அருமையான தமிழ் தொலைக்காட்சி

 டிஸ்கவெரி தமிழ் தொலைக்காட்சி:
 இன்று தமிழ் மொழியை வளர்க்காமல் சீர்குலைத்துக் கொண்டிருக்கும் பல தமிழக தொலைகாட்சிகளில் நடுவிலே ஒரு அயல் நாட்டு தொலைக்காட்சி தமிழ் மொழியை அதன் அடிநுனியில் இருந்து மீட்டெடுத்துக் கொண்டிருக்கிறது. இந்த தொலைக் காட்சியை பார்த்து மற்ற அனைத்து தமிழ

தொலை காட்சிகளும் வெட்கி தலை குனியவேண்டும் .

ஆம் இந்த டிஸ்கவெரி தமிழ் தொலைக்காட்சி நாம் இழந்த , பழக்கத்தில் இல்லாத பல அரிய சொற்களை அறிவியல் தமிழில் மிக நேர்த்தியாக நம் மக்களுக்கு எடுத்துச் செல்கிறார்கள். இவர்களின் தமிழ் சொல்லாடல் நம்மை வியக்க வைக்கிறது . ஒளிக் கோபுரம், சதுப்பு நிலங்கள், தாழ் நிலங்கள் , அகழ்வு உந்து , சம ஈர்ப்பு விசைகள், மின் ஆற்றல்கள் என பல அருமையான தமிழ் மொழி பெயர்ப்புகள் . ஆங்கிலமும் தமிழும் கலந்து கலந்து நம்மை எரிச்சல் உண்டாக்கும் தமிழ் தொலைக் காட்சிகளுக்கு நடுவில் இந்த அலைவரிசை நமக்கு தேனமுது .

இவர்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துவதோடு நம் குழந்தைகள் , குடும்பத்தினர் அனைவரையும் இந்த தொலை காட்சியை பார்க்கச் செய்து அறிவியலையும் தமிழையும் ஒருங்கே கற்போம், கற்பிப்போம். இதை உங்கள் நண்பர்களிடமும் பகிருங்கள் தோழர்களே!!!


ஆய கலைகள் அறுபத்து நான்கும் எவை?

ஆய கலைகள் அறுபத்து நான்கு:

1. எழுத்திலக்கணம் (அக்ஷரஇலக்கணம்);
2. எழுத்தாற்றல் (லிபிதம்);
3. கணிதம்;
4. மறைநூல் (வேதம்);
5. தொன்மம் (புராணம்);
6. இலக்கணம் (வியாகரணம்);
7. நயனூல் (நீதி சாத்திரம்);
8. கணியம் (சோதிட சாத்திரம்);
9. அறநூல் (தரும சாத்திரம்);
10. ஓகநூல் (யோக சாத்திரம்);
11. மந்திர நூல் (மந்திர சாத்திரம்);
12. நிமித்திக நூல் (சகுன சாத்திரம்);
13. கம்மிய நூல் (சிற்ப சாத்திரம்);
14. மருத்துவ நூல் ( வைத்திய சாத்திரம்);
15. உறுப்பமைவு நூல் (உருவ சாத்திரம்);
16. மறவனப்பு (இதிகாசம்);
17. வனப்பு;
18. அணிநூல் (அலங்காரம்);
19. மதுரமொழிவு (மதுரபாடணம்); இனியவை பேசுதல்/வசீகரித்தல்
20. நாடகம்;
21. நடம்;
22. ஒலிநுட்ப அறிவு (சத்தப் பிரமம்);
23. யாழ் (வீணை);
24. குழல்;
25. மதங்கம் (மிருதங்கம்);
26. தாளம்;
27. விற்பயிற்சி (அத்திரவித்தை);
28. பொன் நோட்டம் (கனக பரீட்சை);
29. தேர்ப்பயிற்சி (ரத ப்ரீட்சை);
30. யானையேற்றம் (கச பரீட்சை);
31. குதிரையேற்றம் (அசுவ பரீட்சை);
32. மணிநோட்டம் (ரத்தின பரீட்சை);
33. நிலத்து நூல்/மண்ணியல் (பூமி பரீட்சை);
34. போர்ப்பயிற்சி (சங்கிராமவிலக்கணம்);
35. மல்லம் (மல்ல யுத்தம்);
36. கவர்ச்சி (ஆகருடணம்);
37. ஓட்டுகை (உச்சாடணம்);
38. நட்புப் பிரிப்பு (வித்துவேடணம்);
39. காமநூல் (மதன சாத்திரம்);
40. மயக்குநூல் (மோகனம்);
41. வசியம் (வசீகரணம்);
42. இதளியம் (ரசவாதம்);
43. இன்னிசைப் பயிற்சி (காந்தருவ வாதம்);
44. பிறவுயிர் மொழியறிகை (பைபீல வாதம்);
45. மகிழுறுத்தம் (கவுத்துக வாதம்);
46. நாடிப்பயிற்சி (தாது வாதம்);
47. கலுழம் (காருடம்);
48. இழப்பறிகை (நட்டம்);
49. மறைத்ததையறிதல் (முஷ்டி);
50. வான்புகவு (ஆகாயப் பிரவேசம்);
51. வான்செலவு (ஆகாய கமனம்);
52. கூடுவிட்டுக் கூடுபாய்தல் (பரகாயப் பிரவேசம்);
53. தன்னுருக் கரத்தல் (அதிருசியம்);
54. மாயச்செய்கை (இந்திரசாலம்);
55. பெருமாயச்செய்கை (மகேந்திரசாலம்);
56. அழற்கட்டு (அக்கினித் தம்பனம்);
57. நீர்க்கட்டு (சலத்தம்பனம்);
58. வளிக்கட்டு (வாயுத்தம்பனம்);
59. கண்கட்டு (திருட்டித்தம்பனம்);
60. நாவுக்கட்டு (வாக்குத்தம்பனம்);
61. விந்துக்கட்டு (சுக்கிலத்தம்பனம்);
62. புதையற்கட்டு (கனனத்தம்பனம்);
63. வாட்கட்டு (கட்கத்தம்பனம்);
64. சூனியம் (அவத்தைப் பிரயோகம்)

போயும் போயும் இந்த நர்ஸையா சைட் அடிச்சோம்

கண் ஆபரேஷனுக்கு அப்புறம் உங்களுக்கு எப்படி
இருக்கு?


போயும் போயும் இந்த நர்ஸையா சைட் அடிச்சோம்னு
தோணுது டாக்டர்…!


*****************************

"கடைசி சொட்டு இருக்கும்வரை...."

 "போராடுவீங்களா தலைவரே...?" 

"சே... சே.... தண்ணியடிப்பேன்னு சொல்ல வந்தேன்....!"

*****************************

என் காதலி குற்றால அருவி மாதிரி

குளு குளுன்னு இருப்பாளா?

இல்லை. தலையிலேயே கொட்டுவா :-)

*****************************

ஒருத்தன்: எங்க மேனேஜர் கங்காரு மாதிரி.. 

நண்பன்: எப்புடிடா? 

ஒருத்தன்: எப்பவும் ஒரு குட்டியோடத்தான் இருப்பாரு!!!???....

*****************************

"நான் போலீசிலே சேர்ந்த பிறகு பிறந்த பையன் இவன்." 

"அப்படியா! என்ன பேரு வச்சிருக்கீங்க?" 

"மாமூலன்!"

*****************************

அப்பா! எங்க ஸ்கூலில் ‘தந்தையின் உழைப்பு’ என்ற தலைப்பில் கட்டுரைப்போட்டி நடக்கப்போகிறது… என்ன எழுதுவது?

நான் ஆபிஸில் உழைப்பதைப்பற்றி மட்டும் எழுது, வீட்டில் மாவாட்டுவதையெல்லாம் எழுதித் தொலைக்காதே…!!!???....

*****************************

எதுக்க அவரை செருப்பால அடிச்சே ?


அவர்தாங்க, பேசிக்கிட்டிருக்கும்போதே, “அடிச்செருப்பாலே”ன்னு சொன்னார்.

*****************************

ரசிகர் : எவ்ளவு பெரிய கஷ்டம் வந்தாலும் உங்க பாட்டை ஒரு தடவை கேட்பேன் சார்

பாடகர் : அப்படியா?

ரசிகர் : பின்ன, அ‌ந்த கஷடத்துல எ‌ன் சின்ன கஷ்டம் ஒண்ணும் பெரிசா தெரியாது பாருங்க.

*****************************

"ஒருத்தரைச் சிரிக்க வைக்க முயற்சி செஞ்சேன்.. கொலை முயற்சின்னு உள்ளே தள்ளிட்டாங்க.." 

"ஏன்..?" 

"பஸ்ஸில் தொங்கிட்டு வந்தவரை கிச்சுக் கிச்சு மூட்டக்கூடாதாம்.."

*****************************

மனைவி : வேலை செய்யும்போது இடுப்ப கிள்ளாதீங்கனு எத்தன தடவ சொலுறது .?

வேலைக்காரி : நல்ல சொல்லுங்கம்மா .! நானும் சொல்லி சொல்லி அலுத்து போயிட்டன்.!.!

*****************************

"டாக்டர்! இப்ப எங்கப்பாவுக்கு எப்படி இருக்கு?"

"எதையும் இருபத்துநாலு மணி நேரம் கழிச்சுதான் சொல்ல முடியும்!"

"இத நான் நேத்தே கேட்டதா நெனச்சு இப்ப சொல்லுங்களேன் டாக்டர்...!"

*****************************


சர்தார்ஜி ஜோக்ஸ்!! சிரிக்கலாம் வாருங்கள்!!

சர்தார்ஜி: ராத்திரி பூரா நான் ரயில் பிரயாணத்தில் தூங்கவே இல்லே!
நண்பன்: ஏன்? 
சர்தார்ஜி: எனக்கு அப்பர் பர்த்துதான் கிடைச்சுது.
நண்பன்: நீங்க ஏன் அப்பர் பர்த்தை மாத்திக்கலை? 
சர்தார்ஜி: ஹேய்! எக்ஸ்சேன்ஜ் பண்ணிக்கறதுக்கு லோயர் பர்த்ததிலே யாருமே இல்லையே! 
*************


சர்தார்ஜி ஒருவர் S.B. A/C. ஓபன் பண்ணுவதற்காக வங்கி ஒன்றிற்கு சென்றார்.
வங்கியில் கொடுத்த பார்மைப் பார்த்தவுடன் டெல்லிக்குப் புறப்பட்டார்.
ஏன் தெரியுமா??
அந்த பார்மில் "Fill Up In Capital". என்று போட்டிருந்ததாம்...
*************
சர்தார்ஜி ட்யுப் லைட்டின் அடியில் திறந்த வாயுடன் நின்று கொண்டிருந்தார்.
ஏன் தெரியுமா ??
டாக்டர் சொன்னாராம் இன்னைக்கு சாப்பாடு லைட்டா இருக்கணும்னு.
*************


சர்தார்ஜி ப்ரொபஸர் ப்ளம்பரை கல்லூரிக்கு உடனே வருமாறு கட்டளையிட்டார் 
ஏன் தெரியுமா??
வினாத்தாள் எப்படி எங்கே லீக் ஆகுதுன்னு கண்டு பிடிக்கத்தான்..... 
*************


நண்பன்: சான்டா உன்னோட பொண்ணு இறந்துவிட்டாள்...
மனம் நொந்த சர்தார்ஜி சிறிதும் தாமதிக்காமல் நூறாவது மாடியில் இருந்து குதித்து விட்டார்! 
ஐம்பதாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனுக்கு மகளே இல்லை என்பது!
இருபத்தைந்தாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லையென்று! 
பத்தாவது மாடியில் நினைவிற்கு வந்தது தனது பெயர் சான்டா இல்லே பான்டா என்று!
*************

காதலி: அன்பே! நமது நிச்சயதார்த்தன்று எனக்கு ரிங் கொடுப்பீங்களா? 
சர்தார்ஜி : கண்டிப்பா! உன்னோட போன் நம்பர் என்ன?
*************


கடினமான கேள்வி ஒன்றிற்கு சர்தார்ஜி பதில் கண்டு பிடித்து விட்டார். 
நண்பன்: முதலில் என்ன வரும் கோழிகுஞ்சா இல்லே முட்டையா?? 
சர்தார்ஜி: அட! இது கூட தெரியாத என்ன? நீ என்ன ஆர்டர் பண்ணியோ அதுதான் மொதல்லே வரும்! 
*************


டீச்சர் தனது வகுப்பு மாணவர்கள் அனைவரையும் கிரிகெட் நடந்து கொண்டிக்கும் நாளில் கட்டுரை ஒன்று எழுதச் சொன்னார்கள்.
அனைத்து மாணவர்களும் மும்முரமாக கட்டுரை எழுதத் துவங்கினர் ஒரு சர்தார்ஜி மாணவனைத் தவிர. 
பிறகு அந்த சர்தார்ஜி மாணவன் அவசர அவசரமாக எழுதி டீச்சரிடம் கொடுத்தான். 
டீச்சர் பேப்பரை பிரித்துப் பார்த்தா "மழையின் காரணமாக கிரிக்கெட் மேட்ச் கான்செல் செய்யப்பட்டது" என்று எழுதி இருந்தான்.
*************


ஜெராக்ஸ் எடுத்த பிறகு சர்தார்ஜி என்ன செய்வார்??
அசலும் நகலும் எழுத்துப் பிழை இல்லாமல் சரியாக இருக்கிறதா என்று செக் செய்வார்
*************


ஏன் சர்தார்ஜியால் அவசர உதவிக்கு 911 அவரோட இருந்து போனிலே அழைக்க மாட்டார்?? 
ஏனெனில் தனது போனில் 11 என்ற நம்பர் இல்லாத காரணத்தினால்தான்.... 
*************


சர்தார்ஜியும் அவரது மனைவியும் காபி கடையில் காபி அருந்திக் கொண்டிருந்தனர் 
சர்தார்ஜி: சீக்கிரம் குடி
மனைவி: ஏன்
சர்தார்ஜி: ஹாட் காபி ருபாய் 5 கோல்ட் காபி 10
*************


சர்தார் ஒரு ஆர்ட் கேலரியில்: என்ன இது கொடுமை இங்கே காண்பதை போய் மாடர்ன் ஆர்ட் என்று சொல்லுகிறீர்களே? இது நியாயமா?
ஆர்ட் டீலர்: தயவு செய்து என்னை மன்னிக்கணும் சார்! அது ஆர்ட் இல்லே கண்ணாடி! 
*************


சர்தார் செய்தி: பஞ்சாபில் ரெண்டு சீட் வசதி உள்ள விமானம் சுடுகாட்டில் விபத்துக்குள்ளாகி விழுந்து கிடந்தது. உள்ளூரில் உள்ள சர்தார்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்று, இதுவரையில் 500க்கும் மேற்பட்ட உடல்களைக் கைப்பற்றியுள்ளனர். மேலும் இடிபாடுகளுக்கு இடையே உடல்கள் இருக்கலாம் என்று இன்னமும் தேடிக் கொண்டிருக்கின்றனர்.
*************


உயிருக்கு போராடிக் கொன்டிருக்கும் நண்பரைச் சந்திக்க சர்தார்ஜி ஒருவர் மருத்துவ மனைக்குச் சென்றார். அங்கே நண்பனையும் கண்டார். உணர்ச்சி பெருக்கில் அருகே வேகமாக சென்று நின்றார்.
"Chin Yu Yan" இந்த வார்த்தைகளை கூறி விட்டு இறந்து விட்டார் அந்த நண்பர்.
சர்தார்ஜி கடைசி வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்து கொள்ள உடனே சைனாவிற்கு விரைந்தார்.
அதற்கு அர்த்தம் "ஆக்சிஜன் டியுப் மீது நின்று கொண்டிருக்கின்றாய்"
*************

சர்தார்ஜி: கண்களை மூடிக் கொண்டு டியுப் லைட்டின் கீழே நின்று கொண்டிருந்தார்.
 சர்தார்ஜியின் மனைவி: வியப்புடன் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? என்று வினவினார்.
சர்தார்ஜி: நான் உறங்கும்போது எப்படி இருப்பேன் என்று பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார் சர்தார்ஜி.
*************

சர்தார்ஜி ஒருவர் ரயிலில் பிரயாணம் செய்து கொண்டிருந்தார்.
ரயிலில் உள்ள பாத்ரூம் செல்ல கதவை திறந்தார். அங்கே ஒருவர் நிற்பதைக் கண்டு எக்சூச்மி என்று கூறிவிட்டு இருக்கைக்கு திரும்பினார். சில நிமிடம் கழித்து சென்றால் அதே ஆசாமி நின்று கொண்டிருந்தார், இப்போதும் எக்சூச்மி என்று கூறிவிட்டு இருக்கைக்கு திரும்பினார்.

இப்படி பல முறை நடந்து ஓய்ந்து கடைசியாக டிக்கெட் பரிசோதகரிடம் "ஒரு ஆள் ரொம்ப நேரமா பாத்ரூமிலே நின்று கொண்டு வெளியே வரமாட்டேங்கிறான்"என்று முறையிட்டார்.

"அப்படியா? எங்கே வாருங்கள் பார்க்கலாம்!" பாத்ரூம் கதவை திறந்து பார்த்தார். அங்கே ஒருவரும் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு "இங்கே யாருமே இல்லையே" என்று சர்தார்ஜியை பார்த்து.

"அப்படியா! எங்கே நகருங்கள் நான் பார்க்கிறேன். என்ன சார் அங்கே பாருங்க நிக்கறான்"

"சாரி, உள்ள யாரோ TTR இருக்காங்க...என்னால அவர வெளிய போக சொல்ல முடியாது" என்று அலுப்புடன் தனது வேலையை தொடர நகர்ந்தார் T.T.R.
*************

யாரையும் புண்படுத்தும் நோக்கமல்ல! பகிர்ந்தவை!! கேட்டவை!!

தொலைந்துபோன மொபைலை கண்டுபிடிக்க - How to find your lost cell/mobile phone?


 உங்களின் MOBILE PHONE தொலைந்து விட்டதா நீங்கள் கவலை பட வேண்டாம் காவல்நிலையத்திற்கும் செல்ல வேண்டிய அவசியம் இருக்காது.உங்கள் மொபைலில் பின்புறம் IMEIஎன்று அழைக்கப்படும் (INTERNATIONAL MOBILE EQUIPMENT IDENTITY ) 14 இலக்க எண் மூலம்எளிதாக கண்டு அறியலாம்.இந்த IMEI NO மூலமாக தான் நமது நாட்டில் நிகழ்ந்து வரும் குற்றங்களுக்கான தடயமாக இருக்கிறது.உங்களின் MOBILE ஐ


 எடுத்து அதில் உள்ள SIM ஐமாற்றினாலும் அவர்கள் நிச்சயமாக சிக்கி கொள்வார்கள்.

இரண்டு வழிகளில் அவர்களை கையும் களவுமாக பிடிக்கலாம்:

இந்த முறை அனைவருக்கும் பொருந்தும் அதாவது அனைத்து வகையான MOBIL PHONE கும் பொருந்தும் 


முதலாவது முறை:

send an e-mail to cop@vsnl.net with the following info.
Your name:
Address:
Phone model:
Make:
Last used No.:
E-mail for communication:
Missed date:
IMEI No:


இரண்டாவது முறையில்: 


GUARDIAN என்ற SOFTWARE  உங்களின் மொபைலில் INSTALLசெய்வது மூலம் இதை இன்னும் சுலபமாக கண்டுப்பிடிக்க முடியும் .நீங்கள் நினைக்கலாம்அந்த SOTWARE  UNINSTALL செய்தால் அதன் பயன்பாட்டை முடக்கப்படலாம் என்று.ஆனால்அதில் PASSWORD பயன்படுத்தப்படுகிறது எனவே கொஞ்சம் சிக்கல் கலந்த விஷயம் .அவர்உங்களின் SIM  REMOVE செய்து அவரோட SIM  போடும்போது அவரின் MOBILE NOஉங்களின் மற்றொரு REFRENCE NO க்கு ஒரு MESSAGE வரும்.எனவே அவர் தப்பிக்கமுடியாது எத்தனை முறை அவர் SWITCH OFF/ON செய்தாலும்.அவரின் MOBILE NOஉங்களுக்கு குறுந்தகவல்ஆக வந்துக்கொண்டே இருக்கும்.

கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தளத்திற்கு சென்று உங்கள் MOBIL DEVICE க்கு ஏற்றாற்போல் நீங்கள் DOWNLOAD செய்துகொள்ளுங்கள்.


http://www.guardian-mobile.com/

தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது!


  தேள்கள் மற்றும் தேள் கடிக்கு முதலுதவி பற்றிய தகவல்கள்:

தேள் (Scorpion) கணுக்காலிகள் பிரிவைச் சேர்ந்த உயிரினமாகும். தேள்களில் கருந்தேள் உள்ளிட்ட பல வகைகள் உள்ளன

இதன் உடல் கணுக்களால் ஆனது. இது ஆறு கால்களும் இரண்டு முன்பக்கக் கொடுக்குகளும் கொண்டிருக்கும். இதன் வால் கணுக்களாகவும் நுனியில் ஒரு நச்சுத்தன்மையுள்ள கூர்மையான கொடுக்கும் கொண்டிருக்கும். முன்பக்கக் கொடுக்குகள் இரையைக் கவ்விப் பிடிப்பதற்கும் பின்பக்கக் கொடுக்கு இரை அல்லது எதிரிகள் மீது நஞ்சைப் பாய்ச்சிக் கொல்வதற்கும் உதவுகின்றன.


தேள் கடித்தால் வாழ் நாளில் இதய நோயே வராது - ஆய்வறிக்கை

தேள் கடித்தால் ஆயுள் முழுவதும் இதயத்தில் அடைப்பு, இதயம் செயலிழப்பால் இறப்பு நேரிடும் வாய்ப்பை தடுக்கிறது. இதை இங்கிலாந்தை சேர்ந்த லீட்ஸ் பல்கலைக்கழக ஆராய்ச்சி தெரிவிக்கிறது. அது மேலும் கூறியதாவது: இதயத்தின் ரத்த தமனிகளில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா என்ற பிரச்னை ஏற்படும் வாய்ப்புள்ளது. இந்த பிரச்னை உள்ளவர்களின் இதய ரத்த தமனிகளில் ரத்த செல்கள் புதிதாக வளரும். தமனியில் ரத்த ஓட்டத்தை அவை தடுக்கும். அதனால், இதயக் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, இதயம் செயலிழக்கும் அபாயம் ஏற்படலாம்.

உயிருக்கு ஆபத்தான இந்த பிரச்னையை சரி செய்ய, இதய அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ஆனால், இந்த பிரச்னையே வாழ்நாளில் ஏற்படாமல் இருக்க தேள் உதவுகிறது. தேள் கொட்டும்போது அதன் கொடுக்கில் இருந்து விஷம் வெளியாகிறது. அந்த விஷத்தில் மார்கடாக்சின் என்ற பொருள் இருக்கிறது. அது இதயத் தமனியில் நியோயின்டிமல் ஹைபர்பிளேசியா உருவாவதை தடுக்கிறது. அதன்மூலம், புதிய செல்கள் உருவாவது தடுக்கப்பட்டு, இதயத்தில் அடைப்பு, செயலிழப்பு தவிர்க்கப்படும்.
இதயத் தமனிகளில் புதிய செல்கள் உருவாவதை மார்கடாக்சினில் உள்ள கேவி 1.3 என்ற பொட்டாசியம் தடுத்து விடும். இது தொடர்பான ஆராய்ச்சியில் நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக, மத்திய அமெரிக்கா, தென் அமெரிக்க பார்க் என்ற தேளின் விஷத்தில் மார்கடாக்சின் அதிகம் உள்ளது. தேள் கொட்டுவதால் மனித உயிருக்கு ஆபத்தில்லை என்ற போதிலும் துடிக்கச் செய்யும் வலி, வீக்கம் ஆகியவற்றுக்கு உடனடி சிகிச்சை தேவை.
ஒரு முறை தேள் கொட்டு வாங்கியவர்கள் ஆயுள் முழுக்க இதய பைபாஸ் பிரச்னையில் இருந்து தப்ப முடியும் என்கிறது ஆராய்ச்சி முடிவு. இது பற்றி பிரிட்டிஷ் ஹார்ட் பவுண்டேஷனின் இயக்குனர், ஆராய்ச்சி பேராசிரியர் பீட்டர் வீஸ்பெர்க் கூறுகையில், தேளின் விஷத்தில் உள்ள மார்கடாக்சினை முறையாக பயன்படுத்தினால், ஆபத் தான இதய நோய்க்கு மருத்துவ பயனை பெறலாம் என்பது உறுதி என்றார்.

தேள் கடிக்கு முதலுதவி

கொடிய வகை தேள்கள் கடித்தால் உயிருக்கே ஆபத்து ஏற்படும். எனவே தேள் கடிக்கான முதலுதவி சிகிச்சை முறைகளை அனைவரும் அறிந்துகொள்வது நல்லது.

தேள் கடித்தவுடன் அதன் கடிவாய்க்கு சுமார் 15 செ.மீ. மேல் பகுதியில் கயிறு அல்லது துணியால் இறுக்கி கட்டவேண்டும். இதன் மூலம் தேளின் விஷம் உடலில் பரவுவதை தடுக்க முடியும்.

இதன் பின்னர் தேள் கடித்த இடத்தில் சுமார் அரை மணி
நேரம் ஐஸ்கட்டி அல்லது குளிர்ந்த நீரில் நனைத்த துணியால் ஒத்தடம் கொடுக்க வேண்டும். அந்த துணியால் கடிவாய் பகுதியில் கட்டும் போடலாம். இதன் மூலம் தேள் கடித்த வலி ஓரளவு குறையும்.

கடித்த இடத்தில் தேளின் கொடுக்கு பதிந்திருந்தால் அதை உடனடியாக அகற்ற வேண்டும். தேள் கடித்த பகுதியை உதறவோ, மேல் நோக்கி தூக்கவோ கூடாது. கீழ்நோக்கி தொங்கபோடலாம்.

முதலுதவி செய்ததும் உடனடியாக மருத்துவமனைக்கு
கொண்டு சென்று முறையான மருத்துவச் சிகிச்சை பெறுவது அவசியம்.
தேள் விஷம் - சிறந்த வலி நிவாரணி
தேளின் விஷம் மிகக் கொடியதாக இருக்கலாம். ஆனால் அதை சிறந்த வலி நிவாரணியாக பயன்படுத்தலாம் என கூறுகிறார் இஸ்ரேல் ஆய்வாளர் மைக்கேல் குர்விட்ஸ்.

இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழக தாவர அறிவியல் துறை பேராசிரியர் மைக்கேல் குர்விட்ஸ் கூறுகையில், தேளின் விஷத்திலிருந்து சிறந்த வலி நிவாரணியை உருவாக்கக் கூடிய
சாத்தியங்கள் உள்ளன. இதுகுறித்து விரிவாக ஆய்வு செய்து வருகிறோம்.
எந்தவித பக்க விளைவையும் தேளின் விஷத்திலிருந்து உருவாக்கப்படும் வலி நிவாரணி ஏற்படுத்தாது. தேளின் விஷத்தில் உள்ள பெப்டைட் டாக்சின்கள், நமது நரம்பு மண்டலம் மற்றும் சதைப் பகுதிகளில் ஊடுறுவி வலியை முற்றிலுமாக அகற்ற உதவும்.

பாலூட்டிகளின் உடல்களில் ஒன்பது வகையான சோடியம் வழிகள் (sodium channels ) காணப்படுகிறது. இவற்றில் சிலதான், வலியை உருவாக்கி அதை மூளைக்கு தெரிவிக்கிறது.

இந்த சோடியம் சேனல்களில் பெப்டைட் டாக்சின்கள் எவ்வாறு செயல்பட முடியும் என்பதை ஆய்ந்து வருகிறோம். இதை சரி செய்து விட்டால் நிச்சயம் இந்த வலி நிவாரணியை வெற்றிகரமாக உருவாக்க முடியும்.மேலும் வலி உருவாகும் இடத்தையும் துல்லியமாக கண்டறிந்து அந்த இடத்தில் மட்டும் மருந்து வேலை பார்க்கும் வகையில் செய்ய முடியும். இதன் மூலம் பல்வேறு பக்க விளைவுகளை நாம் தவிர்க்க முடியும் என்றார் குர்விட்ஸ்.
இஸ்ரேலில் உள்ள மஞ்சள் நிற தேளில்தான் தற்போது குர்விட்ஸ் தலைமையிலான குழு ஆய்வு செய்து வருகிறது. உலகிலேயே மிகவும் அபாயகரமான நச்சைக் கொண்டது இந்த தேள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தேளின் விஷத்தில் 300க்கும் மேற்பட்ட பெப்டைடுகள் உள்ளனவாம்.

தகவல் அறியும் உரிமை (Right To Information) என்றால் என்ன? அதை எப்படிப் பெறுவது?

 "தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்படும் தகவல்கள் மூலம் தெரியவந்தது"... என்ற வாசகத்தை நீங்கள் அடிக்கடி படிக்கவும் கேட்கவும் நேரிட்டிருக்கலாம். இந்த தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 என்பது இன்னும் பரவலாக அனைவராலும் அறியப்படாத ஒன்றாக சிலர் மட்டுமே அறிந்ததாக இருக்கிறது.

அதாவது இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் எந்த ஒரு தகவலையும் பெறுவதற்காகத்தான் தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 கொண்டு வரப்பட்டது. இந்த சட்டமானது 2005-ம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் முதன்மையான நோக்கமே, அரசாங்கத்திடம் இருக்கும் தகவல்கள் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதுதான். ஜம்மு காஷ்மீரைத் தவிர நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் இந்த சட்டம் நடைமுறையில் உள்ளது.

என்ன மாதிரியான தகவல்களைப் பெற முடியும்?

- ஒரு தனிநபர், அரசாங்கம் தொடர்பான எந்த ஒரு தகவலையும் அரசாங்கத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம்.

- அரசாங்கத்தின் எந்த ஒரு ஆவணத்தையும் கேட்டுப் பெறலாம்

- அரசாங்கத்தின் ஆவணங்களை தனி நபர்கள் ஆய்வு செய்யலாம்

- அரசாங்கத்தின் பணிகளை அவர்களால் கண்காணிக்கவும் முடியும்

- எந்த ஒரு அரசாங்கப் பணியினது மாதிரிகளையும் பெற்றுக் கொள்ள உரிமை இருக்கிறது.

யார் இந்த தகவல்களைத் தருவது?

அரசாங்கத்தின் ஒவ்வொரு துறையும் ஒருவர் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட நபர்களை இந்தப் பணிக்காகவே நியமித்திருக்கிறது. பொது மக்களுக்கான தகவல் அளிக்கும் அதிகாரி (Public Information Officers) என்ற பொறுப்பில் அவர்கள் நியமிக்கப்படுள்ளனர். தகவல் அறியும் சட்டத்தின் கீழான விண்ணப்பங்களை இவர்கள் ஏற்று உரிய பதில்களை சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து பெற்று அனுப்பி வைப்பர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வந்த விண்ணப்பங்களுக்கு 30 நாட்களுக்குள் பதிலளிக்காமல் விட்டால் இந்த அத்காரிதான் பொறுப்பானவர். இதேபோல் தவறான தகவல் கொடுத்தாலும் அதற்குரிய தண்டனை அல்லது அபாரதத்துக்குரிய நபராகவும் இவரே இருப்பார். இவர் உரிய தகவல்களைத் தராத நிலையில் தகவல் அறியும் ஆணையத்திடம் ஒருவர் முறையீடு செய்யலாம்.

ஆர்.டி.ஐ. விண்ணப்பிப்பது எப்படி?

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் பெறுவதற்கு என தனியாக எந்த ஒரு விண்ணப்பமும் இல்லை. ஒரு வெள்ளைத்தாளில் எழுதிக் கொடுத்தாலே போதும். இருப்பினும் தகவல் கோருபவரின் பெயரும் தொடர்பு முகவரியும் மிகவும் அவசியமானது. இந்த இரண்டையும் நீங்கள் கொடுக்காமல் விட்டால் உங்களால் எந்த ஒரு தகவலையும் பெற முடியாது.

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் விண்ணப்பிப்போர் ரூ.10 செலுத்த வேண்டும். வங்கி வரைவோலையாகவோ, பணமோ செலுத்தி உரிய ரசீதையும் பெற்றுக் கொள்ளலாம். ஒரு பக்க ஆவணத்துக்காக ரூ.2 செலுத்த வேண்டும். இது மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடும்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழான விண்ணப்பத்தை உள்ளூர் அஞ்சலகத்தில் அமைக்கப்பட்டுள்ள இதற்கான பிரத்யேக கவுண்ட்டரில் செலுத்தலாம்.

தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சிக்காலட்தில் இணையதளம் மூலமாகவும் தகவல்களைப் பெற முடியும். இன்னும் சில இடங்களில் கால் செண்டர்களும் கூட அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கான இணையதளங்கள்:

http://www.righttoinformation.gov.in
http://www.rtiindia.org

இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க http://www.rtination.com என்ற தளத்தைப் பார்வையிடலாம்.

ஓட்டுநர் உரிமம், சாலை மேம்பாடு, அடிப்படை கட்டமைப்பு, பாஸ்போர்ட்டுக்கான போலீசாரின் ஆய்வுப் பணி மற்றும் ஊழல் புகார்கள் ஆகியவை குறித்தே பெரும்பாலானோர் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விளக்கம் கேட்கின்றனர்.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More