நண்பன் 1: "போலி" டாக்டருன்னு தெரிஞ்சும் ஏன்டா, அந்த டாக்டர் கிட்ட போன?
நண்பன் 2: டாக்டர் போலியா இருந்தாலும், அங்க இருக்குற நர்ஸ் "ஜாலியா" பேசுறாடா..அதான்..
**********************
பஸ் டிரைவர்: யோவ்…வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா..?
ராம்: ச்சேச்சே…சின்ன வீட்டுக்குப் போறதை எப்படி சொல்ல முடியும்..!!!???
**********************
ஜோதிடர் : உங்க ஜாதகப்படி, இப்ப பணத்துக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஒரு மூன்று மாதம் பல்ல கடிச்சிக்குங்க… அப்புறமா உங்களுக்கு கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.
வந்தவர் : எது பல்லா?
**********************
மனைவி: உங்களை கணவராக அடைய நான் கொடுத்து வைத்தவள்...
கணவன்: உங்கப்பாகிட்ட வரதட்சணை வாங்கியதை குத்திக் காட்டிப் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்
**********************
கணவர் ஃபோனில்: டார்லிங், ராத்திரி என்ன டிபன்?
கோபத்துடன் மனைவி: ஒரு டம்ளர் விஷம்!...
கணவர்: ஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ.
**********************
அப்பா: டேய்! ஏண்டா இண்டர்வியுக்கு போகலையா?
மகன்: ச்சீ..சீ.. நாலு பேரு கேள்வி கேட்கற மாதிரி நடக்க கூடாதுன்னு நீங்கதானே சொன்னீங்க!
**********************
அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?
பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க...
**********************
நண்பன்1-நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா...
பெண் அவ்வளவு அழகா?
நண்பன்2-இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா..
**********************
டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க?
நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?
**********************
நண்பன்1: நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்கும் நடந்த சண்டைல, யாருக்கு பின்னாடி நீ நின்ன?"
நண்பன்2: "பீரோ பின்னாடி"
0 comments:
Post a Comment