சார், காந்தியை பற்றி தெரியும், ஆனால் ஜெயந்தியை பற்றி தெரியாது


“நான் மின்சாரத்துறையில வேலை செய்யுறேன்”

“அப்ப வேலையே இல்லைன்னு சொல்லுங்க”

*********************

வாத்தியார் : காந்தி ஜெயந்தியை பத்தி உனக்கு தெரிந்ததை சொல்லு?

மாணவன் : சார், காந்தியை பற்றி தெரியும், ஆனால் ஜெயந்தியை பற்றி தெரியாது சார்.

*********************

பையன்: எனக்கு வேலை இல்லைனு தெரிஞ்சும் எப்படி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க.. ??

பொண்ணு: பையன் என்ன பண்ணுறான்னு கேட்டாங்க, வயத்துல உதைக்குறானு சொன்னேன்... அதான்....!!!???

*********************
                                     
                                         
நான் இப்ப தினமும் வாக்கிங் போறேன்னா, அதுக்கு நம்ம டாக்டர்தான் காரணம்.

ஏன்... ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா..?

நீ வேற... முதல்ல கார்ல வந்துட்டிருந்தேன். ட்ரீட்மெண்ட்டுக்குச் செலவு செஞ்சு செஞ்சு, இப்ப நடக்கும்படி ஆயிடுச்சு!





*********************

வீட்ல ரெய்டு நடக்கற நேரத்துல தலைவர் தன்னோட மூன்றாவது
மற்றும் நான்காவது மகன்களை எங்கேயாவது போய் ஒளிஞ்சுக்க சொல்றாரே…ஏன்?

கணக்கில் வராத பிள்ளைகளாம்…!

*********************

மொபைல்ல பேசும்போது அவர் ஏன் தள்ளாடுறார்?

அவரோட போன்ல பேலன்ஸ் இல்லையாம்…!

*********************

நண்பர் : “ உங்க படத்தில, சம்பந்தமே இல்லாமே, பாட்டி ஒரு பையனுக்கு கதை சொல்ற மாதிரியான சீனை எதுக்கு சார் சேர்த்திருக்கீங்க?”

டைரக்டர்: “ படத்தில கதையே இல்லைன்னு யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க…!” ...

*********************

"உங்களுக்கு என்ன பிரச்சினை?"

"லுங்கியைப் பல்லால கவ்விக்கிட்டு பேன்ட் கழட்றப்ப கொட்டாவி வராம இருக்க என்ன செய்யணும் டாக்டர்?

*********************

வடிவேல் : "அஜித்தோட மங்காத்தா பாத்தியா...?"

பார்த்தீபன் : "அஜித்தோட பாக்கல...தனியா போய் தான் பாத்தேன்"

வடிவேல் : "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

*********************

அரசியல்வாதி : புனைப்பெயரில் பதிவுகள் எழுதலாமாம்...ஆனால் நான் பினாமி பேர்ல சொத்து எழுதி வச்சா மட்டும் குத்தமாம்!

*********************

"டாக்டர் தெரியாம.. காசை முழுங்கிட்டேன்''

"என்ன காசு? ஒரு ரூபாயா... ரெண்டு ரூபாயா... அஞ்சு ரூபாயா?''

"அதான் தெரியாம முழுங்கிட்டேன்னு சொன்னேனே டாக்டர்''

*********************

"உனக்கு ஏது 100 ரூபாய்?''"

"ஓர் இடத்தில பாடினேன். 20 ரூபாய் கொடுத்தாங்க''

மீதி 80 ரூபாய்?''"

பாடுறதை நிறுத்துறதுக்குக் கொடுத்தாங்க''

*********************

மனைவி:- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு 

கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..

கணவன்:- சொன்னேனே... மறந்துட்டியா...

மனைவி:- எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை..

கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..

மனைவி:-????????

*********************

உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக "தமிழ் மொழி "தென்பட்டது - கிரெம்ளின் மாளிகை: (Tamil at Kremlin Palace)

ரசிய அதிபர் மாளிகையில் தமிழ்!

தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நாம் நிறைய சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு தமிழ் பேச்சும் எழுத்தும் நம்மை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரசிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகு தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரசியத்திலும், இரண்டாவதாக அண்டைநாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.

                       

தமிழைவிட எத்தனையோ உலகமொழிகள் பெரும்பாலான மக்களால் பேசபடுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம் , தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக உள்ளது.

"உலகில் ஆறு மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ்,சமற்கிருதம். இந்த ஆறு மொழிகளில் நான்குமொழிகள் இன்று வழக்கில் இல்லை.

இலக்கிய, வரலாற்று செழுமையான மொழி. எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக "தமிழ் மொழி "தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை" என தமிழில் எழுதினோம்" என்று கூறுகிறார்கள்.

வெளிநாட்டினருக்குக் கூட தமிழின் அருமை பெருமை தெரிந்திருக்கிறது. நமக்குத்தான் தெரியவில்லை..

வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கூட நம் தமிழின் பெருமை தெரிந்து உள்ளது. ஆனால் நாமோ'தமிழில் எழுதுங்கள் என்பதற்கு ஒரு கருத்தரங்கம் நடத்திக்கொண்டு இருக்கிறோம்'.

சிந்தியுங்கள்........தமிழர்களே.....!

காட்டு பகுதியில் ஐ டி வாழ்க்கை - Life in IT - The Wild side..Enjoy !!!


மேனேஜர் வேட்டை ஆரம்பம்(Manager hunting for a new Resource)



வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் ஒன்றாக குழுப்பணி! (Team Work ! Together we fall , together we rise)



சோதனையாளர் ஒரு பிழையை தவறவிட்ட பிறகு(Tester after missing a defect ! )


ஒரு உருவாக்குநர் அலுவலகத்தில் ஏமாற்றமான நாளுக்கு பிறகு ஓய்வெடுத்தல்(A developer relaxing after a frustrating day at office)


ஒரு குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப பேச்சு(A typical tech talk)


மேலாளருடன் செயல்திறன் ஆய்வு கூட்டம்(Performance Review meeting with manager)


வாடிக்கையாளருடன் பேசும் பொழுது(Need not say .A typical onsite Client!)


ஒரு குறிப்பிடத்தக்க அணித் தலைவர்(A typical Team Lead!)



குழுவின் உல்லாச பிரயாணம்(Team outing !)


உருவாக்குபவர் ஒரு பிழை காணப்பட்ட பிறகு! (Developer after a bug is found in code!)


அலுவலகத்தில் மிகையான நேரம் (Overtime at Office !)


விடுப்பு விண்ணப்பிக்கும் பொழுது (Applying for Leave)


விடுப்பு விண்ணப்பத்துக்கு மேலாளர்களின் எதிர்வினை (Managers reaction on Leave application)


கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...!


நண்பன் 1: "போலி" டாக்டருன்னு தெரிஞ்சும் ஏன்டா, அந்த டாக்டர் கிட்ட போன?

நண்பன் 2: டாக்டர் போலியா இருந்தாலும், அங்க இருக்குற நர்ஸ் "ஜாலியா" பேசுறாடா..அதான்..

*************************




கொசு கடிக்காம இருக்க இந்த க்ரீமைத் தடவுங்க...! ... 

அதெப்படி டாக்டர், ஒவ்வொரு கொசுவையும் பிடிச்சி இந்தக் க்ரீமைத் தடவுறது?




*************************

காக்கா ஏன் இந்தியா மேப்ப ரொம்ப நேரமா பார்த்துக்கிட்டிருக்கு?

ஏன்னா…அதுல "வட" இந்தியா இருக்கே…!

*************************

என்னதான் பூமி சூரியனைச் சுற்றிச் சுற்றி வந்தாலும் ..... பூமிக்குச் சூரியன் பிக் அப் ஆகாது.

*************************

நாம மத்தவங்களுக்கு உதவத்தான் பிறந்து இருக்கோம்.... சரி ... அப்ப மத்தவங்க எதுக்குப் பிறந்து இருக்காங்க?

*************************

அப்பா அடிச்சா வலிக்கும், அம்மா அடிச்சா வலிக்கும், ஆனா .. சைட் அடிச்சா?

*************************

இன்று மழை வரும்னு செய்தியில சொன்னாங்க. ..

நீங்க கேட்டீங்களா? ... 

நான் கேக்கல. அவங்களாதான் சொன்னாங்க

*************************

மனுஷனாப் பொறந்தா வாழ்க்கையில ஏதாவது பெரிசா சாதிக்கணும்... 
நல்லவேளை…நான் கொழந்தையாத் தான் பொறந்தேன்

*************************

நோயாளி : ஹலோ டாக்டர்... உங்களை வந்து பார்க்கணும்... நீங்க எப்ப ஃப்ரீ?

டாக்டர் : எப்ப வந்தாலும் ஃப்ரீ கிடயாது... பீஸ் வாங்குவேன்.....

*************************

தலைவர்-என்னப்பா மேடையில ஓடா வந்து விழுது?

தொண்டர்-ஓட்டை அள்ளி வீசுங்க என்பதை தப்பா புரிஞ்சுகிட்டாங்க..

*************************

வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க...


நண்பன் 1: "போலி" டாக்டருன்னு தெரிஞ்சும் ஏன்டா, அந்த டாக்டர் கிட்ட போன?

நண்பன் 2: டாக்டர் போலியா இருந்தாலும், அங்க இருக்குற நர்ஸ் "ஜாலியா" பேசுறாடா..அதான்..

**********************

பஸ் டிரைவர்: யோவ்…வீட்ல சொல்லிட்டு வந்துட்டியா..?

ராம்: ச்சேச்சே…சின்ன வீட்டுக்குப் போறதை எப்படி சொல்ல முடியும்..!!!???

**********************

ஜோதிடர் : உங்க ஜாதகப்படி, இப்ப பணத்துக்கு கொஞ்சம் கஷ்டமாத்தான் இருக்கும். ஒரு மூன்று மாதம் பல்ல கடிச்சிக்குங்க… அப்புறமா உங்களுக்கு கொட்டோ கொட்டுன்னு கொட்டும்.

வந்தவர் : எது பல்லா?

**********************

மனைவி: உங்களை கணவராக அடைய நான் கொடுத்து வைத்தவள்...

கணவன்: உங்கப்பாகிட்ட வரதட்சணை வாங்கியதை குத்திக் காட்டிப் பேசாதேன்னு எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்

**********************

கணவர் ஃபோனில்: டார்லிங், ராத்திரி என்ன டிபன்?

கோபத்துடன் மனைவி: ஒரு டம்ளர் விஷம்!...

கணவர்: ஓகே டியர். நான் வர கொஞ்சம் லேட்டாகும். நீ சாப்பிட்டு படுத்துக்கோ.

**********************

அப்பா: டேய்! ஏண்டா இண்டர்வியுக்கு போகலையா?

மகன்: ச்சீ..சீ.. நாலு பேரு கேள்வி கேட்கற மாதிரி நடக்க கூடாதுன்னு நீங்கதானே சொன்னீங்க!

**********************





அப்பா: என்னடா! டெஸ்ட்ல பூஜ்யம் மார்க் வாங்கிட்டு வந்திருக்க?

பையன்: அது பூஜ்யம் இல்லப்பா... வாத்தியார் நான் நல்லா படிச்சதுக்காக "O" போட்டாங்க...







**********************

நண்பன்1-நேற்று பெண் பார்க்கப் போன இடத்தில மயங்கி விழுந்திட்டேன்டா... 
பெண் அவ்வளவு அழகா? 

நண்பன்2-இல்லடா... விஷயம் தெரிந்து என் மனைவியும் அங்கே வந்திட்டா..

**********************


டாக்டர்! நான்தான் பிழைத்து விட்டேனே? பின்ன எதுக்கு ஸ்கேன் எடுக்க சொல்றீங்க? 

நீங்க பிழைச்சா போதுமா? ஸ்கேன் சென்டெர் வச்சுருகிற என் மச்சான் பிழைக்க வேண்டாமா?


**********************

நண்பன்1: நேத்து உன் மனைவிக்கும், உன் அம்மாவுக்கும் நடந்த சண்டைல, யாருக்கு பின்னாடி நீ நின்ன?" 

நண்பன்2: "பீரோ பின்னாடி"

பொறுமையை பொறுமை இழக்கச் செய்தவன் (The Wall)

 பொறுமையை பொறுமை இழக்கச்  செய்தவன்

 தொடர் தோல்விகளால்  

துவண்டு இருந்த பொழுது 

துடிப்பான ஆட்டத்தால் 

அணியை துடித்தேழ செய்தவன்

Money-க்காக  அல்லாமல் 

அணிக்காக விளையாடியவன் 

Test-ல் மலை போல் நின்று மாணம் காத்திட்ட - அவன் கை 

One day-விலும் ஓங்கியே நின்றது 

கணவான்கள் ஆட்டத்தின் கடவுள் 
 “Rahul Dravid : The Wall”

- இந்த கவிதையை சரித்திர நாயகன் Rahul Dravid- டுக்கு சமர்பிக்கிறேன் 

செந்தில் : மொளகா பொடி எதுல இருந்து வருது அண்ணே?


ந‌ண்ப‌ர் : உங்க‌ செல் போனை எத‌ற்கு ப‌ல் டாக்ட‌ர்கிட்ட‌ காட்டுனீங்க‌ ?

ச‌ர்தார் : புளூ டூத் இருக்கான்னு செக் ப‌ண்ணத்தான்...

ந‌ண்ப‌ர் :?!?!?

*********************************

ஒரு கிரிக்கெட் மைதான‌த்தில் ...

காவ‌ல‌ர் : சார் கிரிக்கெட் போட்டிதான் முடிந்து போச்சே இன்ன‌மும் ஏன் இங்கே உக்கார்ந்து இருக்கிரீர்க‌ள்?

ச‌ர்தார் : போட்டியின் ஹைலைட் பார்க்குர‌துக்காக‌ காத்திருக்கிறேன்.

காவ‌ல‌ர் : ?!?!?

*********************************

கமல் ரஜினியை நேர் காண்கிறார்.

கமல் : மிஸ்டர் ரஜினி உங்களுக்கு இரண்டு வாய்ப்புகள் உள்ளன. ஒன்று 10 எளிமையான கேள்விகளுக்கு நீங்கள் பதில் அளிக்க வேண்டும் , அல்லது ஒரே ஒரு கடினமான கேள்விக்கு பதில் அளிக்க வேண்டும். எதனை நீங்கள் தேர்ந்து எடுக்கிறீர்கள்?

ரஜினி : ஒரு கடினமான கேள்வி. 

கமல் : இவற்றில் எது முதலில் வருகிறது பகல் அல்லது இரவு?

ரஜினி : பகல்தான் முதலில் வருகிறது .

கமல் : எப்படி?

ரஜினி : கமல் கண்ணா, நீங்க‌ள் ஒரு கேள்வி கேட்ப‌தாக‌த்தான் ஒப்ப‌ந்த‌ம். இது எப்ப‌டி இருக்கு?

*********************************

 செந்தில் : அண்ணே எனக்கு ஒரு சந்தேகம்.

கவுடமணி : சொல்லுடா கப்ளிங் தலையா.

செந்தில் : மொளகா பொடி எதுல இருந்து 
வருது அண்ணே? 

கவுடமணி : மொள‌காயிலிருந்து

செந்தில் : ம‌ஞ்ச‌ள் பொடிண்ணே?

கவுடமணி : ம‌ஞ்ச‌ள்ள‌ இருந்து.

செந்தில் : அப்போ ப‌ல்பொடிண்ணே?

கவுடமணி : ? ! ?!?

*********************************

இரண்டு சர்தார்கள் எகிப்து மம்மியை பார்த்து,

முதல் சர்தார் : பாரு எத்தனை பாண்டேஜூன்னு பாரு, பக்கா அக்சிடென்ட் கேஸ்.

இரண்டாவது சர்தார் : ஆமாம் பாருலாரி நம்பர் எழுதி இருக்காங்க பாரு BC1600.

*********************************

சர்தார் : எங்க வீட்டு (Milk) மில்க்க பூனை குடிச்சிடிச்சு .

நண்பர் : (Cat ) கேட்டா குடிச்சது ?

சர்தார் : இல்ல கேக்காமத்தான் குடிச்சது .

*********************************

பெற்றோர் : ஏன் டீச்சர் என் பொண்ணு கிளாமரா வர்றான்னு சொன்னிங்களாமே, அவள் யுநிபாம்ல தானே வர்ரா?

ஆசிரியர் : நாசமா போச்சு, நான் கிராமர் வரலைனு தான் சொன்னேன்.

*********************************

தந்தை: எப்பவும் உன்னை முட்டாள்னு சொல்ற உங்க மிஸ், நான் கணக்கு போட்டு கொடுத்தப்புறம் என்ன சொல்றாங்க?

மகன்: இப்ப முட்டா பய மகனேன்னு திட்ட்ரங்க டாடி. 

*********************************

மனைவி: இந்த வாரம் சினிமா பார்த்தோம், அடுத்த வாரம் ஷாப்பிங் போகலமாங்க?

கணவன்: தாராளமா போகலாம். ஆனால் அதற்கு அடுத்த வாரம் கண்டிப்பா சிவன் கோவிலுக்கு போகணும். 

மனைவி: ஏன்?

கணவன்: பிச்சை எடுக்கத்தான்

*********************************

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More