உங்களுக்கு கூகிளின் ஆட்சென்ஸ் செக் வரப்போகிறதா?

கூகிளின் ஆட்சென்ஸ் விளம்பரங்களை வலைப்பூவில் இணைத்து அதன் மூலம் பணம் சம்பாதிப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உங்களின் ஆட்சென்ஸ் கணக்கில் இந்த மாதம் 100 டாலர் சேர்ந்திருந்தால் அதனை அடுத்த மாதம் கடைசி வாரத்தில் காசோலையாக (Adsense Cheque) அனுப்புவார்கள். எப்படியும் மாத இறுதியான 23 – 27 ந்தேதிக்குள் அனுப்பி விடுவார்கள். சரி ஆட்சென்ஸ் செக் உங்கள் கைக்கு எப்போது வரும், எப்படி வரும் என்று புதியவர்கள் அறிந்து கொள்ள சில டிப்ஸ்கள் இங்கே.

• முதலில் ஆட்சென்ஸ் கணக்கில் நுழைந்தவுடனே மேல்பகுதியில் Finalized Earnings என்பதில் இந்த மாதம் செக் போடப்பட்டு விட்ட்தா என உடனடியாகத் தெரிந்து கொள்ளலாம். போடப்பட்டிருந்தால் Most Recent Payment என்றும் கீழே தேதியும் இருக்கும். மேலே சொன்ன மாதிரி பெரும்பாலும் 24 – 27 ந்தேதிக்குள்தான் செக் போடப்படும்.

• அடுத்து Finalized Earnings->Details என்பதைக் கிளிக் செய்யவும். இல்லை இட்துபுறத்தில் Payments என்பது வழியாகவும் செல்ல்லாம். அதில் உங்களுக்கு இதுவரை அனுப்பிய ஆட்சென்ஸ் காசோலைகளின் விவரம் இருக்கும். அதில் கடைசியாகப் பார்த்தால் Payment Issued என்றிருக்கும். அதனருகே Details என்பதைக் கிளிக் செய்தால் அனுப்பப் பட்ட செக்கின் விவரங்கள் இருக்கும்.

• உங்கள் பணம் டாலரில் மற்றும் ருபாயில் Payment Type, Date மற்றும் Payment Number போன்ற விவரங்கள் குறிப்பிட்டிருப்பார்கள்.இந்த Payment Number ஐ காப்பி செய்து பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்.

• அட்சென்ஸ் செக் இந்தியாவில் ஹைதராபாத் தலைமையகத்திற்கு வந்து சேர தோராயமாக 10-15 நாள்கள் எடுத்துக் கொள்ளலாம். பின்னர் நகர்ப்புறத்தில் வசிப்பவர்களுக்கு DHL/Bluedart கொரியர் மூலமும் கிராமத்தில் வசிப்பவர்களுக்கு சாதாரண தபால் மூலம் வழங்கப் படும்.

• நீங்கள் நகர்ப்புறத்தில் வசிப்பவராயின் Bluedart இணையதளத்தில் சென்று Track your Shipment பகுதியில் Ref No வட்டத்தைக் கிளிக் செய்யவும். பின்னர் அந்த கட்டத்தில் உங்களின் Payment Number இல் பூஜ்யத்தை எடுத்துவிட்டுஅடித்தால் அவர்கள் உங்கள் செக்கை எடுத்துக் கொண்ட விவரங்கள் கிடைக்கும். அதில் Pickup date, From, To, Status, Date of Delivery போன்றவை இருக்கும்.





• உங்கள் செக் வந்து கொண்டிருந்தால் Status – In Transit என்றும் வந்து சேரும் தேதியும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் WayBill No என்று ஒரு எண் இருக்கும்,அதை மறக்காமல் குறித்துக் கொள்ளுங்கள். அவர்கள் இன்னும் ஹைதராபாத்தில் செக் எடுக்காவிடில் எந்த விவரமும் வராது. அதனால் செக்வரப்போகும் மாதத்தின் 4ம் தேதி முதல் 12 ந்தேதிக்குள் வரை தினமும் இதனை ஒருமுறை வந்து பார்த்துக் கொள்ள வேண்டும்.

• Bluedart தளத்தில் செக் எடுக்கப்பட்டிருந்தால் Email Alert வசதியிருக்கிறது. அவர்கள் உங்கள் வீட்டிற்கு வந்து கொடுத்துவிட்டால் உங்களுக்கு மின்னஞ்சல் வந்துவிடும் மற்றும் உங்கள் Waybill Status இல் எப்போது யாரிடம் கொடுத்தார்கள் என்று அப்டேட் செய்து விடுவார்கள்.

• சரி வீட்டிற்கு வரும் போது யாரும் வீட்டில் இல்லை அல்லது அவர்களால் உங்கள் வீட்டு முகவரியைக் கண்டுபிடிக்க முடியாமல் போனால் என்ன ஆகும்? அந்த நிலையை நமது WayBill Status இல் ஏற்றிவிடுவார்கள்.

• சில நேரம் அவர்கள் மறுபடியும் அடுத்த நாள் வந்து கொடுக்க வாய்ப்பிருக்கிறது. எத்தனை நாள் அவர்கள் வைத்திருப்பார்கள் என்று தெரியவில்லை. அப்படி நீங்கள் தவறவிட்டு விட்டால் தயங்காமல் உடனடியாகBluedart இணையதளத்தில் Contact பகுதிக்குச் சென்று உங்கள் ஊரின் Customer Care எண்ணைக் கண்டறிந்து உங்கள் WayBill Number ஐச் சொல்லுங்கள். உங்கள் செக்கினை மறுபடியும் கொண்டுவருவதாகச் சொன்னால் சந்தோசப்படுங்கள். இல்லையெனில் நீங்களே எதேனும் உங்கள் பெயருள்ள அடையாள அட்டையை எடுத்துச் சென்று வாங்கிவிடுங்கள்.

• நீங்கள் கிராமப்புறத்தைச் சேர்ந்தவராயின் உங்கள் பகுதியில் DHL/Bluedart வராமல் இருந்தாலும் உங்களுக்கு ஆட்சென்ஸ் செக் சாதாரண தபாலில் தான் வரும். அதனால் செக் வந்து சேர Payment Issued தேதியிலிருந்து ஒரு மாதம் கூட ஆகலாம். பொறுமையாக காத்திருங்கள்.

இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?


·         உலகின் இரண்டாவது நீளமான் கடற்கரையான மெரினாவை வடிவமைத்து பெயர் சூட்டியவர் யார்?
            விடை கிரண்ட்டப்

·         இதயத்தில் எதனை அறைகள் உள்ளன?
விடை:  4

·         பயணித்த தூரத்தை அறிய வாகனங்களில் பயன்படுத்தப்படும் கருவி எது?
விடை: ஓடோமீட்டர்

·         இந்திய தேசிய காலெண்டரின் படி புத்தாண்டு என்று தொடங்குகிறது?
விடை: மார்ச் 21

·         மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?
விடை: கிவி


·         உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது?
விடை: அக்டோபர் 1

·         அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?
விடை: தண்ணீர்

·         உலக சுற்றுச்சூழல் தினம் எப்போது கடைபிடிக்கப்படுகிறது?
விடை: ஜூன் 5

·         பஞ்ச தந்திர கதைகளை எழுதியவர் யார்?
விடை: விஷ்ணு சர்மா

·         ஈக்களின் சுவை உணர் உறுப்பு எது?
விடை: நாக்கு

புளுடூத் - பெயர் காரணம் (Name reason for Bouetooth) :


புளுடூத் - பெயர் காரணம் (Name reason for Bouetooth) :
இன்று பலர் Bluetooth உபயோகிக்கிறோம்  Bluetooth தொழில்நுட்பம் செயல்படும் விதத்திற்கும் இந்த பெயருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நார்டிக் நாடுகள் என அழைக்கப்படும் Denmark, Sweeden, Norway மற்றும் Finland நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த தொழில்நுட்பத்தை உருவாக்கினார்கள்.

இவர்களுக்கு சரித்திரத்தில் புகழ் பெற்ற Denmark அரசர் ஹெரால்ட் புளுடூத் மீது அசாத்திய மரியாதையும் பிரியமும் இருந்தது. அவரின் நினைவாகவே இந்த தொழில் நுட்பத்திற்கு புளுடூத் எனப் பெயரிட்டனர்.

இவர் 900 ஆண்டில் டென்மார்க்கை ஆண்டு வந்தார். டென்மார்க்கையும், Norway நாட்டின் ஒரு பகுதியையும் இணைத்தார். பின்னர் கிறித்தவ மதத்தை தன் நாட்டில் அறிமுகப்படுத்தினார். தன்னுடைய பெற்றோர் நினைவாக ஜெல்லிங் ரூன் ஸ்டோன் என்னும் நினைவுச் சின்னத்தினை உருவாக்கினார். 986ல் தன் மகனுடன் ஏற்பட்ட போரில் மரணமடைந்தார். நாடுகளை இணைத்தது கிறித்தவ மதத்தினை அறிமுகப்படுத்தியது, நினைவுச் சின்னம் அமைத்தது போன்ற செயல்களால் புகழடைந்தார்.

காதல் கவிதைகள்


நீ
உன் முகச்சுளிபாலும்
சிறு முறைப்பாலும்
உன் கோபத்தை வெளிப்படுத்துகிறாய்
ஆதுவோ,
உன் அழகை வெளிபடுத்துகிறது
ஆம்
அன்பே - நீ
கொஞ்சும் போது
ரொம்ப ஆழகு
கோவப்பட்டால்
இன்னும் ஆழகு!

கவிதை பூங்கா

புகைப்படம் 


இறந்த காலத்தின்
உயிரோட்டமுள்ள
நிகழ்வுகளை
நிகழ் காலத்தில்
நிஜமாய் காட்டும்
நிழல்!

காதல் கவிதைகள்













நகைச்சுவைகள்

கோபு-எங்கம்மாவுக்கு சர்க்கரை வியாதி இருப்பது என் மனைவிக்கு இன்னும் தெரியாது..

நண்பன்-தெரிஞ்சா கவலைப் படுவாங்களா..?

கோபு-இல்லே.. தினம் ஒரு ஸ்வீட் செஞ்சு வெறுப்பேத்துவா...!

***************

வித்வான் : நேத்து என் கச்சேரிக்கு வருவீங்கன்னு எதிர்பார்த்தேன்.

நம்மவர் : வரனுணும்னுதான் சார் நினைச்சேன்.அதுக்குள்ள வேறொரு கஷ்டம் வந்திருச்சி!.

***************

பக்கத்துவீட்டுகாரர்-வீட்ல எப்பவும் சிரிப்பு சத்தம் கேக்குதே? 

ராமு-மனைவி என் மேல பாத்திரத்த தூக்கி போடுவா. 
மேல படலேன்னா நான் சிரிப்பேன், பட்டதுன்னா அவள் சிரிப்பா.

***************

கணவன் - அம்மாவுக்கு உடம்பு சரியில்லையாம். பணம் அனுப்ப சொல்லி, லெட்டர் போட்டிருக்காங்க.

மனைவி - சுக்கு காய்ச்சி குடிக்கச் சொல்லுங்க எல்லாம் சரியாப் போய்டும்.

கணவன் - ஓகே அப்படியே உங்கம்மாவுக்கு எழுதிப் போட்டுகிறேன்.








Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More