இறைவழிபாட்டில் தேங்காய் மற்றும் வாழைப்பழம் முக்கிய பங்கு வகிப்பது ஏன் தெரியுமா?

 வாழைப்பழம், தேங்காய் ஆகிய இரண்டுமே நம்முடைய எச்சில் படாதவை ஆகும். முக்கனிகளான மாம்பழம், பலாப்பழம், வாழைப்பழம் ஆகியவற்றில் வாழைப்பழத்தை தவிர மற்ற பழங்களை சாப்பிட்டுவிட்டு கொட்டையை ஊன்றினால் முளைக்கும்.ஆனால் வாழைப்பழத்தை உரித்தோ, முழுமையாகவோ வீசினாலும் கூட மீண்டும் முளைப்பதில்லை. இது பிறவியில்லாத நிலையான முக்தியை குறிக்கிறது. இறைவனிடம் நமக்கு மீண்டும் பிறவாத நிலைவேண்டும் என்பதை உணர்த்தவே இப்படி வாழைப்பழம் படைக்கப்படுகிறது. வாழைக்கன்று மரமாகி, அந்த மரத்திலிருந்து வாழைப்பழம் கிடைக்கிறது. அதே போலத்தான் தேங்காயும், தேங்காயை சாப்பிட்டுவிட்டு தேங்காய் ஓட்டை போட்டால் அது முளைக்காது. முழுத்தேங்காயிலிருந்து தான் தென்னை மரம் முளைக்கும். இப்படி எச்சில் படாத, மீதமாகாத பொருளான வாழைப்பழம், தேங்காயை இறைவனுக்கு படைத்து அவனது அருளைப்பெறும்படி முன்னோர்கள் நமக்கு உணர்த்தியுள்ளனர்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More