கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...!


நண்பன் 1: "போலி" டாக்டருன்னு தெரிஞ்சும் ஏன்டா, அந்த டாக்டர் கிட்ட போன?

நண்பன் 2: டாக்டர் போலியா இருந்தாலும், அங்க இருக்குற நர்ஸ் "ஜாலியா" பேசுறாடா..அதான்..

*************************




கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...! ... 

அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?




*************************

காக்கா ஏன் இந்தியா மேப்ப ரொம்ப நேரமா பார்த்துக்கிட்டிருக்கு?

ஏன்னா…அதுல "வட" இந்தியா இருக்கே…!

*************************

என்னதான் பூமி சூரியனைச் சுற்றிச் சுற்றி வந்தாலும் ..... பூமிக்குச் சூரியன் பிக் அப் ஆகாது.

*************************

நாம மத்தவங்களுக்கு உதவத்தான் பிறந்து இருக்கோம்.... சரி ... அப்ப மத்தவங்க எதுக்குப் பிறந்து இருக்காங்க?

*************************

அப்பா அடிச்சா வலிக்கும், அம்மா அடிச்சா வலிக்கும், ஆனா .. சைட் அடிச்சா?

*************************

இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க. ..

நீங்க கேட்டீங்களா? ... 

நான் கேக்கல. அவங்களாதான் சொன்னாங்க

*************************

மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்... 
நல்லவேளை…நான் கொழந்தையாத் தான் பொறந்தேன்

*************************

நோயாளி : ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்... நீங்க எப்ப ஃப்ரீ?

டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது... பீஸ் வாங்குவேன்.....

*************************

தலைவர்-என்னப்பா மேடையில ஓடா வந்து விழுது?

தொண்டர்-ஓட்டை அள்ளி வீசுங்க என்பதை தப்பா புரிஞ்சுகிட்டாங்க..

*************************

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More