கூகிளின் ஆட்சென்ஸ் விளம்பரங்களை வலைப்பூவில் இணைத்து அதன் மூலம் பணம் சம்பாதிப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்களின் ஆட்சென்ஸ் கணக்கில் இந்த மாதம் 100 டாலர் சேர்ந்திருந்தால் அதனை அடுத்த மாதம் கடைசி வாரத்தில் காசோலையாக (Adsense Cheque) அனுப்புவார்கள். எப்படியும் மாத இறுதியான 23 – 27 ந்தேதிக்குள் அனுப்பி விடுவார்கள். சரி ஆட்சென்ஸ் செக் உங்கள் கைக்கு எப்போது வரும், எப்படி வரும் என்று புதியவர்கள் அறிந்து கொள்ள சில டிப்ஸ்கள் இங்கே.
• முதலில் ஆட்சென்ஸ் கணக்கில் நுழைந்தவுடனே மேல்பகுதியில் Finalized Earnings என்பதில் இந்த மாதம் செக் போடப்பட்டு விட்ட்தா என உடனடியாகத் தெரிந்து கொள்ளலாம். போடப்பட்டிருந்தால் Most Recent Payment என்றும் கீழே தேதியும் இருக்கும். மேலே சொன்ன மாதிரி பெரும்பாலும் 24 – 27 ந்தேதிக்குள்தான் செக் போடப்படும்.
• அடுத்து Finalized Earnings->Details என்பதைக் கிளிக் செய்யவும். இல்லை இட்துபுறத்தில் Payments என்பது வழியாகவும் செல்ல்லாம். அதில் உங்களுக்கு இதுவரை அனுப்பிய ஆட்சென்ஸ் காசோலைகளின் விவரம் இருக்கும். அதில் கடைசியாகப் பார்த்தால் Payment Issued என்றிருக்கும். அதனருகே Details என்பதைக் கிளிக் செய்தால் அனுப்பப் பட்ட செக்கின் விவரங்கள் இருக்கும்.
• உங்கள் பணம் டாலரில் மற்றும் ருபாயில் Payment Type, Date மற்றும் Payment Number போன்ற விவரங்கள் குறிப்பிட்டிருப்பார்கள்.இந்த Payment Number ஐ காப்பி செய்து பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.
• அட்சென்ஸ் செக் இந்தியாவில் ஹைதராபாத் தலைமையகத்திற்கு வந்து சேர தோராயமாக 10-15 நாள்கள் எடுத்துக் கொள்ளலாம். பின்னர் நகர்ப்புறத்தில் வசிப்பவர்களுக்கு DHL/Bluedart கொரியர் மூலமும் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு சாதாரண தபால் மூலம் வழங்கப் படும்.
• நீங்கள் நகர்ப்புறத்தில் வசிப்பவராயின் Bluedart இணையதளத்தில் சென்று Track your Shipment பகுதியில் Ref No வட்டத்தைக் கிளிக் செய்யவும். பின்னர் அந்த கட்டத்தில் உங்களின் Payment Number இல் பூஜ்யத்தை எடுத்துவிட்டுஅடித்தால் அவர்கள் உங்கள் செக்கை எடுத்துக் கொண்ட விவரங்கள் கிடைக்கும். அதில் Pickup date, From, To, Status, Date of Delivery போன்றவை இருக்கும்.
• உங்கள் செக் வந்து கொண்டிருந்தால் Status – In Transit என்றும் வந்து சேரும் தேதியும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் WayBill No என்று ஒரு எண் இருக்கும்,அதை மறக்காமல் குறித்துக் கொள்ளுங்கள். அவர்கள் இன்னும் ஹைதராபாத்தில் செக் எடுக்காவிடில் எந்த விவரமும் வராது. அதனால் செக்வரப்போகும் மாதத்தின் 4ம் தேதி முதல் 12 ந்தேதிக்குள் வரை தினமும் இதனை ஒருமுறை வந்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
• Bluedart தளத்தில் செக் எடுக்கப்பட்டிருந்தால் Email Alert வசதியிருக்கிறது. அவர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து கொடுத்துவிட்டால் உங்களுக்கு மின்னஞ்சல் வந்துவிடும் மற்றும் உங்கள் Waybill Status இல் எப்போது யாரிடம் கொடுத்தார்கள் என்று அப்டேட் செய்து விடுவார்கள்.
• சரி வீட்டிற்கு வரும் போது யாரும் வீட்டில் இல்லை அல்லது அவர்களால் உங்கள் வீட்டு முகவரியைக் கண்டுபிடிக்க முடியாமல் போனால் என்ன ஆகும்? அந்த நிலையை நமது WayBill Status இல் ஏற்றிவிடுவார்கள்.
• சில நேரம் அவர்கள் மறுபடியும் அடுத்த நாள் வந்து கொடுக்க வாய்ப்பிருக்கிறது. எத்தனை நாள் அவர்கள் வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை. அப்படி நீங்கள் தவறவிட்டு விட்டால் தயங்காமல் உடனடியாகBluedart இணையதளத்தில் Contact பகுதிக்குச் சென்று உங்கள் ஊரின் Customer Care எண்ணைக் கண்டறிந்து உங்கள் WayBill Number ஐச் சொல்லுங்கள். உங்கள் செக்கினை மறுபடியும் கொண்டுவருவதாகச் சொன்னால் சந்தோசப்படுங்கள். இல்லையெனில் நீங்களே எதேனும் உங்கள் பெயருள்ள அடையாள அட்டையை எடுத்துச் சென்று வாங்கிவிடுங்கள்.
• நீங்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்தவராயின் உங்கள் பகுதியில் DHL/Bluedart வராமல் இருந்தாலும் உங்களுக்கு ஆட்சென்ஸ் செக் சாதாரண தபாலில் தான் வரும். அதனால் செக் வந்து சேர Payment Issued தேதியிலிருந்து ஒரு மாதம் கூட ஆகலாம். பொறுமையாக காத்திருங்கள்.
• முதலில் ஆட்சென்ஸ் கணக்கில் நுழைந்தவுடனே மேல்பகுதியில் Finalized Earnings என்பதில் இந்த மாதம் செக் போடப்பட்டு விட்ட்தா என உடனடியாகத் தெரிந்து கொள்ளலாம். போடப்பட்டிருந்தால் Most Recent Payment என்றும் கீழே தேதியும் இருக்கும். மேலே சொன்ன மாதிரி பெரும்பாலும் 24 – 27 ந்தேதிக்குள்தான் செக் போடப்படும்.
• அட்சென்ஸ் செக் இந்தியாவில் ஹைதராபாத் தலைமையகத்திற்கு வந்து சேர தோராயமாக 10-15 நாள்கள் எடுத்துக் கொள்ளலாம். பின்னர் நகர்ப்புறத்தில் வசிப்பவர்களுக்கு DHL/Bluedart கொரியர் மூலமும் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு சாதாரண தபால் மூலம் வழங்கப் படும்.
• உங்கள் செக் வந்து கொண்டிருந்தால் Status – In Transit என்றும் வந்து சேரும் தேதியும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் WayBill No என்று ஒரு எண் இருக்கும்,அதை மறக்காமல் குறித்துக் கொள்ளுங்கள். அவர்கள் இன்னும் ஹைதராபாத்தில் செக் எடுக்காவிடில் எந்த விவரமும் வராது. அதனால் செக்வரப்போகும் மாதத்தின் 4ம் தேதி முதல் 12 ந்தேதிக்குள் வரை தினமும் இதனை ஒருமுறை வந்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
• Bluedart தளத்தில் செக் எடுக்கப்பட்டிருந்தால் Email Alert வசதியிருக்கிறது. அவர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து கொடுத்துவிட்டால் உங்களுக்கு மின்னஞ்சல் வந்துவிடும் மற்றும் உங்கள் Waybill Status இல் எப்போது யாரிடம் கொடுத்தார்கள் என்று அப்டேட் செய்து விடுவார்கள்.
• சரி வீட்டிற்கு வரும் போது யாரும் வீட்டில் இல்லை அல்லது அவர்களால் உங்கள் வீட்டு முகவரியைக் கண்டுபிடிக்க முடியாமல் போனால் என்ன ஆகும்? அந்த நிலையை நமது WayBill Status இல் ஏற்றிவிடுவார்கள்.
• சில நேரம் அவர்கள் மறுபடியும் அடுத்த நாள் வந்து கொடுக்க வாய்ப்பிருக்கிறது. எத்தனை நாள் அவர்கள் வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை. அப்படி நீங்கள் தவறவிட்டு விட்டால் தயங்காமல் உடனடியாகBluedart இணையதளத்தில் Contact பகுதிக்குச் சென்று உங்கள் ஊரின் Customer Care எண்ணைக் கண்டறிந்து உங்கள் WayBill Number ஐச் சொல்லுங்கள். உங்கள் செக்கினை மறுபடியும் கொண்டுவருவதாகச் சொன்னால் சந்தோசப்படுங்கள். இல்லையெனில் நீங்களே எதேனும் உங்கள் பெயருள்ள அடையாள அட்டையை எடுத்துச் சென்று வாங்கிவிடுங்கள்.
• நீங்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்தவராயின் உங்கள் பகுதியில் DHL/Bluedart வராமல் இருந்தாலும் உங்களுக்கு ஆட்சென்ஸ் செக் சாதாரண தபாலில் தான் வரும். அதனால் செக் வந்து சேர Payment Issued தேதியிலிருந்து ஒரு மாதம் கூட ஆகலாம். பொறுமையாக காத்திருங்கள்.
0 comments:
Post a Comment