புளுடூத் - பெயர் காரணம் (Name reason for Bouetooth) :


புளுடூத் - பெயர் காரணம் (Name reason for Bouetooth) :
இன்று பலர் Bluetooth உபயோகிக்கிறோம்  Bluetooth தொழில்நுட்பம் செயல்படும் விதத்திற்கும் இந்த பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நார்டிக் நாடுகள் என அழைக்கப்படும் Denmark, Sweeden, Norway மற்றும் Finland நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கினார்கள்.

இவர்களுக்கு சரித்திரத்தில் புகழ் பெற்ற Denmark அரசர் ஹெரால்ட் புளுடூத் மீது அசாத்திய மரியாதையும் பிரியமும் இருந்தது. அவரின் நினைவாகவே இந்த தொழில் நுட்பத்திற்கு புளுடூத் எனப் பெயரிட்டனர்.

இவர் 900 ஆண்டில் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும், Norway நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்தார். பின்னர் கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார். 986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார். நாடுகளை இணைத்தது கிறித்தவ மதத்தினை அறிமுகப்படுத்தியது, நினைவுச் சின்னம் அமைத்தது போன்ற செயல்களால் புகழடைந்தார்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More