உலகின் எட்டாவது அதிசயம் என புகழப்படும் அங்கோர் வாட் ஆலயம் கம்போடியா நாட்டின் அடையாளமாகவுள்ளது. கெமர் சாம்ராஜ்யத்தின் மன்னன் 2-ஆம் சூர்யவர்மனால் இந்த ஆலயம் 12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. திராவிட கட்டட கலையை அடிப்படையாக வைத்துக் கட்டப்பட்ட இந்த ஆலயத்தின் பிரம்மாண்டம் காண்பவர்களை அசரவைக்கும் திறன் படைத்தது. ஏறக்குறைய இதன் வெளிச்சுவர் 1,300 மீட்டர் நீளம், 1,500...