Showing posts with label சாதனைத் தமிழர். Show all posts
Showing posts with label சாதனைத் தமிழர். Show all posts

ஓ Jesus நடிகர் சந்திரபாபு - சில உண்மையான குறிப்புகள்

தமிழ் சினிமாவின் உலகில் முதன்முதலாக மிகவும் நேர்த்தியாக உடை அணியும் பழக்கத்தை (கோட், சூட் அணியும் பழக்கம்) கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவையே சாரும். அவர் உடை அணியும் அழகே தனி. புதிய நாகரிகத்தை தன்னை பார்த்து பிறர் தெரிந்துகொள்ளும்படி உடை அணிவார். சந்திரபாபுவுக்கு மிகவும் பிடித்த உடை - வெள்ளை சட்டை, கருப்பு பேண்ட். சட்டையின் கையை மடித்துவிட்டிருப்பது அழகாக இருக்கும். பேண்ட் பாக்கெட்டுக்கு வெளியே கர்சிப் தெரிவதுபோல் ஸ்டைலாக வைத்திருப்பார். Perfume மீது அதிக காதல் கொண்டிருந்தார் சந்திரபாபு. அவருக்கு மிகவும் பிடித்த Perfume - Channel 5. படபிடிப்புகளில், காட்சியில் நடித்துவிட்டு வந்ததும் - 'ரெவ்லான்' என்ற உயர்தர சென்ட் பூசப்பட்ட வெள்ளை நிற கர்சிப்பை எடுத்து முகத்தை துடைத்துகொள்வது, சந்திரபாபுவின் வழக்கம்.

'ஓ Jesus' என பெருமூச்சு விட்டபடி, அமெரிக்க பாணியில் அடிக்கடி உச்சரிப்பார். வெகுநேரம் மெளனமாக வேறு எங்கோ பார்ப்பதுபோல் இருந்துவிட்டு, தம் முன் உள்ள நபரை சட்டென்று திரும்பிப்பார்த்து குழந்தைபோல் புன்னகைப்பார். வீட்டில், பெரும்பாலும் வெள்ளை நிற கட்டம் போட்ட லுங்கியைத்தான் அணிந்திருப்பார். பனியன் இல்லாமல் வெள்ளைநிற முழுக்கை சட்டை அணிந்திருப்பார். பொத்தான்கள் போடப்படாமல் இருக்கும். கையை மடித்து விட்டிருப்பார். சோபாவில் ஏறி சம்மணம் போட்டு உட்கார்ந்து, Gold Flake சிகரெட்டை ஸ்டைலாக ரசித்து குடிப்பார்.

ரேடியோகிராமில், வெளிநாட்டிலிருந்து வரவழைக்கப்பட்ட அமெரிக்க, ஸ்பானிய, Mexican இசைத்தட்டுக்களை போட்டு ஓடவிட்டு, பக்கத்தில் இருப்பவர் யாராக இருந்தாலும் சரி, அவரை தன்னுடன் நடனமாட அழைப்பார். தன்னுடன் ஒழுங்காக ஈடுகொடுத்து ஆடாதவர்களை செல்லமாக கெட்ட வார்த்தைகள் சொல்லி திட்டுவார்.

ஷூட்டிங்கின்போது, துண்டுதுண்டாக நறுக்கப்பட்ட பச்சை காரட்களையும் வெள்ளரிகளையும் ஒரு தட்டு நிறைய வைத்து சாப்பிடுவார் சந்திரபாபு.
யாருக்கு போன் பண்ணினாலும், வெளியில் இருந்து அழைப்பு வரும்போதும், 'ஹலோ' என தொடங்காமல், 'சந்திரபாபு' என, தன் பெயரை ரசனையுடன் சொல்லி உரையாடலை அழகாக தொடங்குவார்.

யாரையும் 'சார்' போட்டு அழைக்கமாட்டார் சந்திரபாபு. எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும் பெயருக்கு முன்னால் 'மிஸ்டர்', 'மிஸ்', 'மிஸ்ஸஸ்' சேர்த்து அழைப்பதே சந்திரபாபுவின் பழக்கம். வீட்டில், தானே சப்பாத்தி மாவு பிசைந்து, உருட்டி, சப்பாத்திகளை போட்டு சுட்டு எடுத்து, அதற்கு தொட்டுக்கொள்ள பதார்த்தமும் ஏதாவது செய்து வைத்துவிட்டு, குளித்துவிட்டு வந்து, பாட்டிலை திறந்து ஒரு கிளாசில் விஸ்கியை ஊற்றி வைத்துக்கொண்டு, சப்பாத்தியை கத்தியால் அழகாக வெட்டி ஸ்டைலாக உண்பார் சந்திரபாபு.

சந்திரபாபு - ராஜா அண்ணாமலைபுரத்தில் (அந்நாளில் கேசவபெருமாள்புரம்) சொந்தமாக வீடு ஒன்று கட்டினார். இரண்டு மாடிகள் கொண்ட வீடு இது. தரைதளத்தில் இருந்து இரண்டாவது தளத்திற்கு காரிலேயே செல்லும்படியாக கட்டப்பட்டது.

ஒருமுறை - தொலைபேசியில் மனோரமாவிடம், ''நான் ராஜா அண்ணாமலைபுரதுல19 கிரௌண்டுல ஒரு வீடு கட்டுறேன் மனோரமா. அந்த மாதிரி வீடு எங்காவது இருக்குன்னு யாராவது சொல்லட்டும், அந்த வீட்டை நான் குண்டுவச்சி வெடிச்சிடுவேன்'' என்று தான் கட்டும் வீட்டை பற்றி பெருமையாக சொன்னார் சந்திரபாபு. இந்த வீடு, 'மாடி வீட்டு ஏழை' படத்தால் ஏற்பட்ட கடனால், அவர் கையை விட்டுப்போனது.

சந்திரபாபு, கார் ஓட்டுவதில்கூட ஒரு வித்தியாசத்தை கடைப்பிடித்து வந்தார். அவர் தனது பியட் காரை ஒட்டி செல்லும்போது பார்ப்பவர்கள் - ஒன்று பயப்படுவார்கள், இல்லை சிரிப்பார்கள். காரணம், அடிக்கடி தன் முழங்கைகளாலேயே ஸ்டியரிங்கை பிடித்து காரை வளைத்து திரும்பி, அவர் ஓட்டும் வேகம் பிறரை திரும்பிபார்க்க வைக்கும். இப்படி ஒட்டி சிறிய விபத்துக்கள் சிலவற்றையும் சந்தித்துள்ளார்.

''எனக்கு மேலைநாட்டு நாகரிகங்களை, பழக்கவழக்கங்களை கற்றுக்கொடுத்தவன் அவன். என்னை கிளப்புக்கெல்லாம் அழைத்து செல்வான். அதற்காக என்னை டை, கோட் எல்லாம் அணியவைப்பான். என்னைப்பற்றி என் இசையறிவை பற்றி, இசையில் எனது டெஸ்ட்டை பற்றி முழுமையாக தெரிந்துகொண்டவன் என் நண்பன் சந்திரபாபு தான். அவன் சந்தோஷத்துக்கும் குடிப்பான், கவலைக்கும் குடிப்பான், கோபத்திலும் குடிப்பான்'' என்று தன் நண்பனின் செய்கைகளை பற்றி கூறியுள்ளார் MS. விஸ்வநாதன். 'யார்டிலிங்' (குரலை இழுத்து இழுத்து பிசிர் அடிப்பது போல் பாடுவது) என்ற பாடும் முறை, மேலை நாட்டை சார்ந்தது. ஹிந்தியில் நடிகர் கிஷோர் குமார் அடிக்கடி யார்டிலிங் செய்வார். சந்தோஷமாக பாடப்படும் பாடல்களின் இடையே யார்டிலிங் செய்வார்கள். தமிழ் பாடல்களில் யார்டிலிங் என்ற முறையை கொண்டுவந்த பெருமை சந்திரபாபுவையே சாரும். 'குங்கும பூவே...' பாடல் 'சபாஷ் மீனா' படத்துக்காக உருவாக்கப்பட்டதுதான். தயாரிப்பாளர் P.R. பந்தலுவை விட்டுவிலகிய சந்திரபாபு, அந்த பாடலை 'மரகதம்' படத்துக்காக பாடிவிட்டார்.


பாக்யராஜின் மிக சிறந்த திரைக்கதை அம்சம் உள்ள படமான 'அந்த 7 நாட்கள்' - சந்திரபாபுவின் நிஜ வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்ட படம் என்ற பேச்சு அந்த சமயத்தில் வந்தது. ஒரு நடிகனுக்கு பெயர் என்பது, அவனுக்கென்று ஒரு தனி பாணி உருவாக்கிகொள்வதுதான். பிற்காலத்தில் வேறு யாராவது அந்த பாணியை பின்பற்றி நடிக்கவேண்டும். அதைபார்த்து இது அந்த நடிகரின் பாணி என மற்றவர்கள் கூறவேண்டும். சந்திரபாபுவும் அப்படி தனக்கென தனி பாணி உருவாக்கி கொண்டவர் தான். ஆனால் அவரது பாணியை பின்பற்றி நடிப்பது என்பது யாராலும் இயலாத காரியம். ஒரு ரிக்க்ஷாகாரன் பாத்திரம் என்றால் அதற்கு ஏற்றாற்போல் தன் நடை, உடை, பாவனைகளை மாற்றி அசத்துவார். அதேபோல் ஜெர்ரி லூயிஸ் போன்ற ஹை-கிளாஸ் காமெடிக்கும் பொருந்திவந்த நபர் சந்திரபாபு.

தன் திறமைமீது அவருக்கு கர்வம் உண்டு. அதற்காக அதை திமிர் என்று சொல்லமுடியாது. ஆனால், பலரால் 'திமிர் பிடித்தவன்' என தவறாக புரிந்துகொள்ளப்பட்டவர். தன் புதுமையான ஐடியாக்களை தான் நடிக்கும் படங்களில் தன் கேரக்டர்களில் செயல்படுத்தி பார்க்க நினைப்பவர் சந்திரபாபு. தன் நினைப்பதை, செயல்படுத்த நினைத்த ஐடியாக்களை செயல்படுத்தியே தீரவேண்டும் என்ற பிடிவாத குணம் உண்டு. தான் சொல்வது தவறு என்று தெரிந்தால், தயங்காமல் ஒப்புக்கொள்வார். அதற்காக வருத்தம் தெரிவிப்பார்.
1958-இல் சந்திரபாபுவுக்கு 'நடிகமணி' என்றொரு பட்டம் கொடுக்கப்பட்டது. பட்டத்தை அளித்தவர், அப்போதைய அமைச்சர் லூர்த்தம்மாள் சைமன்.
ஒரு நகைச்சுவை நடிகர் பாடிய 'சோக கீதங்கள்' பெரிய அளவில் ரசிக்கப்பட்டது சந்திரபாபு பாடல்களை மட்டும்தான்.

இன்றும் பெரும்பாலான லைட் மியூசிக் குழுக்களில் - யாராவது ஒருவர், சந்திரபாபுவின் குரல், மேனரிசம், நடனம் என அவரது பாடல்களை இந்த தலைமுறைனரிடமும் பரப்பி வருகின்றனர். அவரது பாடல்களுக்கு இந்த தலைமுறையினரிடமும் நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

'சென்னை சினிமா ரசிகர்கள் சங்கம்' சார்பாக ஆண்டுதோறும் திரை கலைஞர்களுக்கு விருது வழங்கப்பட்டு வந்தது. அதில் 1957 முதல் 'சிறந்த நகைச்சுவை நடிகர்-நடிகை' என விருதுகள் உருவாக்கப்பட்டன. அதில் முதல் விருதை பெற்றவர் சந்திரபாபு தான். படம்: 'மணமகன் தேவை'.

தன்னம்பிக்கை ஒரு மில்லிலிட்டர் கூடிப்போனாலும் தலைகனம் ஆகிப்போகும். சந்திரபாபுவிடம் இருந்தது தன்னம்பிக்கை மட்டுமே. அதற்கு உதாரணம், இலங்கை வானொலியில் அவர் பேட்டி கொடுக்கும்போது - 'உலகத்திலேயே சிறந்த நடிகர் யார்?' என பாபுவிடம் கேள்வி கேட்கப்பட்டபோது, 'There is only one சந்திரபாபு. அடுத்து சிவாஜி கணேசன் நல்லா நடிக்கிறான்' என்று பேட்டி கொடுக்க, சிவாஜி கணேசனின் வெறித்தனமான ரசிகர்களின் வெறுப்பை சம்பாதித்துக்கொண்டார் சந்திரபாபு.

நடிகை சாவித்திரி ஒருமுறை இந்தோனேசியாவுக்கு போயிருந்தபோது, அப்போதைய அந்நாட்டு அதிபர் சுகர்தோ கொடுத்த விருந்தில் கலந்துகொண்டார். அதிபரின் வற்புறுத்தலால் விருந்தில் மது அருந்திய சாவித்திரி, அதன்பிறகு மதுவுக்கு அடிமையாகிவிட்டார். மாலை நேரங்களில் மது அருந்த சாவித்திரிக்கு 'கம்பெனி' கொடுத்தவர் சந்திரபாபு தான்.

இருவருக்கும் இடையே முறையற்ற உறவு இருந்தது என்று சொல்லப்பட்டது. 'சாவித்திரியால் சந்திரபாபு கெட்டான்', 'சந்திரபாபுவால் சாவித்திரி கெட்டாள்' என்றும் சொல்லப்பட்டது.

ஒருவரை பற்றி விமர்சனம் செய்யும்போது, அந்த நபருக்கு எதிரான உண்மையான கருத்துக்களை கூற சந்திரபாபு தயங்கியதே இல்லை. அதனால் வரும் பின் விளைவுகளை பற்றி அவர் யோசித்ததும் இல்லை. மனதில் தோன்றியதை உதட்டில் பேசிவிடுவார். இதனால் அவர் அடைந்த இன்னல்கள் ஏராளம்.

ஒருமுறை சந்திரபாபு மது அருந்தியிருந்த நிலையில், ஒரு பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்தார். அந்த பேட்டி, அவருக்கு திரை உலகில், பலரது வெறுப்பை சம்பாதித்து கொடுத்தது. அந்த பேட்டியில்...

ஜெமினி கணேசன் பத்தி என்ன நினைக்கிறிங்க?

அவன் என்னோட ஆதி கால நண்பன். திருவல்லிகேணியில குப்புமுத்து முதலி தெருவில ஒரு மாடியில நான் குடியிருந்தேன். அப்பா அவன் 'தாய் உள்ளம்' படத்துல நடிச்சிகிட்டிருந்தான். அப்பா அவனுக்கு நான் காமெடி எப்படி பண்ணனும், பேத்தாஸ்னா எப்படி பண்ணனும், லவ் சீன எப்படி பண்ணனும்னு நடிச்சி காட்டினேன். அடே அம்பி, இத்தனை வருஷம் ஆச்சேடா, இன்னும் நடிப்புல எந்த முன்னேற்றத்தையும் காணுமேடா. நீ போன ஜென்மத்துல வட்டி கடை வச்சிருந்திருப்படா, படுபாவி.

சிவாஜி கணேசன் பத்தி உங்க அபிப்ராயம் என்ன?

அவர் நல்லா நடிகர். பட், அவரை சுத்தி காக்கா கூட்டம் ஜாஸ்தி இருக்கு. அந்த ஜால்ரா கூட்டம் போயிடிச்சின்னா அவர் தேறுவார்.

MGR பத்தி உங்க அபிப்ராயம் என்ன?

அவர் கோடம்பாக்கத்துல ஒரு ஆஸ்பத்திரி கட்டுறதா கேள்விப்பட்டேன். பேசாம கம்பவுண்டரா போகலாம்.

அந்த மூன்று உச்ச நடிகர்களும், சந்திரபாபுவிடம் இருந்து விலகிச்செல்ல காரணமாக அமைந்தது இந்த பேட்டி தான்.

மிகப்பெரிய போராட்டத்துக்கு பின் திரையுலகுக்கு வந்த சந்திரபாபு, மிக குறுகிய காலத்தில் அளப்பரிய சாதனைகள் செய்துவிட்டு இறந்துபோனவர். தமது சொந்த வாழ்க்கையின் ஆறாத சோகங்களை மறைத்துக்கொண்டு மக்களை சிரிக்கவைத்த மகத்தான கலைஞர். சற்றும் நம்பமுடியாத அதிரடி கருத்துக்களை அடிக்கடி வெளியிட்டு, திரையுலகினரை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்கியவர்.

ஆனால் சந்திரபாபு பேசியதெல்லாம் சத்தியம். அந்த காலத்து முன்னணி கலைஞர்கள் பலருடனான தமது கசப்பான அனுபவங்களை சந்திரபாபுவே பல்வேறு தருணங்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். அவர்களெல்லாம் அவரது கண்ணீரை அதிகமாக்கியவர்கள்.

பதிலுக்கு சந்திரபாபு வெளிப்படுத்தியது புன்னகை மட்டுமே.


தகவல்கள்: 'கண்ணீரும் புன்னகையும்' புத்தகம், கிழக்கு பதிப்பகம்

விவசாயி கண்டுப்பிடித்த எலுமிச்சை ரகம்!


திருநெல்வேலி மாவட்டம், புளியங்குடி அந்தோணிசாமி என்ற எலுமிச்சை ரகம் ஒன்றை கண்டுப்பிடித்துள்ளார்

 ‘‘நான் பார்த்தவரை எலுமிச்சை ரகங்கள் வறட்சியைத் தாக்குப் பிடிக்க முடியாமலும், எளிதில் பட்டுப் போறதாகவும் இருந்துச்சு. 45 வருஷமா எலுமிச்சை சாகுபடி பண்ணிட்டு இருக்கேன். அந்த அனுபவத்தில கொத்துக்கொத்தா காய்க்குற நாட்டு எலுமிச்சையில 13 ரகங்களைத் தேர்ந்தெடுத்தேன். அதுல இருந்து ஒண்னை எடுத்துதான் இந்த புதிய ரகத்தை உருவாக்கினேன். இது இரண்டே வருஷத்துல காய்ப்புக்கு வந்துடுது."



 இதை மதுரை சேவா அமைப்பைச் சேர்ந்த விவேகானந்தன் அகமதாபாத்துல இருக்கற ‘தேசிய அடிமட்ட கண்டுபிடிப்பாளர்கள் சங்க’த்துக்கு அனுப்பி வெச்சாரு. அவுங்க இதைப் பல கட்டமா சோதிச்சுப் பாத்தப்ப, இந்த ரகத்துல எல்லா காய்களும் ஒரே சீரா இருந்ததைப் பாத்து பிரமிச்சுப் போயிட்டாங்களாம்’’ என்கிறார் அந்தோணி சாமி!

 விவசாயப் பல்கலைக்கழகங்களும் ஆராய்ச்சி நிலையங்களும் லட்சக்கணக்கில் செலவு செய்து, அவ்வப்போது புதிய ரகப்பயிர்களை அறிமுகப்படுத்தி வருவது வழக்கம். ஆனால், சில விவசாயிகள், தங்களுடைய அனுபவத்தை வைத்தே, பெரிதாக செலவேதும் இல்லாமல், புதுப்புது ரகங்களை சர்வசாதாரணமாக உருவாக்கி விடுவதுண்டு.

 இத்தகைய ரகங்களுக்கு முன்பாக... விஞ்ஞானிகளின் ரகங்கள் ஈடுகொடுக்க முடியாமல் போய்விடுவதும் உண்டு. அந்தவகையில், ‘புளியங்குடி’ அந்தோணிசாமி உருவாக்கியுள்ள புதிய ரக எலுமிச்சையை, தென் மாவட்ட விவசாயிகள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுறார்கள். காரணம், குறுகிய காலத்தில், இரசாயன உரம் இல்லாமல் நல்ல விளைச்சல் கொடுக்கிறது.

 பசுமை விகடன் இதழிலிருந்து....

இந்தியாவின் எடிசன் - விஞ்ஞானி ஜி.டி.நாயுடு


‘அறிவியல் கண்டுபிடிப்பு’, ‘விஞ்ஞானி’ போன்ற வார்த்தைகள் எல்லாம் மேலை நாடுகளுக்குத்தான் சொந்தம் என்ற நம் பிம்பத்தை மாற்றிப் போடக் கூடியது ஜி.டி.நாயுடுவின் வரலாறு. இந்தியாவுக்கே உரித்தான பல பயன்பாட்டுக் கருவிகளையும் உலகமே பயன்படுத்தும் சில இன்றியமையாத கருவிகளையும் உருவாக்கிய இவர், ‘படிக்காத மேதைகள்’ பட்டியலில் முதலிடம் வகிக்கிறார். கோவை மாவட்டத்தில் கலங்கல் என்ற கிராமத்தில் 1893ம் ஆண்டு மார்ச் 23ம் தேதி பிறந்தார் ஜி.டி.நாயுடு. இவரது முழுப்பெயர், கோபால்சாமி துரைசாமி நாயுடு. சிறு வயதிலேயே தந்தையை இழந்தார். உறவினர்கள் வீட்டில் வளர்ந்ததால் சரியாகப் படிக்க முடியவில்லை. இளம் வயதில் ஜி.டி.நாயுடு ஒரு மோட்டார் கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார்.

அந்த ஊதியத்தை சேமித்து, நண்பர்களிடமும் கொஞ்சம் கடன் பெற்று, திருப்பூரில் ஒரு பருத்தித் தொழிற்சாலையைத் தொடங்கினார். தன் அபரிமிதமான வர்த்தகத் திறமையால் குறுகிய காலத்திலேயே திருப்பூரில் விரல் விட்டு எண்ணக்கூடிய லட்சாதிபதிகளில் ஒருவரானார். ஆனால், விரைவிலேயே அந்தத் தொழிலில் நஷ்டமடைந்து அனைத்தையும் இழந்தார். அதன்பின் போக்குவரத்துத் துறையில் நாட்டம் செலுத்தி, ‘யுனைடெட் மோட் டார் சர்வீஸ்’ என்ற நிறுவனத்தைத் துவங்கினார். அப்போதே தன் தொழிலுக்குத் தேவைப்பட்ட சில கருவிகளை வடிவமைக்க ஆரம்பித்துவிட்டார் நாயுடு. அவருடைய பேருந்துகள் வந்து புறப்படும் நேரத்தைக் காட்டும் கருவி ஒன்றைக் கண்டு பிடித்து பேருந்து நிலையங்களில் வைத்தார்.

பயணச்சீட்டுகள் வழங்குவதற்கு அந்தக் காலத்திலேயே ஒரு இயந்திரத்தைத் தயா ரித்துப் பயன்படுத்தினார். மோட்டார் ரேடியேட் டருக்கு இணையான ஒரு இயந்திரத்தைக் கண்டுபிடித்ததன் மூலம், ரேடியேட் டருக்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற வேண்டிய அவசியம் அவருடைய பேருந்துகளுக்கு இருந்ததில்லை.
மேலும் பழச்சாறு பிழிந்தெடுக்க கருவி, இன்றைய நவீன முகச்சவர பிளேடு போன்றவை நாயுடுவின் கண்டுபிடிப்புகளே. அது மட்டுமல்லாமல், விதையில்லா நார்த்தங்காய், ஆரஞ்சு, 39 கதிர்கள் விளையும் பிரமாண்ட சோளச்செடி என இவரின் தாவர ஆராய்ச்சிகள் அமெரிக்கர்களையே பிரமிக்க வைத்தன. ஜெர்மானியர்கள் இவரது அதிசய பருத்திச் செடிக்கு ‘நாயுடு காட்டன்’ என்றே பெயர் சூட்டி ஏற்றுக் கொண்டனர்.

காப்புரிமை பிரச்னையில் விஞ்ஞானிகள் பலர் குழாயடிச் சண்டை போட்டுக் கொண்டிருந்த அந்தக் காலத்தில், தான் கண்டுபிடித்தவற்றை தன் பெயரில் பதிவு செய்யாமல் அனைத்து இந்தியர்களும் அவற்றை இலவசமாக பயன்படுத்தலாம் என்று பகிரங்கமாக அறிவித்தார் நாயுடு. தன்னைப் போல் தாய்நாட்டின் இளைஞர்கள் எல்லோரும் தொழில் நிபுணர்களாக உருவெடுக்க வேண்டும் என்ற நோக்கில் பாலிடெக்னிக் மற்றும் பொறியி யல் கல்லூரிகளைத் துவங்கினார் ஜி.டி.நாயுடு. வாழ்நாள் முழுவதும் சாதனை நாயகனாகத் திகழ்ந்த ஜி.டி.நாயுடு, 1974ம் ஆண்டு ஜனவரி 4ம் தேதி மரணமடைந்தார். பெயர், புகழுக்காக விஞ்ஞானிகள் ஆனவர்கள் மத்தியில், விஞ்ஞானியாகவே பிறந்தவர் இவரென்று அடித்துச் சொல்லலாம்.

இ மெயில் - கண்டுபிடித்தது ஒரு தமிழன் (Email founded by a Tamilian)


 நியூயார்க்: இந்தியாவால் வெளியேற்றப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட தமிழ் விஞ்ஞானி சிவா அய்யாதுரையை வட அமெரிக்கத் தமிழர் பேரவையான பெட்னா சிறப்பித்து கவுரப்படுத்தியிருக்கிறது.
இப்போதெல்லாம் 'மெயில்' வந்துருக்கு ன்னு வீட்டிலே யாரும் சொன்னால் அது தபாலில் வந்த மெயில் என்ற எண்ணம் வருவதில்லை. 'மெயில்' என்றால் ‘இமெயில்' தான் என்று ஆகிவிட்டது. ஃபேஸ்புக், டுவிட்டர் என வெவ்வேறு பரிமாணங்களில் தகவல் தொழில் நுட்பம் முன்னேற்றம் கண்டாலும், இமெயில் எனபது அன்றாட செயல்களில் முக்கிய அம்சமாகிவிட்டது. தற்போதைய வாழ்க்கை முறையையே மாற்றிப் போட்டுவிட்டது.
முதன் முதலாக இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo ("To:", "From:", "Subject:", "Bcc:", "Cc:", "Date:", "Body:"), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.) அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவல் பரிமாற்றத்தை கண்டு பிடித்தவர் அமெரிக்க நியூ ஜெர்ஸி மாகாணத்தில் வசித்து வந்த 14 வயதே நிரம்பிய வி.ஏ. சிவா அய்யாதுரை என்ற தமிழ்க் குடும்பத்தை சார்ந்த மாணவன்.
ஆனால், குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ, அவருக்கு அந்த அங்கீகாரத்தை கொடுக்காமல், இமெயில் உரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர்.
நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறையாக வி.ஏ. சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இமெயில்' ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இன்றோடு சரியாக முப்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை ஒட்டி, டாக்டர். வி.ஏ. சிவா அய்யாதுரை 'இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ்' என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ளார்.

நியூ ஜெர்ஸி மாகாணம் நேவார்க் நகரில் இந்த நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. அதன் சார்பில், நேவார்க் நகர உயர் நிலைப்பள்ளி மாணவர்களை புதிய கண்டுபிடிப்புகளுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத்தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாதுரை.
மாணவனாக இருந்த போது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பல்வேறு சோதனைகளுக்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்த சோகம் நேரக்கூடாது என்பதற்காகவும், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில்களை தொடங்கும் வகையிலும் இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணையாக இருக்கும் என்றார்.

பல தொழில்களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய்யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலைக் கழகமான எம்.ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார். சமீபத்தில் நடந்த வட அமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா) வெள்ளிவிழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப் பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது ‘இமெயில்' பயணத்தை http://www.inventorofemail.com/
தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

இந்தியாவில் அவமதிப்பு:
                                                     இதே சிவா அய்யாதுரையை மத்திய அரசின் அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 2008-ம் ஆண்டு டெல்லிக்கு அழைத்தது. அவரும் இந்திய அரசின் அழைப்பை ஏற்று டெல்லியில் வந்து பணியாற்றினார். ஆனால் மத்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத் தலைவரை விமர்சித்தார் என்று கூறி அவரை இதர விஞ்ஞானிகள் பேசுவதற்கு தடை விதிக்கப்பட்டது. அவருக்கான இணைய தொடர்பும் துண்டிக்கப்பட்டது. ஒருகட்டத்தில் அவர் தங்கியிருந்த அரசு வீட்டிலிருந்தே வெளியேறவும் உத்தரவிடப்பட்டது.
இப்படி இந்தியா அவமதித்த அய்யாதுரைதான் பெட்னா மாநாட்டில் சிறப்பிக்கப்பட்டிருக்கிறார

மீட்டருக்கு மேல் வாழ்த்துகிறோம்!


 'மீட்டருக்கு மேல் எக்ஸ்ட்ரா ஏதாவது போட்டு வாங்க முடியுமா?' என்று பரபரக்கும் ஆட்டோக்காரர் களுக்கு மத்தியில்... முதியோர், ஊனமுற்றோர்,பார்வையற்றோர் உள்ளிட்டோருக்கு இலவசமாகவே ஆட்டோ ஓட்டி சேவை
செய்துகொண்டிருக்கிறார் 27 வயது இளைஞரான பஞ்சதுரை!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஏரியாவில் அவரை சந்தித்தோம். வெகுளித்தனமாகவே
பேசினார். ''பக்கத்துல இருக்கிற புத்தூருதான் எனக்கு சொந்த ஊரு. சின்ன வயசுலருந்தே நம்மால முடிஞ்சவரைக்கும் அடுத்தவங்களுக்கு உதவியா இருக்கணும்னு நெனப் பேன். அந்த நெனப்புத்தான் இப்ப என்னை இங்க கொண்டாந்து நிறுத்தியிருக்கு.
ஆரம்பத்துல முறுக்கு யாவாரம்தான் பாத்தேன். அது கையைக் கடிச்சிருச்சு. அதுக்கப்புறம் என் பொண்டாட்டியோட நகைகளை அடமானம் வெச்சு அப்புடி இப்புடி புரட்டி இந்த 'ஷேர் ஆட்டோ'வை வாங்குனேன்.

'எந்தத் தொழில் செஞ்சாலும் அதால நாலு பேருக்கு நன்மை இருக்க ணும்'னு எங்க அம்மா அடிக்கடி சொல்லும். அந்த சொல்படிதான், இயலாதவங்களுக்கு மட்டும் கடந்த ஏழு வருஷமா இலவச ஆட்டோ சேவையை செஞ்சுக் கிட்டு இருக்கேன். இது ஒண்ணும் பெரிய சாதனை இல்லைங்க... ஏதோ என்னால முடிஞ்சது...'' என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, அங்கு வந்த டிராஃபிக் போலீஸ்காரர் ஒருவர், ''ஏய்... இங்கெல்லாம் நிப்பாட்டக் கூடாது. வண்டிய எட்ரா...'' என்று அனல்
வீச்சாக வார்த்தைகளைக் கொட்டிவிட்டுச் சென்றார். வண்டியை இன்னொரு இடத்துக்கு நகர்த்திச் சென்று நிறுத்திய பஞ்சதுரை, ''நான் படிச்சது ஆறாப்புதாங்க. ஆனாலும், என் வாயிலருந்து இதுவரை ஒரு கெட்ட வார்த்தைகூட வந்ததில்லை... படிச்ச போலீஸ்காரர் எம்புட்டு மரி யாதையா(!) பேசிட்டுப் போறாரு பாத்தீங்களா..? என்னைப் பற்றி தெரிஞ்ச பல போலீஸ்காரங்க எந்த இடத் துல பாத்தாலும், 'வாப்பா துரை... கூல் டிரிங்க்ஸ் சாப்பு டுறீயா?'ன்னு கேக்குறாங்க. அவங்களுக்கு மத்தியில் இப்படியும் ஒரு ஆளு. இதுமட்டுமா..? நான் இலவச சேவை செய்றதால ஆட்டோ ஸ்டாண்டுல எனக்கு டமில்லைன்னுட்டாங்க. அதுவும் நல்லதுதான். சும்மா ஒரே இடத்துல
நின்னுக்கிட்டு வெட்டி அரட்டை பேசிக்கிட்டு இருக்கதுக்கு நம்மபாட்டுக்கு சுத்திக்கிட்டே இருந்தோம்னா ஏதோ, முடியாத நாலு பேருக்கு உதவலாம் பாருங்க...'' என்று நிறுத்தினார்.

இவரது ஆட்டோவில் சல்லிக்காசு செலவில்லாமல் தினமும் சவாரி செய்யும் முதியவர்களான கமால் பாட்ஷா, சுப்பிரமணியன், மாயாண்டி ஆகியோர் நம்மிடம், ''நாங்க எல்லாருமே நித்தப் பொழப்புக்காக தினமும் உசிலம்பட்டிக்கு வந்து போறவங்க. ஒதவி ஒத்தாசைன்னா சொந்தப் புள்ளைககூட உதவாதுக. ஆனா இந்தத் தம்பி, எங்களை காலையிலயும் சாயந்த
ரமும் கூட்டிட்டுப் போயி கூட்டியாந்து விடுது. 'ஒரு அஞ்சு ரூபாயாச்சும் வங்கிக்கப்பா...'ன்னா கேக்க மாட்டேங்குது. மொத்தத்துல, தம்பியோட ஆட்டோ தான் இப்ப எங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் மாதிரி!'' என்றனர்.

''இவர் இப்படி இருந்தால் வீட்டுச் செலவை எப்படி சமாளிக்கிறீர்கள்?'' என்று பஞ்சதுரையின் மனைவியை சந்தித்துக் கேட்டோம். அதற்கு, ''வாட கைக்கு ஆட்டோ
ஓட்டுனா ஓனருக்கு வாடகைப் பணம் குடுப்போம்ல... அந்தக் காசு மக்களுக்கு பயன்படுதுன்னு நெனச்சுக்க வேண்டியதுதான்!'' - கணவரைக் காட்டிலும் மிகுந்த
அர்ப்பணிப்பு உணர்வோடு பேசினார் அவரது மனைவி ஜோதி லட்சுமி! அவரை பெருமையோடு ஏறிட்ட பஞ்சதுரை, ''நாலு பெரியவங்கள இலவசமா ஆட்டோ வுல கூட்டிட்டுப் போயி இறக்கி விடுறப்ப, 'நீ மகராசனா இருப்பே...'ன்னு வாழ்த்துறாங்களே... அதுக்கு முன்னாடி
பணங்காசெல்லாம் தூசுங்க...'' என்றார். பெயரில்தான் பஞ்சமெல்லாம்... மனசால் கோடீஸ்வரர்!

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More