற்றிவிடுங்கள். மற்றொரு மொபைல்போனிலிருந்து அந்த போனுக்கு அழைத்து சரியாக இயங்குகிறதா என்று சோதித்து பாருங்க.அந்த மொபைல்போனை பைக்குகுள் எளிதில் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பான இடத்தில் வைத்துவிடுங்க அவ்வப்போது, பேட்டரி சார்ஜ் செய்ய எடுப்பதற்கு ஏதுவான இடத்தில் வைத்துவிடுங்க.

வாரத்திற்கு இருமுறையாவது பேட்டரி சார்ஜ் செய்ய வேண்டும். ஒருவேளை, பைக் திருடு போனால், 100 என்ற அவசர எண்ணில் போலீசாரை தொடர்பு கொண்டு மொபைல்போன் விபரத்தை தெரிவித்தால், 5 நிமிடங்களில் உங்களது பைக் வைக்கப்பட்டிருக்கும் மொபைல்போனின் ஐஎம்இஐ நம்பரை வைத்து பைக் இருக்கும் இடத்தை எளிதாக கண்டுபிடித்து விடலாம்...!


உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More