சிங்கத்தை எவண்டா Chair - ல கட்டினது

சிங்கத்தை எவண்டா Chair - ல கட்டினது:

Tension ஆன நேரத்திலும் Terror ஆ யோசிக்கிற

ஆள பாத்திருக்கீங்களா? கொஞ்சம் பழைய தெலுங்கு படத்தில வர்ற

இந்த சீனை பாருங்க ? என்னமா யோசிக்கிறாங்க! ஒரு English (Hot Shot னு

நினைக்கிறேன்) படத்தில வர்ற Hero துப்பாக்கி தோட்டாவை Gun இல்லாம

சும்மா கையாலே எறிஞ்சே கொல்லுவார். அதெல்லாம் என்னா மேட்டரு.

இத பாருங்க.

வில்லன்கள் பாலகிருஷ்ணாவை ஒரு Chair ல கட்டி போட்டிருக்காங்க.


                                                      
அவரோட அண்ணனையும் கட்டி போட்டு அவர்

வயித்தில பயங்கரமான Latest BOMB ஒன்னையும் சேர்த்து கட்டி விட்டிராங்க அந்த பாவிங்க.


                                                             
நம்ம Hero அப்ப தான் கவனிக்கிறாரு,

கீழே 2 Bullet கிடக்கு. திருட்டு பசங்க துப்பாக்கி இல்லாம குண்டை மட்டும் போட்டுட்டு போயிருக்கானுங்க.


                                     
அந்த குண்டை பார்க்கவும் பாலகிருஷ்ணாவுக்கு

பயங்கரமான Idea தோணிருச்சு, அப்படியே சேரோட கீழே விழுந்து குண்டை ஒரு லுக் விடுறாரு.அந்த இடமே கப்படிக்கிற மாதிரி முக்கிக்கிட்டே சேரை இழுத்துக்கிட்டே குண்டு கிட்ட வர்றாரு.


                                                          
என்ன செய்ய போராருன்னு தெரியலயே?

டயம் வேற ஆகிக்கிட்டிருக்குனு யோசிக்கிறப்ப குண்டு பக்கத்தில வந்து...
அந்த குண்டை வாயில கவ்விராரு.



                   அந்த பாமை பார்த்து ஒரு லுக் விடுறாரு பாருங்க.


இப்ப நான் அந்த பாமை பத்தி சொல்லியே ஆகனும். அது ரொம்ப Latest, User Friendly வேற. ஆன் செய்ய சிகப்பு பட்டன்,ஆப் செய்ய பச்சை பட்டன். குழந்தை கூட Use செய்யலாம்.

                                    
இப்ப அவரு Punch Dialog வேற பேசனுமே? பல்லுல

குண்டை வைச்சுக்கிட்டு மனுசன் எப்படி பேசுவாரு.அப்பிடியே பேசினாலும் தெலுங்குல இல்ல பேசுவாரு, அதனால நானே எழுதுறேன் படிச்சுக்குங்க.


தோட்டாவை வைச்சு கைத்துப்பாக்கில சுட்டு பாத்திருக்க,

நாட்டு துப்பாக்கில சுட்டு பாத்திருக்க, ஏன் மெசின் கன்ல கூட

சுட்டு பாத்திருக்க, பல்லால கடிச்சுக்கிட்டு பட்டுனு போட்டு

தள்ளரதை பாத்திருக்கியா? காறி துப்பினா 400 மைல் வேகம்டா

பாக்கிறயா? பாக்கிறயா?

                                                   

அப்படியே குண்டை குறி பார்த்து பச்சை பட்டன் மேலே எறிஞ்சு பாமை Off ஆக்கிறாரு. வில்லன்களுக்கும் சரியான ஆப்பு.



சும்மா கொரியா, ஈரான்னு போகாம இந்த மாதிரி யோசிங்கப்பா. நாங்களும் ஜாலியா பாத்துட்டு வருவோம்ல.

                                                       



0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More