கண் கவரும் கற்பனைகள்











இது வறுமைக் கோடு சார்.

என்னப்பா இது போர்டுலே ‘வருத்த மீன்’னு
எழுதி இருக்கு. பிழையா இல்லே இருக்கு…!

அந்த மீன் சாகும்போது ‘வருத்த’ப்பட்டிருக்கும்
இல்லீங்களா அதுக்குத்தான்!

                                                

***************************

சார் : ஏன்டா கோடு கோணல் கோணலா இருக்கு ஒரு ஸ்கேல் வாங்கி நேராப் போடலாம்ல...

மாணவன் : இது வறுமைக் கோடு சார்..

எல்லா மிருகங்களும் பறவைகளும் சேர்ந்து கோரசா பாடற பாட்டு

அமெரிக்கன் : எனக்கு டென்னிஸ் விளையாட்ட பத்தி எல்லா விசயமும் தெரியும் நீ வேனும்ன எதாவது கேட்டு பாரு....

இந்தியன் : சொல்லு டென்னிஸ் நெட்ல எத்தன ஓட்ட இருக்கும்....?

அமெரிக்கன் : ?????....

**********************

நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் அவள் மாம்பழம் வேணுமென்றாள்.

நல்ல வேளை... நகைக்கடையில நீ நிக்கலை!

**********************

எல்.கே.ஜி.பையன் : அப்பா நேத்து வந்த கணக்கு டீச்சரு சூப்பர் பிகர்ப்பா

அப்பா : டேய் டீச்சர் எல்லாம் அம்மா மாதிரி டா

எல்.கே.ஜி.பையன் : அப்பா, பாத்தியா சைடு கேப்ல நீ ரூட் போடுர….

**********************

பல் மருத்துவர் : பல்லு எப்படி விழுந்துச்சு


வந்தவர் : அத யார்கிட்டயாவது சொன்னா மீதி பல்லும் கொட்டிடும்னு எம் பொண்டாட்டி சொல்லிருக்கா....

**********************

மனைவி : எங்க அடிகடி என் முகத்தில தண்ணி தெளிகீரிங்க ???

கணவர் : உங்க அப்பா தான் உன்ன "பூ" மாதிரி பார்த்துக்க சொன்னார்....


**********************

மிருகங்கள் பாட்டுப் பாடினால் எப்படி இருக்கும்

                                    

ஆமை : ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்......

குயில் : பாட்டும் நானே.. ... பாவமும்... நானே...

கங்காரு : தாயில்லாமல் நானில்லை.... 
தானே எவரும் பிறந்ததில்லை...

சிங்கம் : ஆல் தோட்ட பூபதி நானடா..... ..

நெருப்பு கோழி : தீப்பிடிக்க...தீப்பிடிக்க முத்தம் கொடுடா.... .

கோழி : கொக்கர கொக்கர கோ, சேவல் கொக்கரகோ.... ...

மீன் : கொக்கு பற பற.... கோழி பற பற...

முதலை : ஏ! ஆத்தா! ஆத்தோரமா வாரியா... ...

புலி : மான் குட்டியே! புள்ளி மான் குட்டியே...... ....

மயில் : மேகம் கருக்குது! டக்கு சிக்கு, டக்கு சிக்கு... .....

யானை : கத்திரிக்கா...க த்திரிக்கா... குண்டு கத்திரிக்கா.... ..

காகம் : கா....கா ...கா. ...

காண்டாமிருகம் : என் கிட்ட மோததே.... ...

நீர்யானை : மோழ மோழன்னு எம்மா எம்மா... ..

நல்ல பாம்பு : நான் அடிச்சா தாங்க மாட்ட... ...... .

மான் : புலி உருமுது உருமுது...... .....

எல்லா மிருகங்களும் பறவைகளும் சேர்ந்து கோரசா பாடற ஒரே பாட்டு :
"வரான் பாரு வேட்டைகாரன்....

உலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது?

சந்தா சிங்: எங்கப்பா பெரிய வேட்டைக்காரர் தெரியுமா? டைனோசரையெல்லாம் சுட்டுத் தள்ளியிருக்காரு.

பந்தா சிங்: என்னடா சொல்ற, இப்பத்தான் டைனோசரே இல்லையே!

சந்தா சிங்: அதான் சொன்னேனே, எங்கப்பா டைனோசரையெல்லாம் சுட்டுட்டாருன்னு.

*****************************



"உலகத்தில் ரொம்ப பணம் கிடைக்கும் தொழில் எது?"

"தெரியல...."

"பல் டாக்டருக்கு தான்."

"எப்படி?"

அவர் தான் எல்லோர் 'சொத்தை'யும் பிடுங்கறாரே....








*****************************

அந்தக் கல்யாணத்துல ரொம்ப 'ஈ' மொய்க்குது,

ஏன்?

அது ஜாம் ஜாம்னு நடக்கற கல்யாணம்....

*****************************

"காக்காவுக்குப் பயங்கரக் கடன். உடனே தன்னோட குஞ்சை அடகு வச்சுது. ஏன்?"

"ஏன்?"

"காக்கைக்குத் தன் குஞ்சு பொன் குஞ்சாச்சே...."

*****************************

வாத்தியாரை விட கோழி தான் Great எப்படி?"

 "வாத்தியார் முட்டை மட்டும் தான் போடுவார், ஆனால் கோழி முட்டை போட்டு குஞ்சும் பொறிக்கும்....

*****************************

சந்தா சிங்: என் வீட்டுல இன்னிக்கி அடுப்பு எரியுதுன்னா, அதுக்கு இவருதான் காரணம்...... 

பந்தா சிங்: இவரு, அவ்ளோ பெரிய கொடை வள்ளலா?? 

சந்தா சிங்: அதெல்லாம் இல்லப்பா, இவரு நம்ம ஏரியாவுல கேஸ் ஏஜென்சி வச்சு இருக்காரு....

*****************************

ஒரு ஊர்ல 8 மணி, 10 மணி-னு ரெண்டு நண்பர்கள் இருந்தாங்க. ஒரு நாள் 8 மணிய பாக்க 10 மணி, 8 மணிக்குப் போனான். 8 மணிக்கு போன 10 மணி 10 மணி ஆகியும் 8 மணிய பாக்கல. 10 மணி ஆனதும் 8 மணி 10 மணிக்கு போன் பண்ணி நான் 8 மணி பேசுறேன், 10 மணி நான் நாளைக்கு காலைல 10 மணிக்கு தான் வரவேன்னு சொல்லிட்டான். அய்யோ பாவம் 10 மணி கடைசி வரைக்கும் 8 மணிய பாக்கல. அழுவாதீங்க விடுங்க....

*****************************

அப்பா : டேய், நம்மளவிட சின்னப் பசங்கள அடிக்கக் கூடாதுடா, அன்பா இருக்கணும்.

மகன் : அப்பா! இந்த விசயத்த எங்க டீச்சர்கிட்ட வந்து சொல்லுங்கப்பா.

*****************************

ஆசிரியர் : 18ம் நூற்றாண்டில் வாழ்ந்த மன்னர்களப்பத்தி உனக்குத் தெரிஞ்சத
சொல்லு….!

மாணவன் : அவங்க எல்லோரும் இறந்துட்டாங்க சார்…

ஆசிரியர் : ????

*****************************

அப்பா : டாக்டர், எம் பையன் அஞ்சு ரூவா காச முழுங்கிட்டான்

டாக்டர் : அப்படியா…! அப்ப ஸ்கேன் எடுக்கணும்.

அப்பா : காச மட்டும் எடுங்க டாக்டர்

டாக்டர் : ????

*****************************

விண்டோஸில் ‘My Pictures’ உள்ளது. ஆனால் என் போட்டோ ஒன்று கூட அதில் இல்லை.

 புதிதாக கம்ப்யூட்டர் வாங்கிய  சந்தா சிங் , சிறிது நாட்களில் பில் கேட்சுக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அதில்:

அன்பிற்குரிய பில் கேட்ஸ்,

சில நாட்களுக்கு முன் நான் வாங்கிய கம்ப்யூட்டரில் சில பிரச்சினைகள் உள்ளன. அவற்றை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

1. கம்ப்யூட்டரில் ‘Start’ பட்டன் உள்ளது. ஆனால், ‘Stop’ பட்டன் இல்லை. இதை சரிபார்க்கவும்.

2. ‘Run’ என்ற மெனு உள்ளது. எனது நண்பர் ‘Run’ ஐ கிளிக் செய்துவிட்டு ஓட ஆரம்பித்தார். அவர் இப்போது அமிர்தசரஸ் பக்கம் ஓடிக் கொண்டிருக்கிறார். அவரை உட்கார வைப்பதற்கு ‘Sit’ மெனு இருக்கிறதா என்பதைத் தெரியப்படுத்தவும்.

3. உங்க விண்டோஸில் நான் ‘Recycle bin’ஐ மட்டும்தான் பார்த்தேன். ‘Re-scooter bin’ இருக்கிறதா? ஏனென்றால் என் வீட்டில் ஸ்கூட்டர் மட்டும்தான் உள்ளது.

4. ‘Find’ பட்டன் கொடுத்துள்ளீர்கள். ஆனால் அது சரியாக வேலை செய்யவில்லை. என் மனைவி, வீட்டுச் சாவியைத் தொலைத்தபோது, ‘Find’ பட்டனை உபயோகித்தோம். ஆனால் அது தேடித் தரவில்லை. இதை சரிசெய்யவும்.

5. என்னுடைய பையன் ‘Microsoft word’ கற்றுக் கொண்டான். இப்போது ‘Microsoft sentence’ கற்றுக்கொள்ள விரும்புகிறான். அதை எப்போது வழங்குவீர்கள்?

6. விண்டோஸில் ‘My Pictures’ உள்ளது. ஆனால் என் போட்டோ ஒன்று கூட அதில் இல்லை. கூடிய சீக்கிரம் என் போட்டோ ஒன்றை அதில் போடவும்.

7. ‘Microsoft office’ உள்ளது. சரி, ‘Microsoft Home’ எங்கே? ஏனென்றால் கம்ப்யூட்டரை நான் வீட்டில்தான் பயன்படுத்துகிறேன்.

8. ‘My Network Places’ கொடுத்துள்ளீர்கள். நல்லவேளை, ‘My Secret Places’ கொடுக்கவில்லை. அதை இனிமேலும் தரவேண்டாம். ஏனென்றால் அலுவலகம் முடிந்து நான் எங்கெல்லாம் போகிறேன் என்பதை என் மனைவி அறிந்து கொள்வதை நான் விரும்பவில்லை.

9. இறுதியாக ஒரு சந்தேகம். நீங்கள் ‘Windows’ விற்கிறீர்கள். ஆனால் உங்கள் பெயரில் ‘Gates’ உள்ளது ஏன்?

அடுத்த 40 ஆண்டுகளில் வேற்று கிரகவாசிகள் கண்டுபிடிக்கப்படுவர்

புதிய கிரகங்கள் கண்டுபிடிக்கப்பட்டு வருவதைப் போல எதிர்வரும் 40 ஆண்டுகளில் வேற்றுகிரகவாசிகளும் கண்டுபிடிக்கப்படுவர் என்று இங்கிலாந்தின் மூத்த விண்வெளி விஞ்ஞானி லார்ட் மார்ட்டின் ரீஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

விண்வெளியில் புதிய கிரகங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன. பூமியை போன்று அங்கும் உயிரினங்கள் வாழ முடியுமா? என்ற ஆராய்ச்சியும் நடந்து வருகிறது. 2025-ம் ஆண்டுக்குள் சூரிய குடும்பத்துக்கு வெளியே உள்ள புதிய கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்களை கண்டுபிடித்து விடுவோம். அதைத் தொடர்ந்து அந்த கிரகங்களில் தங்கியிருக்கும் வேற்று கிரகவாசிகள் அடுத்த 40 ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்படுவர் என்ற நம்பிக்கை உள்ளது என்றார் அவர்.

சந்தா சிங் vs பந்தா சிங்

சந்தா சிங்கும் பந்தா சிங்கும் ஜென்ம விரோதிகள். சந்தா சிங் கட்டடத்தின் முதல் தளத்துல வசிக்கிறாரு, பந்தா சிங் ஏழாவது தளத்துல வசிக்கிறாரு. ஒரு நாள் கட்டடத்து லிப்ட்ல எதோ ஒரு கோளாறு ஆகிடுது. இது பழி வாங்க நல்ல சாக்குன்னு நெனச்ச பந்தா சிங், சந்தா சிங்கை அவங்க வீட்டுக்கு விருந்துக்குக் கூப்பிட்டாராம். சந்தா சிங்கும் லிப்ட் வேலை செய்யாததுனால ஏழு மாடி லொங்கு லொங்குன்னு மாடிப்படி ஏறி வந்தாராம். வந்து பாத்தா வீட்டுல ஒரு பெரிய பூட்டு தொங்குதாம். அதுக்குப் பக்கத்துலேயே ஒரு பேப்பர்ல "நல்லா ஏமாந்தியா? ஹா ஹாஹ்ஹா"ன்னு எழுதி இருந்துச்சாம். இதை பாத்த சந்தா சிங்குக்குக் கோவம் வருது, ஆனா அவரு மட்டும் சளைச்சவரா என்ன, அவரு அதே பேப்பர்ல எழுதி வச்சாராம் "நான் இங்கே வரவே இல்லியே!"

****************************


சந்தா சிங் 20 ரூபாய்க்கு லாட்டரி டிக்கட் வாங்கி 20 கோடி ஜெயிச்சார்... ஏஜன்ட் 9 கோடி வரி பிடிச்சது போக மீதம் 11 கோடி குடுத்தான், சர்தாருக்கு வந்ததே கோபம்

" ஒழுங்கா 20 கோடி பரிசு குடு இல்லைன்னா என்னோட 20 ரூபாய திருப்பிக் கொடு"


****************************

சந்தா சிங் ஒரு முறை ரயிலில் நெடுந்தூரப் பயணம் மேற்கொண்டார்.

ஒவ்வொரு முறை ரயில் நிற்கும் போதும், மேல் பர்த்திலிருந்து கீழே குதித்துக் கீழ் பர்த்திற்கு அடியில் தான் வைத்திருக்கும் சாமான்களையெல்லாம் சரி பார்த்து விட்டு மீண்டும் மேல் பர்த்திற்குப் போய் விடுவார்.

இது ரயில் நிற்கும் ஒவ்வொரு முறையும் நடந்தது.

எரிச்சலடைந்த சக பயணி , "ஏனய்யா ரயில் நிற்கும் ஒவ்வொரு முறையும், எங்கள் தலை அதிரும்படியாக இப்படிக் குதிக்கிறாய்?" என்று கேட்க

அவர் உடனே பதிலுரைத்தார்

"என்னை என்ன கேனையன் என்று நினைத்தாயா? அந்தப் போர்டைப் பார்த்துவிட்டுப் பேசு" , என்று ஒரு அறிவிப்புப் பலகையைக் காட்டினார்

அதில் இப்படி எழுதியிருந்தது.

ஓடும் ரயிலில் இருந்து குதிக்காதீர்கள்!
( Do not jump from the running train)

****************************

ஒரு போட்டி....யாரால 100 ஜோக் கேட்டும் சிரிக்காம இருக்க முடியும்னு...தமிழன், மலையாளி, தெலுங்கன், கன்னடன், இந்தி, பெங்காலி, சர்தார்ஜி, அசாமி, ஒரியான்னு பலர் கலந்துக்கிட்டாங்க.

மொதல்ல ஒரு பாட்டி ஜோக் சொன்னாங்க. அசாமிக்காரர் சிரிச்சுட்டார். அவுட். அடுத்து ஒரு ஆடு பத்துன ஜோக். அதுக்கு ஆந்திராகாரர். அடுத்தது ரயில் பத்துன ஜோக். அதுக்கு தமிழன். அடுத்து கோழி...அதுக்கு கன்னடன். இப்படி எல்லாரும் தோத்துட்டாங்க. 99 ஜோக் சொல்லும் போது சர்தார்ஜி மட்டுந்தான் மேடைல இருந்தார். சரியா 100வது ஜோக் சொல்லப் போகும் போது சர்தார் சிரிச்சுட்டார். மத்த சர்தார்களுக்குக் கோவம். ஏய்யா ஒரு ஜோக்குக்குச் சிரிக்காம இருக்க முடியாதான்னு....அப்ப சர்தார்ஜி சொன்னாராம்....."மொதல்ல சொன்ன பாட்டி ஜோக் ரொம்ப சூப்பர்".

****************************

சந்தா சிங்கும் பந்தா சிங்கும் ஜென்ம விரோதிகள். சந்தா சிங் கட்டடத்தின் முதல் தளத்துல வசிக்கிறாரு, பந்தா சிங் ஏழாவது தளத்துல வசிக்கிறாரு. ஒரு நாள் கட்டடத்து லிப்ட்ல எதோ ஒரு கோளாறு ஆகிடுது. இது பழி வாங்க நல்ல சாக்குன்னு நெனச்ச பந்தா சிங், சந்தா சிங்கை அவங்க வீட்டுக்கு விருந்துக்குக் கூப்பிட்டாராம். சந்தா சிங்கும் லிப்ட் வேலை செய்யாததுனால ஏழு மாடி லொங்கு லொங்குன்னு மாடிப்படி ஏறி வந்தாராம். வந்து பாத்தா வீட்டுல ஒரு பெரிய பூட்டு தொங்குதாம். அதுக்குப் பக்கத்துலேயே ஒரு பேப்பர்ல "நல்லா ஏமாந்தியா? ஹா ஹாஹ்ஹா"ன்னு எழுதி இருந்துச்சாம். இதை பாத்த சந்தா சிங்குக்குக் கோவம் வருது, ஆனா அவரு மட்டும் சளைச்சவரா என்ன, அவரு அதே பேப்பர்ல எழுதி வச்சாராம் "நான் இங்கே வரவே இல்லியே!"

****************************

ரெண்டு சர்தார் ஜி-க்களை நாசா நிலாவுக்கு ஆராய்ச்சி பண்ண அனுப்புறாங்க. ராக்கெட் போன பாதி தூரத்திலேயே ரெண்டு சர்தார்ஜியும் 'யூ' டர்ன் போட்டு திரும்பி வந்து நாசாக் காரங்களைப் பார்த்து திட்டுறாங்க.

"மிஷன் ஃபெயில்ட். ஏன்னா இன்னிக்கு அமாவாசை".

****************************
இங்கு உள்ள அனனத்தும் சுட்டது, கேட்டது, படித்து

நீ முறைக்கும் அழகை ரசிக்கவே, உன் பின்னால் வருகிறேன்








நான் மிகவும் ரசித்து எழுதியது
**********************************
நீ – 
உன் பின்னால் வரும் பொழுதெல்லாம்
என்னை பார்த்து முறைக்கிறாய்
நான் –
நீ முறைக்கும் அழகை ரசிக்கவே,
உன் பின்னால் வருகிறேன்.

இ மெயில் - கண்டுபிடித்தது ஒரு தமிழன் (Email founded by a Tamilian)


 நியூயார்க்: இந்தியாவால் வெளியேற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தமிழ் விஞ்ஞானி சிவா அய்யாதுரையை வட அமெரிக்கத் தமிழர் பேரவையான பெட்னா சிறப்பித்து கவுரப்படுத்தியிருக்கிறது.
இப்போதெல்லாம் 'மெயில்' வந்துருக்கு ன்னு வீட்டிலே யாரும் சொன்னால் அது தபாலில் வந்த மெயில் என்ற எண்ணம் வருவதில்லை. 'மெயில்' என்றால் ‘இமெயில்' தான் என்று ஆகிவிட்டது. ஃபேஸ்புக், டுவிட்டர் என வெவ்வேறு பரிமாணங்களில் தகவல் தொழில் நுட்பம் முன்னேற்றம் கண்டாலும், இமெயில் எனபது அன்றாட செயல்களில் முக்கிய அம்சமாகிவிட்டது. தற்போதைய வாழ்க்கை முறையையே மாற்றிப் போட்டுவிட்டது.
முதன் முதலாக இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo ("To:", "From:", "Subject:", "Bcc:", "Cc:", "Date:", "Body:"), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.) அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவல் பரிமாற்றத்தை கண்டு பிடித்தவர் அமெரிக்க நியூ ஜெர்ஸி மாகாணத்தில் வசித்து வந்த 14 வயதே நிரம்பிய வி.ஏ. சிவா அய்யாதுரை என்ற தமிழ்க் குடும்பத்தை சார்ந்த மாணவன்.
ஆனால், குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ, அவருக்கு அந்த அங்கீகாரத்தை கொடுக்காமல், இமெயில் உரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர்.
நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறையாக வி.ஏ. சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இமெயில்' ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி, டாக்டர். வி.ஏ. சிவா அய்யாதுரை 'இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ்' என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

நியூ ஜெர்ஸி மாகாணம் நேவார்க் நகரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் சார்பில், நேவார்க் நகர உயர் நிலைப்பள்ளி மாணவர்களை புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாதுரை.
மாணவனாக இருந்த போது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பல்வேறு சோதனைகளுக்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்த சோகம் நேரக்கூடாது என்பதற்காகவும், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில்களை தொடங்கும் வகையிலும் இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணையாக இருக்கும் என்றார்.

பல தொழில்களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய்யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலைக் கழகமான எம்.ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார். சமீபத்தில் நடந்த வட அமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா) வெள்ளிவிழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ‘இமெயில்' பயணத்தை http://www.inventorofemail.com/
தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் அவமதிப்பு:
                                                     இதே சிவா அய்யாதுரையை மத்திய அரசின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 2008-ம் ஆண்டு டெல்லிக்கு அழைத்தது. அவரும் இந்திய அரசின் அழைப்பை ஏற்று டெல்லியில் வந்து பணியாற்றினார். ஆனால் மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத் தலைவரை விமர்சித்தார் என்று கூறி அவரை இதர விஞ்ஞானிகள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அவருக்கான இணைய தொடர்பும் துண்டிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் அவர் தங்கியிருந்த அரசு வீட்டிலிருந்தே வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.
இப்படி இந்தியா அவமதித்த அய்யாதுரைதான் பெட்னா மாநாட்டில் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார

மீட்டருக்கு மேல் வாழ்த்துகிறோம்!


 'மீட்டருக்கு மேல் எக்ஸ்ட்ரா ஏதாவது போட்டு வாங்க முடியுமா?' என்று பரபரக்கும் ஆட்டோக்காரர் களுக்கு மத்தியில்... முதியோர், ஊனமுற்றோர்,பார்வையற்றோர் உள்ளிட்டோருக்கு இலவசமாகவே ஆட்டோ ஓட்டி சேவை
செய்துகொண்டிருக்கிறார் 27 வயது இளைஞரான பஞ்சதுரை!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஏரியாவில் அவரை சந்தித்தோம். வெகுளித்தனமாகவே
பேசினார். ''பக்கத்துல இருக்கிற புத்தூருதான் எனக்கு சொந்த ஊரு. சின்ன வயசுலருந்தே நம்மால முடிஞ்சவரைக்கும் அடுத்தவங்களுக்கு உதவியா இருக்கணும்னு நெனப் பேன். அந்த நெனப்புத்தான் இப்ப என்னை இங்க கொண்டாந்து நிறுத்தியிருக்கு.
ஆரம்பத்துல முறுக்கு யாவாரம்தான் பாத்தேன். அது கையைக் கடிச்சிருச்சு. அதுக்கப்புறம் என் பொண்டாட்டியோட நகைகளை அடமானம் வெச்சு அப்புடி இப்புடி புரட்டி இந்த 'ஷேர் ஆட்டோ'வை வாங்குனேன்.

'எந்தத் தொழில் செஞ்சாலும் அதால நாலு பேருக்கு நன்மை இருக்க ணும்'னு எங்க அம்மா அடிக்கடி சொல்லும். அந்த சொல்படிதான், இயலாதவங்களுக்கு மட்டும் கடந்த ஏழு வருஷமா இலவச ஆட்டோ சேவையை செஞ்சுக் கிட்டு இருக்கேன். இது ஒண்ணும் பெரிய சாதனை இல்லைங்க... ஏதோ என்னால முடிஞ்சது...'' என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அங்கு வந்த டிராஃபிக் போலீஸ்காரர் ஒருவர், ''ஏய்... இங்கெல்லாம் நிப்பாட்டக் கூடாது. வண்டிய எட்ரா...'' என்று அனல்
வீச்சாக வார்த்தைகளைக் கொட்டிவிட்டுச் சென்றார். வண்டியை இன்னொரு இடத்துக்கு நகர்த்திச் சென்று நிறுத்திய பஞ்சதுரை, ''நான் படிச்சது ஆறாப்புதாங்க. ஆனாலும், என் வாயிலருந்து இதுவரை ஒரு கெட்ட வார்த்தைகூட வந்ததில்லை... படிச்ச போலீஸ்காரர் எம்புட்டு மரி யாதையா(!) பேசிட்டுப் போறாரு பாத்தீங்களா..? என்னைப் பற்றி தெரிஞ்ச பல போலீஸ்காரங்க எந்த இடத் துல பாத்தாலும், 'வாப்பா துரை... கூல் டிரிங்க்ஸ் சாப்பு டுறீயா?'ன்னு கேக்குறாங்க. அவங்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு ஆளு. இதுமட்டுமா..? நான் இலவச சேவை செய்றதால ஆட்டோ ஸ்டாண்டுல எனக்கு டமில்லைன்னுட்டாங்க. அதுவும் நல்லதுதான். சும்மா ஒரே இடத்துல
நின்னுக்கிட்டு வெட்டி அரட்டை பேசிக்கிட்டு இருக்கதுக்கு நம்மபாட்டுக்கு சுத்திக்கிட்டே இருந்தோம்னா ஏதோ, முடியாத நாலு பேருக்கு உதவலாம் பாருங்க...'' என்று நிறுத்தினார்.

இவரது ஆட்டோவில் சல்லிக்காசு செலவில்லாமல் தினமும் சவாரி செய்யும் முதியவர்களான கமால் பாட்ஷா, சுப்பிரமணியன், மாயாண்டி ஆகியோர் நம்மிடம், ''நாங்க எல்லாருமே நித்தப் பொழப்புக்காக தினமும் உசிலம்பட்டிக்கு வந்து போறவங்க. ஒதவி ஒத்தாசைன்னா சொந்தப் புள்ளைககூட உதவாதுக. ஆனா இந்தத் தம்பி, எங்களை காலையிலயும் சாயந்த
ரமும் கூட்டிட்டுப் போயி கூட்டியாந்து விடுது. 'ஒரு அஞ்சு ரூபாயாச்சும் வங்கிக்கப்பா...'ன்னா கேக்க மாட்டேங்குது. மொத்தத்துல, தம்பியோட ஆட்டோ தான் இப்ப எங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் மாதிரி!'' என்றனர்.

''இவர் இப்படி இருந்தால் வீட்டுச் செலவை எப்படி சமாளிக்கிறீர்கள்?'' என்று பஞ்சதுரையின் மனைவியை சந்தித்துக் கேட்டோம். அதற்கு, ''வாட கைக்கு ஆட்டோ
ஓட்டுனா ஓனருக்கு வாடகைப் பணம் குடுப்போம்ல... அந்தக் காசு மக்களுக்கு பயன்படுதுன்னு நெனச்சுக்க வேண்டியதுதான்!'' - கணவரைக் காட்டிலும் மிகுந்த
அர்ப்பணிப்பு உணர்வோடு பேசினார் அவரது மனைவி ஜோதி லட்சுமி! அவரை பெருமையோடு ஏறிட்ட பஞ்சதுரை, ''நாலு பெரியவங்கள இலவசமா ஆட்டோ வுல கூட்டிட்டுப் போயி இறக்கி விடுறப்ப, 'நீ மகராசனா இருப்பே...'ன்னு வாழ்த்துறாங்களே... அதுக்கு முன்னாடி
பணங்காசெல்லாம் தூசுங்க...'' என்றார். பெயரில்தான் பஞ்சமெல்லாம்... மனசால் கோடீஸ்வரர்!

சார், காந்தியை பற்றி தெரியும், ஆனால் ஜெயந்தியை பற்றி தெரியாது


“நான் மின்சாரத்துறையில வேலை செய்யுறேன்”

“அப்ப வேலையே இல்லைன்னு சொல்லுங்க”

*********************

வாத்தியார் : காந்தி ஜெயந்தியை பத்தி உனக்கு தெரிந்ததை சொல்லு?

மாணவன் : சார், காந்தியை பற்றி தெரியும், ஆனால் ஜெயந்தியை பற்றி தெரியாது சார்.

*********************

பையன்: எனக்கு வேலை இல்லைனு தெரிஞ்சும் எப்படி நம்ம கல்யாணத்துக்கு ஒத்துகிட்டாங்க.. ??

பொண்ணு: பையன் என்ன பண்ணுறான்னு கேட்டாங்க, வயத்துல உதைக்குறானு சொன்னேன்... அதான்....!!!???

*********************
                                     
                                         
நான் இப்ப தினமும் வாக்கிங் போறேன்னா, அதுக்கு நம்ம டாக்டர்தான் காரணம்.

ஏன்... ரொம்ப ஸ்ட்ரிக்ட்டா..?

நீ வேற... முதல்ல கார்ல வந்துட்டிருந்தேன். ட்ரீட்மெண்ட்டுக்குச் செலவு செஞ்சு செஞ்சு, இப்ப நடக்கும்படி ஆயிடுச்சு!





*********************

வீட்ல ரெய்டு நடக்கற நேரத்துல தலைவர் தன்னோட மூன்றாவது
மற்றும் நான்காவது மகன்களை எங்கேயாவது போய் ஒளிஞ்சுக்க சொல்றாரே…ஏன்?

கணக்கில் வராத பிள்ளைகளாம்…!

*********************

மொபைல்ல பேசும்போது அவர் ஏன் தள்ளாடுறார்?

அவரோட போன்ல பேலன்ஸ் இல்லையாம்…!

*********************

நண்பர் : “ உங்க படத்தில, சம்பந்தமே இல்லாமே, பாட்டி ஒரு பையனுக்கு கதை சொல்ற மாதிரியான சீனை எதுக்கு சார் சேர்த்திருக்கீங்க?”

டைரக்டர்: “ படத்தில கதையே இல்லைன்னு யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க…!” ...

*********************

"உங்களுக்கு என்ன பிரச்சினை?"

"லுங்கியைப் பல்லால கவ்விக்கிட்டு பேன்ட் கழட்றப்ப கொட்டாவி வராம இருக்க என்ன செய்யணும் டாக்டர்?

*********************

வடிவேல் : "அஜித்தோட மங்காத்தா பாத்தியா...?"

பார்த்தீபன் : "அஜித்தோட பாக்கல...தனியா போய் தான் பாத்தேன்"

வடிவேல் : "அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!

*********************

அரசியல்வாதி : புனைப்பெயரில் பதிவுகள் எழுதலாமாம்...ஆனால் நான் பினாமி பேர்ல சொத்து எழுதி வச்சா மட்டும் குத்தமாம்!

*********************

"டாக்டர் தெரியாம.. காசை முழுங்கிட்டேன்''

"என்ன காசு? ஒரு ரூபாயா... ரெண்டு ரூபாயா... அஞ்சு ரூபாயா?''

"அதான் தெரியாம முழுங்கிட்டேன்னு சொன்னேனே டாக்டர்''

*********************

"உனக்கு ஏது 100 ரூபாய்?''"

"ஓர் இடத்தில பாடினேன். 20 ரூபாய் கொடுத்தாங்க''

மீதி 80 ரூபாய்?''"

பாடுறதை நிறுத்துறதுக்குக் கொடுத்தாங்க''

*********************

மனைவி:- உங்களுக்கு ராணின்னு ஏற்கனவே ஒரு மனைவி இருக்கான்னு 

கல்யாணத்துக்கு முன்பே ஏன் என்கிட்டே சொல்லலை..

கணவன்:- சொன்னேனே... மறந்துட்டியா...

மனைவி:- எப்போ சொன்னீங்க...நீங்க சொல்லவே இல்லை..

கணவன்:- உன்னை ராணி மாதிரி வச்சி காப்பாத்துவேன்னு நான் சொல்லலை..

மனைவி:-????????

*********************

உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக "தமிழ் மொழி "தென்பட்டது - கிரெம்ளின் மாளிகை: (Tamil at Kremlin Palace)

ரசிய அதிபர் மாளிகையில் தமிழ்!

தமிழில் பேசுவதற்கும் எழுதுவதற்கும் நாம் நிறைய சிந்தித்துக்கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு தமிழ் பேச்சும் எழுத்தும் நம்மை அவமானப்படுத்துவதாக நினைத்துக்கொண்டிருக்கிறோம்.

ஆனால் தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரசிய நாடு தமிழைக் கொண்டாடுகிறது. அங்கிருக்கும் அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகு தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரசியத்திலும், இரண்டாவதாக அண்டைநாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.

                       

தமிழைவிட எத்தனையோ உலகமொழிகள் பெரும்பாலான மக்களால் பேசபடுகின்றன. ஆனால் அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம் , தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக உள்ளது.

"உலகில் ஆறு மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ்,சமற்கிருதம். இந்த ஆறு மொழிகளில் நான்குமொழிகள் இன்று வழக்கில் இல்லை.

இலக்கிய, வரலாற்று செழுமையான மொழி. எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக "தமிழ் மொழி "தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை" என தமிழில் எழுதினோம்" என்று கூறுகிறார்கள்.

வெளிநாட்டினருக்குக் கூட தமிழின் அருமை பெருமை தெரிந்திருக்கிறது. நமக்குத்தான் தெரியவில்லை..

வெளிநாட்டில் உள்ளவர்களுக்கு கூட நம் தமிழின் பெருமை தெரிந்து உள்ளது. ஆனால் நாமோ'தமிழில் எழுதுங்கள் என்பதற்கு ஒரு கருத்தரங்கம் நடத்திக்கொண்டு இருக்கிறோம்'.

சிந்தியுங்கள்........தமிழர்களே.....!

காட்டு பகுதியில் ஐ டி வாழ்க்கை - Life in IT - The Wild side..Enjoy !!!


மேனேஜர் வேட்டை ஆரம்பம்(Manager hunting for a new Resource)



வாழ்ந்தாலும் தாழ்ந்தாலும் ஒன்றாக குழுப்பணி! (Team Work ! Together we fall , together we rise)



சோதனையாளர் ஒரு பிழையை தவறவிட்ட பிறகு(Tester after missing a defect ! )


ஒரு உருவாக்குநர் அலுவலகத்தில் ஏமாற்றமான நாளுக்கு பிறகு ஓய்வெடுத்தல்(A developer relaxing after a frustrating day at office)


ஒரு குறிப்பிடத்தக்க தொழில்நுட்ப பேச்சு(A typical tech talk)


மேலாளருடன் செயல்திறன் ஆய்வு கூட்டம்(Performance Review meeting with manager)


வாடிக்கையாளருடன் பேசும் பொழுது(Need not say .A typical onsite Client!)


ஒரு குறிப்பிடத்தக்க அணித் தலைவர்(A typical Team Lead!)



குழுவின் உல்லாச பிரயாணம்(Team outing !)


உருவாக்குபவர் ஒரு பிழை காணப்பட்ட பிறகு! (Developer after a bug is found in code!)


அலுவலகத்தில் மிகையான நேரம் (Overtime at Office !)


விடுப்பு விண்ணப்பிக்கும் பொழுது (Applying for Leave)


விடுப்பு விண்ணப்பத்துக்கு மேலாளர்களின் எதிர்வினை (Managers reaction on Leave application)


Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More