செந்தில் : மொளகா பொடி எதுல இருந்து வருது அண்ணே?


ந‌ண்ப‌ர் : உங்க‌ செல் போனை எத‌ற்கு ப‌ல் டாக்ட‌ர்கிட்ட‌ காட்டுனீங்க‌ ?

ச‌ர்தார் : புளூ டூத் இருக்கான்னு செக் ப‌ண்ணத்தான்...

ந‌ண்ப‌ர் :?!?!?

*********************************

ஒரு கிரிக்கெட் மைதான‌த்தில் ...

காவ‌ல‌ர் : சார் கிரிக்கெட் போட்டிதான் முடிந்து போச்சே இன்ன‌மும் ஏன் இங்கே உக்கார்ந்து இருக்கிரீர்க‌ள்?

ச‌ர்தார் : போட்டியின் ஹைலைட் பார்க்குர‌துக்காக‌ காத்திருக்கிறேன்.

காவ‌ல‌ர் : ?!?!?

*********************************

கமல் ரஜினியை நேர் காண்கிறார்.

கமல் : மிஸ்டர் ரஜினி உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று 10 எளிமையான கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டும் , அல்லது ஒரே ஒரு கடினமான கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். எதனை நீங்கள் தேர்ந்து எடுக்கிறீர்கள்?

ரஜினி : ஒரு கடினமான கேள்வி. 

கமல் : இவற்றில் எது முதலில் வருகிறது பகல் அல்லது இரவு?

ரஜினி : பகல்தான் முதலில் வருகிறது .

கமல் : எப்படி?

ரஜினி : கமல் கண்ணா, நீங்க‌ள் ஒரு கேள்வி கேட்ப‌தாக‌த்தான் ஒப்ப‌ந்த‌ம். இது எப்ப‌டி இருக்கு?

*********************************

 செந்தில் : அண்ணே எனக்கு ஒரு சந்தேகம்.

கவுடமணி : சொல்லுடா கப்ளிங் தலையா.

செந்தில் : மொளகா பொடி எதுல இருந்து 
வருது அண்ணே? 

கவுடமணி : மொள‌காயிலிருந்து

செந்தில் : ம‌ஞ்ச‌ள் பொடிண்ணே?

கவுடமணி : ம‌ஞ்ச‌ள்ள‌ இருந்து.

செந்தில் : அப்போ ப‌ல்பொடிண்ணே?

கவுடமணி : ? ! ?!?

*********************************

இரண்டு சர்தார்கள் எகிப்து மம்மியை பார்த்து,

முதல் சர்தார் : பாரு எத்தனை பாண்டேஜூன்னு பாரு, பக்கா அக்சிடென்ட் கேஸ்.

இரண்டாவது சர்தார் : ஆமாம் பாருலாரி நம்பர் எழுதி இருக்காங்க பாரு BC1600.

*********************************

சர்தார் : எங்க வீட்டு (Milk) மில்க்க பூனை குடிச்சிடிச்சு .

நண்பர் : (Cat ) கேட்டா குடிச்சது ?

சர்தார் : இல்ல கேக்காமத்தான் குடிச்சது .

*********************************

பெற்றோர் : ஏன் டீச்சர் என் பொண்ணு கிளாமரா வர்றான்னு சொன்னிங்களாமே, அவள் யுநிபாம்ல தானே வர்ரா?

ஆசிரியர் : நாசமா போச்சு, நான் கிராமர் வரலைனு தான் சொன்னேன்.

*********************************

தந்தை: எப்பவும் உன்னை முட்டாள்னு சொல்ற உங்க மிஸ், நான் கணக்கு போட்டு கொடுத்தப்புறம் என்ன சொல்றாங்க?

மகன்: இப்ப முட்டா பய மகனேன்னு திட்ட்ரங்க டாடி. 

*********************************

மனைவி: இந்த வாரம் சினிமா பார்த்தோம், அடுத்த வாரம் ஷாப்பிங் போகலமாங்க?

கணவன்: தாராளமா போகலாம். ஆனால் அதற்கு அடுத்த வாரம் கண்டிப்பா சிவன் கோவிலுக்கு போகணும். 

மனைவி: ஏன்?

கணவன்: பிச்சை எடுக்கத்தான்

*********************************

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More